திருப்புகழ் 1241 சிவஞான புண்டரிக (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1241 Sivanjanapundariga

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதான தந்ததன தனதான தந்ததன
தனதான தந்ததன – தனதான

சிவஞான புண்டரிக மலர்மாது டன்கலவி
சிவபோக மன்பருக – அறியாமற்

செகமீது ழன்றுமல வடிவாயி ருந்துபொது
திகழ்மாதர் பின்செருமி – யழிவேனோ

தவமாத வங்கள்பயில் அடியார்க ணங்களொடு
தயவாய்ம கிழ்ந்துதினம் – விளையாடத்

தமியேன்ம லங்களிரு வினைநோயி டிந்தலற
ததிநாளும் வந்ததென்முன் – வரவேணும்

உவகாரி யன்பர்பணி கலியாணி யெந்தையிட
முறைநாய கங்கவுரி – சிவகாமி

ஒளிரானை யின்கரமில் மகிழ்மாது ளங்கனியை
யொருநாள்ப கிர்ந்தவுமை – யருள்பாலா

அவமேபி றந்தஎனை யிறவாம லன்பர்புகு
மமுதால யம்பதவி – யருள்வோனே

அழகாந கம்பொலியு மயிலாகு றிஞ்சிமகிழ்
அயிலாபு கழ்ந்தவர்கள் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதான தந்ததன தனதான தந்ததன
தனதான தந்ததன – தனதான

சிவஞான புண்டரிக மலர்மாதுடன் கலவி
சிவபோக மன்பருக – அறியாமல்

செகமீது உழன்று மல வடிவாயிருந்து பொது
திகழ்மாதர் பின்செருமி – அழிவேனோ

தவ மாதவங்கள்பயில் அடியார் கணங்களொடு
தயவாய் மகிழ்ந்துதினம் – விளையாட

தமியேன்மலங்கள் இரு வினைநோய் இடிந்து அலற
ததிநாளும் வந்ததென்முன் – வரவேணும

உவகாரி யன்பர்பணி கலியாணி எந்தை இடம்
உறை நாயகங் கவுரி – சிவகாமி

ஒளிர் ஆனையின்கரமில் மகிழ்மாதுளங்கனியை
ஒருநாள் பகிர்ந்த – உமை யருள்பாலா

அவமேபி றந்தஎனை யிறவாமல் அன்பர்புகும்
அமுதாலயம் பதவி – அருள்வோனே

அழகாநகம்பொலியு மயிலா குறிஞ்சிமகிழ்
அயிலா புகழ்ந்தவர்கள் – பெருமாளே.

English

sivanjAna puNdarika malar mAdhudan kalavi
sivabOga manparuga – aRiyAmal

jega meedhuzhandru mala vadivAy irundhupodhu
thigazh mAdhar pin serumi – azhivEnO

thava mAdhavangaL payil adiyAr kaNangaLodu
dhayavAy magizhndhu dhinam – viLaiyAda

thamiyEn malangaL iruvinai nOyidindh alaRa
thadhi nALum vandhadhen mun – varavENum

uvakAri anbar paNi kaliyANi endhai ida
muRai nAyagan gavuri – sivakAmi

oLirAnaiyin karamil magizh mAdhuLang kaniyai
oru nAL pagirndha umai – aruL bAlA

avamE piRandha enai iRavAmal anbar pugum
amudhAlayam padhavi – aruLvOnE

azhagA nakampoliyum mayilA kuRinji magizh
ayilA pugazhndhavargaL – perumALE.

English Easy Version

sivanjAna puNdarika malar mAdhudan kalavi
sivabOga manparuga – aRiyAmal

jega meedhuzhandru mala vadivAy irundhu podhu
thigazh mAdhar pin serumi – azhivEnO

thava mAdhavangaL payil adiyAr kaNangaLodu
dhayavAy magizhndhu dhinam – viLaiyAda

thamiyEn malangaL iruvinai nOyidindh alaRa
thadhi nALum vandhadhen mun – varavENum

uvakAri anbar paNi kaliyANi endhai ida
muRai nAyagan gavuri – sivakAmi

oLirAnaiyin karamil magizh mAdhuLang kaniyai
oru nAL pagirndha umai – aruL bAlA

avamE piRandha enai iRavAmal anbar pugum
amudhAlayam padhavi – aruLvOnE

azhagA nakampoliyum mayilA kuRinji magizh
ayilA pugazhndhavargaL – perumALE.