Thiruppugal 1238 Sandhampunaindhu
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தந்தந் தனந்த தந்தந் தனந்த
தந்தந் தனந்த – தனதான
சந்தம் புனைந்து சந்தஞ் சிறந்த
தண்கொங் கைவஞ்சி – மனையாளுந்
தஞ்சம் பயின்று கொஞ்சுஞ் சதங்கை
தங்கும் பதங்க – ளிளைஞோரும்
எந்தன் தனங்க ளென்றென்று நெஞ்சி
லென்றும் புகழ்ந்து – மிகவாழும்
இன்பங் களைந்து துன்பங்கள் மங்க
இன்றுன் பதங்கள் – தரவேணும்
கொந்தின் கடம்பு செந்தண் புயங்கள்
கொண்டங் குறிஞ்சி – யுறைவோனே
கொங்கின் புனஞ்செய் மின்கண்ட கந்த
குன்றம் பிளந்த – கதிர்வேலா
ஐந்திந் த்ரியங்கள் வென்றொன்று மன்பர்
அங்கம் பொருந்து – மழகோனே
அண்டந் தலங்க ளெங்குங் கலங்க
அன்றஞ் சலென்ற – பெருமாளே.
பதம் பிரித்தது
தந்தந் தனந்த தந்தந் தனந்த
தந்தந் தனந்த – தனதான
சந்தம் புனைந்து சந்தஞ் சிறந்த
தண்கொங்கை வஞ்சி – மனையாளும்
தஞ்சம் பயின்று கொஞ்சுஞ் சதங்கை
தங்கும் பதங்கள் – இளைஞோரும்
எந்தன் தனங்கள் என்றென்று
நெஞ்சிலென்றும் புகழ்ந்து – மிகவாழும்
இன்பங் களைந்து துன்பங்கள் மங்க
இன்றுன் பதங்கள் – தரவேணும்
கொந்தின் கடம்பு செந்தண் புயங்கள்
கொண்டு அங் குறிஞ்சி – யுறைவோனே
கொங்கின் புனஞ்செய் மின்கண்ட கந்த
குன்றம் பிளந்த – கதிர்வேலா
ஐந்து இந்த்ரியங்கள் வென்று ஒன்றும் அன்பர்
அங்கம் பொருந்தும் – அழகோனே
அண்டந் தலங்கள் எங்குங் கலங்க
அன்று அஞ்சலென்ற – பெருமாளே.
English
sandham punaindhu sandham siRandha
thaN kongai vanji – manaiyALun
thanjam payindru konjum sadhangai
thangum padhangaL – iLainyOrum
endhan dhanangaL endrendru nenjil
endrum pugazhndhu – migavAzhum
inbam kaLaindhu thunbangaL manga
indrun padhangaL – tharavENum
kondhin kadambu senthaN buyangaL
koNdang kuRinji – uRaivOnE
kongin punansey minkaNda kandha
kundRam piLandha – kadhirvElA
aindh indhriyangaL vendrendrum anbar
angam porundhum – azhagOnE
aNdan thalangaL engum kalanga
andranjal endra – perumALE.
English Easy Version
sandham punaindhu sandham siRandha
thaN kongai vanji – manaiyALun
thanjam payindru konjum sadhangai
thangum padhangaL – iLainyOrum
endhan dhanangaL endrendru nenjil
endrum pugazhndhu – migavAzhum
inbam kaLaindhu thunbangaL manga
indrun padhangaL – tharavENum
kondhin kadambu senthaN buyangaL
koNdu ang kuRinji – uRaivOnE
kongin punansey minkaNda kandha
kundRam piLandha – kadhirvElA
aindh indhriyangaL vendrendrum anbar
angam porundhum – azhagOnE
aNdan thalangaL engum kalanga
andranjal endra – perumALE.