திருப்புகழ் 1247 தவநெறி (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1247 Thavaneri

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தனதன தனதன தனதன தனதன – தனதான

தவநெறி தவறிய குருடுகள் தலைபறி கதறிய – பரபாதத்

தருமிகள் கருமிகள் வெகுவித சமயிக ளவரொடு – சருவாநின்


றவனிவ னுவனுட னவளிவ ளுவளது இதுவுது – வெனுமாறற்


றருவுரு வொழிதரு வுருவுடை யதுபதி தமியனு – முணர்வேனோ

குவலய முழுவதும் மதிர்பட வடகுவ டிடிபட – வுரகேசன்

கொடுமுடி பலநெரி தரநெடு முதுகுரை கடல்புனல் – வறிதாகத்

துவல்கொடு முறையிடு சுரர்பதி துயரது கெடநிசி – சரர்சேனை

துகளெழ நடநவில் மரகத துரகதம் வரவல – பெருமாளே

பதம் பிரித்தது

தனதன தனதன தனதன தனதன தனதன – தனதான

தவநெறி தவறிய குருடுகள் தலைபறி கதறிய – பரபாதத்

தருமிகள் கருமிகள் வெகுவித சமயிகள் அவரொடு – சருவாநின்று

அவன் இவன்உவன் உடன் அவள் இவள் உவள் அது இது உது – எனுமாறற்று

அரு உரு ஒழிதரு உருவுடை அதுபதி தமியனும் – உணர்வேனோ

குவலய முழுவதும் மதிர்பட வடகுவடு இடிபட – உரகேசன்

கொடுமுடி பலநெரிதர நெடு முதுகுரை கடல்புனல் – வறிதாக

துவல்கொடு முறையிடு சுரர்பதி துயரது கெட நிசி – சரர்சேனை

துகளெழ நடநவில் மரகத துரகதம் வரவல – பெருமாளே.

English

thavaneRi thavaRiya kurudukaL thalaipaRi kathaRiya – parapAthath

tharumikaL karumikaL vekuvitha samayika Lavarodu – saruvAnin

Ravaniva nuvanuda navaLiva LuvaLathu ithuvuthu – venumARaR

Raruvuru vozhitharu vuruvudai yathupathi thamiyanu – muNarvEnO

kuvalaya muzhuvathum mathirpada vadakuva didipada – vurakEsan

kodumudi palaneri tharanedu muthukurai kadalpunal – vaRithAkath

thuvalkodu muRaiyidu surarpathi thuyarathu kedanisi – sararsEnai

thukaLezha nadanavil marakatha thurakatham varavala – perumALE.

English Easy Version

thavaneRi thavaRiya kurudukaL thalaipaRi kathaRiya – parapAthath

tharumikaL karumikaL vekuvitha samayikaL avarodu – saruvAninRu

avan ivanuvan udan avaL ivaL uvaL athu ithu uthu – enumARaRRu

aru uru ozhitharu uruvudai athupathi thamiyanum – uNarvEnO

kuvalaya muzhuvathum mathirpada vadakuvadu idipada – urakEsan

kodumudi palanerithara nedu muthukurai kadalpunal – vaRithAka

thuvalkodu muRaiyidu surarpathi thuyarathu keda nisi – sararsEnai

thukaLezha nadanavil marakatha thurakatham varavala – perumALE