திருப்புகழ் 1237 கோகனகமுகிழ்த்த (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1237 Koganagamugizhththa

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தனன தத்த தான தனன தத்த
தான தனன தத்த – தனதான

கோக னகமு கிழ்த்த போக புளகி தத்த
கோடு தலைகு லைத்த – முலையாலே

கூட வரவ ழைக்கு மாடு குழைய டர்த்த
நீடி யகுவ ளைக்கண் – மடமானார்

ஆக முறவ ணைத்து காசை யபக ரித்து
மீள விதழ்க டிப்ப – தறியாதே

ஆசை யதுகொ ளுத்து மால மதுகு டித்த
சேலில் பரித விப்ப – தினியேனோ

மாக நதிம திப்ர தாப மவுலி யர்க்கு
சாவி யதுவோ ரர்த்த – மொழிவோனே

வாகு வலைய சித்ர ஆறி ருபுய வெற்பில்
வாழ்வு பெறுகு றத்தி – மணவாளா

வேக வுரக ரத்ந நாக சயன சக்ர
மேவி மரக தத்தின் – மருகோனே

வீசு திரைய லைத்த வேலை சுவற வெற்றி
வேலை யுருவ விட்ட – பெருமாளே.

பதம் பிரித்தது

தான தனன தத்த தான தனன தத்த
தான தனன தத்த – தனதான

கோகனகம் முகிழ்த்த போக(ம்) புளகிதத்த
கோடு தலை குலைத்த – முலையாலே

கூட வர அழைக்கு(ம்) மாடு குழை அடர்த்த
நீடிய குவளைக் கண் – மடமானார்

ஆகம் உற அணைத்து காசை அபகரித்து
மீள இதழ் கடிப்பது – அறியாதே

ஆசை அது கொளுத்தும் ஆலம் அது குடித்த
சேலில் பரிதவிப்பது – இனி ஏனோ

மாக நதி மதி ப்ரதாப மவுலியர்க்கு
உசாவியது ஓர் அர்த்தம் – மொழிவோனே

வாகுவலைய(ம்) சித்ர ஆறு இரு புய வெற்பில்
வாழ்வு பெறு குறத்தி – மணவாளா

வேக உரக ரத்ந நாக சயன சக்ரம்
ஏவி மரகதத்தின் – மருகோனே

வீசு திரை அலைத்த வேலை சுவற வெற்றி
வேலை உருவ விட்ட – பெருமாளே.

English

kOka nakamu kizhththa pOka puLaki thaththa
kOdu thalaiku laiththa – mulaiyAlE

kUda varava zhaikku mAdu kuzhaiya darththa
needi yakuva LaikkaN – madamAnAr

Aka muRava Naiththu kAsai yapaka riththu
meeLa vithazhka dippa – thaRiyAthE

Asai yathuko Luththu mAla mathuku diththa
sElil paritha vippa – thiniyEnO

mAka nathima thipra thApa mavuli yarkku
sAvi yathuvo rarththa – mozhivOnE

vAku valaiya chithra ARi rupuya veRpil
vAzhvu peRuku Raththi – maNavALA

vEka vuraka rathna nAka sayana chakra
mEvi maraka thaththin – marukOnE

veesu thiraiya laiththa vElai suvaRa vetRi
vElai yuruva vitta – perumALE.

English Easy Version

kOkanakam mukizhththa pOka(m) puLakithaththa
kOdu thalai kulaiththa -mulaiyAlE

kUda vara azhaikku(m) mAdu kuzhai adarththa
neediya kuvaLaik kaN – madamAnAr

Akam uRa aNaiththu kAsai apakariththu
meeLa ithazh kadippathu – aRiyAthE

Asai athu koLuththum Alam athu kudiththa
sElil parithavippathu – ini EnO

mAka nathi mathi prathApa mavuliyarkku
usAviyathu Or arththam – mozhivOnE

vAkuvalaiya(m) chithra ARu iru puya veRpil
vAzhvu peRu kuRaththi – maNavALA

vEka uraka rathna nAka sayana sakram
Evi marakathaththin – marukOnE

veesu thirai alaiththa vElai suvaRa vetRi
vElai uruva vitta – perumALE.