Thiruppugal 1248 Thidhalaiulaththu
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதன தாத்தனத் தனதன தாத்தனத்
தனதன தாத்தனத் – தனதான
திதலையு லாத்துபொற் களபம்வி டாப்புதுத்
த்ரிவிதக டாக்களிற் – றுரகோடு
சிகரம காப்ரபைக் குவடென வாய்த்துநற்
சுரர்குடி யேற்றிவிட் – டிளநீரை
மதனவி டாய்த்தனத் திளைஞரை வாட்டுசெப்
பிணைமுலை மாத்தவக் – கொடிபோல்வார்
வலையிலி ராப்பகற் பொழுதுகள் போக்குமற்
றெனையுனை வாழ்த்தவைத் – தருள்வாயே
சததள பார்த்திபற் கரிபுரு ஷோத்தமற்
கெரிகன லேற்றவற் – குணராதோர்
சகலச மார்த்தசத் தியவன சூக்ஷமுக்
கியபர மார்த்தமுற் – புகல்வோனே
கதிர்மணி நீர்க்கடற் சுழிபுகு ராக்ஷதக்
கலகப ராக்ரமக் – கதிர்வேலா
கருதிய பாட்டினிற் றலைதெரி மாக்ஷணக்
கவிஞரு சாத்துணைப் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதன தாத்தனத் தனதன தாத்தனத்
தனதன தாத்தனத் – தனதான
திதலை உலாத்து பொன் களபம் விடா புதுத்
த்ரி வித கடாக் களிற்று – உர(ம்) கோடு
சிகர மகா ப்ரபைக் குவடு என வாய்த்து நல்
சுரர் குடி ஏற்றி விட்டு – இளநீரை
மதன விடாய்த் தனத்து இளைஞரை வாட்டு செப்பு
இணை முலை மாத் தவக் – கொடி போல்வார்
வலையில் இராப் பகல் பொழுதுகள் போக்கும் அற்று
எனை உனை வாழ்த்த வைத்து – அருள்வாயே
சத தள பார்த்திபற்கு அரி புருஷோத்தமற்கு
எரி கனல் ஏற்றவற்கு – உணராத
ஓர் சகல சம அர்த்த சத்திய வன சூக்ஷ(ம்) முக்கிய
பர மார்த்த(ம்) முன் – புகல்வோனே
கதிர் மணி நீர்க் கடல் சுழி புகு ராக்ஷதக்
கலக பராக்ரமக் – கதிர் வேலா
கருதிய பாட்டில் நிற்றலை தெரி மா க்ஷணக்
கவிஞர் உசாத்துணைப் – பெருமாளே.
English
thithalaiyu lAththupoR kaLapamvi dApputhuth
thrivithaka dAkkaLit – RurakOdu
sikarama kAprapaik kuvadena vAyththunaR
surarkudi yEtRivit – tiLaneerai
mathanavi dAyththanath thiLainjarai vAttuchep
piNaimulai mAththavak – kodipOlvAr
valaiyili rAppakaR pozhuthukaL pOkkumat
Renaiyunai vAzhththavaith – tharuLvAyE
sathathaLa pArththipaR karipuru shOththamaR
kerikana lEtRavaR – kuNarAthOr
sakalasa mArththasath thiyavana cUkshamuk
kiyapara mArththamuR – pukalvOnE
kathirmaNi neerkkadaR chuzhipuku rAkshathak
kalakapa rAkramak – kathirvElA
karuthiya pAttinit Ralaitheri mAkshaNak
kavinjaru sAththuNaip – perumALE.
English Easy Version
thithalai ulAththu pon kaLapam vidA puthuth
thri vitha kadAk kaLitRu – ura(m) kOdu
sikara makA prapaik kuvadu ena vAyththu nal
surar kudi EtRi vittu – iLaneerai
mathana vidAyth thanaththu iLainjarai vAttu seppu
iNai mulai mAth thavak – kodi pOlvAr
valaiyil irAp pakal pozhuthukaL pOkkum atRu
enai unai vAzhththa vaiththu – aruLvAyE
satha thaLa pArththipaRku ari purushOththamaRku
eri kanal EtRavaRku – uNarAtha
Or sakala sama arththa saththiya vana cUksha(m) mukkiya
para mArththa(m) mun – pukalvOnE
kathir maNi neerk kadal chuzhi puku rAkshathak
kalaka parAkramak – kathir vElA
karuthiya pAttil nitRalai theri mA kshaNak
kavinjar usAththuNaip – perumALE