திருப்புகழ் 1239 சலமலம் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1239 Salamalam.

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தனத்த தத்த தனதன தனத்த தத்த
தனதன தனத்த தத்த – தனதான

சலமல மசுத்த மிக்க தசைகுரு தியத்தி மொய்த்த
தடியுடல் தனக்கு ளுற்று – மிகுமாயம்

சகலமு மியற்றி மத்த மிகுமிரு தடக்கை யத்தி
தனிலுரு மிகுத்து மக்க – ளொடுதாரம்

கலனணி துகிற்கள் கற்பி னொடுகுல மனைத்து முற்றி
கருவழி யவத்தி லுற்று – மகிழ்வாகிக்

கலைபல பிடித்து நித்த மலைபடு மநர்த்த முற்றி
கடுவினை தனக்குள் நிற்ப – தொழியாதோ

மலைமக ளிடத்து வைத்து மதிபுனல் சடைக்குள் வைத்து
மழுவனல் கரத்துள் வைத்து – மருவார்கள்

மடிவுற நினைத்து வெற்பை வரிசிலை யிடக்கை வைத்து
மறைதொழ நகைத்த அத்தர் – பெருவாழ்வே

பலதிசை நடுக்க முற்று நிலைகெட அடற்கை யுற்ற
படையது பொருப்பில் விட்ட – முருகோனே

பழுதறு தவத்தி லுற்று வழிமொழி யுரைத்த பத்தர்
பலருய அருட்கண் வைத்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தனத்த தத்த தனதன தனத்த தத்த
தனதன தனத்த தத்த – தனதான

சலமலம் அசுத்த மிக்க தசை குருதி யத்தி மொய்த்த
தடியுடல் தனக்குள் உற்று – மிகுமாயம்

சகலமு மியற்றி மத்தமிகும் இரு தடக்கை யத்தி
தனிலுரு மிகுத்து மக்களொடு – தாரம்

கலனணி துகிற்கள் கற்பி னொடுகுல மனைத்து முற்றி
கருவழி யவத்தி லுற்று – மகிழ்வாகி

கலைபல பிடித்து நித்தம் அலைபடும் அநர்த்த முற்றி
கடுவினை தனக்குள் நிற்ப – தொழியாதோ

மலைமகள் இடத்து வைத்து மதிபுனல் சடைக்குள் வைத்து.
மழுவனல் கரத்துள் வைத்து – மருவார்கள்

மடிவுற நினைத்து வெற்பை வரிசிலை யிடக்கை வைத்து
மறைதொழ நகைத்த அத்தர் – பெருவாழ்வே

பலதிசை நடுக்க முற்று நிலைகெட அடற்கை யுற்ற
படையது பொருப்பில் விட்ட – முருகோனே

பழுதறு தவத்தி லுற்று வழிமொழி யுரைத்த பத்தர்
பலருய அருட்கண் வைத்த – பெருமாளே.

English

salamala masuththa mikka thasaikuru thiyaththi moyththa
thadiyudal thanakku LutRu – mikumAyam

sakalamu miyatRi maththa mikumiru thadakkai yaththi
thaniluru mikuththu makka – LoduthAram

kalanaNi thukiRkaL kaRpi nodukula manaiththu mutRi
karuvazhi yavaththi lutRu – makizhvAkik

kalaipala pidiththu niththa malaipadu manarththa mutRi
kaduvinai thanakkuL niRpa – thozhiyAthO

malaimaka Lidaththu vaiththu mathipunal sadaikkuL vaiththu
mazhuvanal karaththuL vaiththu – maruvArkaL

madivuRa ninaiththu veRpai varisilai yidakkai vaiththu
maRaithozha nakaiththa aththar – peruvAzhvE

palathisai nadukka mutRu nilaikeda adaRkai yutRa
padaiyathu poruppil vitta – murukOnE

pazhuthaRu thavaththi lutRu vazhimozhi yuraiththa paththar
palaruya arutkaN vaiththa – perumALE.

English Easy Version

salamalam asuththa mikka thasai kuruthi yaththi moyththa
thadiyudal thanakkuL utRu – mikumAyam

sakalamu miyatRi maththamikum iru thadakkai yaththi
thaniluru mikuththu makkaLodu – thAram

kalanaNi thukiRkaL kaRpi nodukula manaiththu mutRi
karuvazhi yavaththi lutRu – makizhvAki

kalaipala pidiththu niththam alaipadum anarththa mutRi
kaduvinai thanakkuL – niRpathozhiyAthO

malaimakaL idaththu vaiththu mathipunal sadaikkuL vaiththu
mazhuvanal karaththuL vaiththu – maruvArkaL

madivuRa ninaiththu veRpai varisilai yidakkai vaiththu
maRaithozha nakaiththa aththar – peruvAzhvE

palathisai nadukka mutRu nilaikeda adaRkai yutRa
padaiyathu poruppil vitta – murukOnE

pazhuthaRu thavaththi lutRu vazhimozhi yuraiththa paththar
palaruya arutkaN vaiththa – perumALE.