திருப்புகழ் 1245 தத் தனமும் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1245 Thaththanamum

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்த தனதனன தத்த தனதனன
தத்த தனதனன – தனதான

தத்த னமுமடிமை சுற்ற மொடுபுதல்வர்
தக்க மனையினமு – மனைவாழ்வுந்

தப்பு நிலைமையணு கைக்கு வரவிரகு
தைக்கு மயல்நினைவு – குறுகாமுன்

பத்தி யுடனுருகி நித்த முனதடிகள்
பற்று மருள்நினைவு – தருவாயே

பத்து முடியுருளு வித்த பகழியினர்
பச்சை நிறமுகிலின் – மருகோனே

அத்தி முகவனழ குற்ற பெழைவயிற
னப்ப மவரைபொரி – அவல்தேனும்

அப்பி யமுதுசெயு மொய்ப்ப னுதவஅட
விக்குள் மறமகளை – யணைவோனே

முத்தி தருமுதல்வர் முக்க ணிறைவரொடு
முற்று மறைமொழியை – மொழிவோனே

முட்ட வசுரர்கிளை கெட்டு முறியமுதல்
வெட்டி யமர்பொருத – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்த தனதனன தத்த தனதனன
தத்த தனதனன – தனதான

தத் தனமும் அடிமை சுற்றமொடு புதல்வர்
தக்க மனை இனமும் – மனை வாழ்வும்

தப்பு நிலைமை அணுகைக்கு வர விரகு
உதைக்கும் மயல் நினைவு – குறுகா முன்

பத்தி உடன் உருகி நித்தம் உனது அடிகள்
பற்றும் அருள் நினைவு – தருவாயே

பத்து முடி உருளுவித்த பகழியினர்
பச்சை நிற முகிலின் – மருகோனே

அத்தி முகவன் அழகு உற்ற பெழை வயிறன்
அப்பம் அவரை பொரி – அவல் தேனும்

அப்பி அமுது செயும் மொய்ப்பன் உதவ
அடவிக்குள் மற மகளை – அணைவோனே

முத்தி தரு முதல்வர் முக்கண் இறைவரோடு
முற்று(ம்) மறை மொழியை – மொழிவோனே

முட்ட அசுரர் கிளை கெட்டு முறிய முதல்
வெட்டி அமர் பொருத – பெருமாளே

English

thaththanamum adimai sutramodu pudhalvar
thakka manaiyinamu – manaivAzhvun

thappu nilaimai aNugaikku vara viragu
dhaikku mayal ninaivu – kuRugAmun

baththi udan urugi niththam unadhadigaL
patrum aruL ninaivu – tharuvAyE

paththu mudiyuruLu viththa pagazhiyinar
pachchai niRamugilin – marugOnE

aththi mukavan azhagutra pezhai vayiRan
appam avaraipori – aval thEnum

appi amudhu seyu moyppan udhava ada
vikkuL maRamagaLai – aNaivOnE

muththi tharu mudhalvar mukkaN iRaivarodu
mutru maRai mozhiyai – mozhivOnE

mutta asurarkiLai kettu muRiya mudhal
vetti amarporudha – perumALE.

English Easy Version

thaththanamum adimai sutramodu pudhalvar
thakka manaiyinamu – manaivAzhvun

thappu nilaimai aNugaikku vara viragu
dhaikku mayal ninaivu – kuRugAmun

baththi udan urugi niththam unadhadigaL
patrum aruL ninaivu – tharuvAyE

paththu mudiyuruLu viththa pagazhiyinar
pachchai niRamugilin – marugOnE

aththi mukavan azhagutra pezhai vayiRan
appam avaraipori – aval thEnum

appi amudhu seyu moyppan udhava
adavikkuL maRamagaLai – aNaivOnE

muththi tharu mudhalvar mukkaN iRaivarodu
mutru maRaimozhiyai – mozhivOnE

mutta asurarkiLai kettu muRiya mudhal
vetti amarporudha – perumALE.