திருப்புகழ் 1244 செழும் தாது (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1244 Sezhumthathu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனந்தான தானான தனந்தான தானான
தனந்தான தானான – தனதான

செழுந்தாது பார்மாது மரும்பாதி ரூபோடு
சிறந்தியாதி லூமாசை – யொழியாத

திறம்பூத வேதாள னரும்பாவ மேகோடி
செயுங்காய நோயாள – னரகேழில்

விழுந்தாழ வேமூழ்க இடுங்காலன் மேயாவி
விடுங்கால மேநாயென் – வினைபாவம்

விரைந்தேக வேவாசி துரந்தோடி யேஞான
விளம்போசை யேபேசி – வரவேணும்

அழுங்கோடி தேவார்க ளமர்ந்தார வானீடி
அழன்றேகி மாசீத – நெடுவேலை

அதிர்ந்தோட வேகாலன் விழுந்தோட வேகூர
அலங்கார வேலேவு – முருகோனே

கொழுங்கானி லேமாதர் செழுஞ்சேலை யேகோடு
குருந்தேறு மால்மாயன் – மருகோனே

குறம்பாடு வார்சேரி புகுந்தாசை மாதோடு
குணங்கூடி யேவாழு – பெருமாளே.

பதம் பிரித்தது

தனந்தான தானான தனந்தான தானான
தனந்தான தானான – தனதான

செழும் தாது பார் மாத அரும்பு ஆதி ரூபோடு
சிறந்து யாதிலும் ஆசை – ஒழியாத

திறம் பூத வேதாளன் அரும் பாவமே கோடி
செ(ய்)யும் காய நோயாளன் – நரகு ஏழில்

விழுந்து ஆழவே மூழ்க இடும் காலன் மேவி ஆவி
விடும் காலமே நாயேன் – வினை பாவம்

விரைந்து ஏகவே வாசி துரந்து ஓடியே ஞான
விளம்பு ஓசையே பேசி – வர வேணும்

அழும் கோடி தேவர்கள் அமர்ந்து ஆர வான் நீடி
அழன்று ஏகி மா சீத – நெடு வேலை

அதிர்ந்து ஓடவே காலன் விழுந்து ஓடவே கூர
அலங்கார வேல் ஏவும் – முருகோனே

கொழும் கானிலே மாதர் செழும் சேலையே கோடு
குருந்து ஏறு மால் மாயன் – மருகோனே

குறம் பாடுவார் சேரி புகுந்து ஆசை மாதோடு
குணம் கூடியே வாழு(ம்) – பெருமாளே.

English

sezhunthAthu pArmAthu marumpAthi rUpOdu
siRanthiyAthi lUmAsai – yozhiyAtha

thiRampUtha vEthALa narumpAva mEkOdi
seyunkAya nOyALa – narakEzhil

vizhunthAzha vEmUzhka idunkAlan mEyAvi
vidunkAla mEnAyen – vinaipAvam

virainthEka vEvAsi thuranthOdi yEnjAna
viLampOsai yEpEsi – varavENum

azhunkOdi thEvarfka LamarnthAra vAneedi
azhanREki mAseetha – neduvElai

athirnthOda vEkAlan vizhunthOda vEkUra
alankAra vElEvu – murukOnE

kozhungkAni lEmAthar sezhuncElai yEkOdu
kurunthERu mAlmAyan – marukOnE

kuRampAdu vArsEri pukunthAsai mAthOdu
kuNankUdi yEvAzhu – perumALE.

English Easy Version

chezhun thAthu pAr mAthu arumpu Athi rUpOdu
siRanthu yAthilum Asai – ozhiyAtha

thiRam pUtha vEthALan arum pAvamE kOdi
se(y)yum kAya nOyALan – naraku Ezhil

vizhunthu AzhavE mUzhka idum kAlan mEvi Avi
vidum kAlamE nAyEn – vinai pAvam

virainthu EkavE vAsi thuranthu OdiyE njAna
viLampu OsaiyE pEsi – vara vENum

azhum kOdi thEvarkaL amarnthu Ara vAn needi
azhanRu Eki mA seetha – nedu vElai

athirnthu OdavE kAlan vizhunthu OdavE kUra
alankAra vEl Evum – murukOnE

kozhum kAnilE mAthar sezhum sElaiyE kOdu
kurunthu ERu mAl mAyan – marukOnE

kuRam pAduvAr sEri pukunthu Asai mAthOdu
kuNam kUdiyE vAzhu(m) – perumALE.