திருப்புகழ் 1240 சாங்கரி பாடியிட (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1240 Sangkaripadiyida

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தாந்தன தானதன தாந்தன தானதன
தாந்தன தானதன – தனதான

சாங்கரி பாடியிட வோங்கிய ஞானசுக
தாண்டவ மாடியவர் – வடிவான

சாந்தம தீதமுணர் கூந்தம சாதியவர்
தாங்களு ஞானமுற – வடியேனுந்

தூங்கிய பார்வையொடு தாங்கிய வாயுவொடு
தோன்றிய சோதியொடு – சிவயோகந்

தூண்டிய சீவனொடு வேண்டிய காலமொடு
சோம்பினில் வாழும்வகை – அருளாதோ

வாங்குகை யானையென வீன்குலை வாழைவளர்
வான்பொழில் சூழும்வய – லயலேறி

மாங்கனி தேனொழுக வேங்கையில் மேலரிகள்
மாந்திய வாரணிய – மலைமீதிற்

பூங்கொடி போலுமிடை யேங்கிட வாரமணி
பூண்பன பாரியன – தனபாரப்

பூங்குற மாதினுட னாங்குற வாடியிருள்
பூம்பொழில் மேவிவளர் – பெருமாளே.

பதம் பிரித்தது

தாந்தன தானதன தாந்தன தானதன
தாந்தன தானதன – தனதான

சாங்கரி பாடியிட ஓங்கிய ஞானசுக
தாண்டவ மாடியவர் – வடிவான

சாந்தம் அதீதம் உணர் கூந்தம சாதியவர்
தாங்களு ஞானமுற – அடியேனும்

தூங்கிய பார்வையொடு தாங்கிய வாயுவொடு
தோன்றிய சோதியொடு – சிவயோகந்

தூண்டிய சீவனொடு வேண்டிய காலமொடு
சோம்பினில் வாழும்வகை – அருளாதோ

வாங்குகை யானையென ஈன்குலை வாழைவளர்
வான்பொழில் சூழும்வயல் – அயலேறி

மாங்கனி தேனொழுக வேங்கையில் மேல் அரிகள்
மாந்திய ஆரணிய – மலைமீதில்

பூங்கொடி போலும் இடை யேங்கிட ஆரமணி
பூண்பன பாரியன – தனபாரப்

பூங்குற மாதினுடன் ஆங்குறவாடி இருள்
பூம்பொழில் மேவிவளர் – பெருமாளே.

English

sAngkari pAdiyida vOngkiya nyAna suka
thANdava mAdiyavar – vadivAna

sAntham atheetham uNar kUnthama jAdhiyavar
thAngaLu nyAnamuRa – adiyEnum

thUngiya pArvaiyodu thAngiya vAyuvodu
thOndriya jOthiyodu – sivayOgam

thUNdiya jeevanodu vENdiya kAlamodu
sOmbinil vAzhum vagai – aruLAdhO

vAngukai yAnaiyena veenkulai vAzhai vaLar
vAnpozhil sUzhum vayal – ayalERi

mAnkani thEnozhuga vEngaiyil mElarigaL
mAndhiya AraNiya – malaimeedhil

pUnkodi pOlum idai Engida vAramaNi
pUNbana pAriyana – thanabArap

pUnkuRa mAdhinudan AnguRavAdi iruL
pUmpozhil mEvi vaLar – perumALE.

English Easy Version

sAngkari pAdiyida vOngkiya nyAna suka
thANdava mAdiyavar – vadivAna

sAntham atheetham uNar kUnthama jAdhiyavar
thAngaLu nyAnamuRa – adiyEnum

thUngiya pArvaiyodu thAngiya vAyuvodu
thOndriya jOthiyodu – sivayOgam

thUNdiya jeevanodu vENdiya kAlamodu
sOmbinil vAzhum vagai – aruLAdhO

vAngukai yAnaiyena veenkulai vAzhai vaLar
vAnpozhil sUzhum vayal – ayalERi

mAnkani thEnozhuga vEngaiyil mElarigaL
mAndhiya AraNiya – malaimeedhil

pUnkodi pOlum idai Engida vAramaNi
pUNbana pAriyana – thanabArap

pUnkuRa mAdhinudan AnguRavAdi iruL
pUmpozhil mEvi vaLar – perumALE.