திருப்புகழ் 1249 திரைவஞ்ச (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1249 Thiraivanja

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதந்த தனதனன தனதந்த தனதனன
தனதந்த தனதனன – தனதான

திரைவஞ்ச இருவினைகள் நரையங்க மலமழிய
சிவகங்கை தனில்முழுகி – விளையாடிச்

சிவம்வந்து குதிகொளக வடிவுன்றன் வடிவமென
திகழண்டர் முநிவர்கண – மயன்மாலும்

அரன்மைந்த னெனகளிறு முகனெம்பி யெனமகிழ
அடியென்க ணளிபரவ – மயிலேறி

அயில்கொண்டு திருநடன மெனதந்தை யுடன்மருவி
அருமந்த பொருளையினி – யருள்வாயே

பரியென்ப நரிகள்தமை நடனங்கொ டொருவழுதி
பரிதுஞ்ச வருமதுரை – நடராஜன்

பழியஞ்சி யெனதருகி லுறைபுண்ட ரிகவடிவ
பவளஞ்சொ லுமைகொழுந – னருள்பாலா

இருள்வஞ்ச கிரியவுண ருடனெங்க ளிருவினையு
மெரியுண்டு பொடியஅயில் – விடுவோனே

எனதன்பி லுறைசயில மகிழ்வஞ்சி குறமகளொ
டெணுபஞ்ச ணையின்மருவு – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதந்த தனதனன தனதந்த தனதனன
தனதந்த தனதனன – தனதான

திரை வஞ்ச இரு வினைகள் நரை அங்கம் மலம் அழிய
சிவ கங்கை தனில் முழுகி – விளையாடி

சிவம் வந்து குதி கொள அகம் வடிவு உன்றன் வடிவம் என
திகழ் அண்டர் முநிவர் கணம் – அயன் மாலும்

அரன் மைந்தன் என களிறு முகன் எம்பி என மகிழ
அடியென் கண் அளி பரவ – மயில் ஏறி

அயில் கொண்டு திரு நடனம் என தந்தை உடன் மருவி
அருமந்த பொருளை இனி – அருள்வாயே

பரி என்ப நரிகள் தமை நடனம் கொண்டு ஒரு வழுதி
பரி துஞ்ச வரும் மதுரை – நடராஜன்

பழி அஞ்சி எனது அருகில் உறை புண்டரிக வடிவ
பவளம் சொல் உமை கொழுநன் – அருள் பாலா

இருள் வஞ்ச கிரி அவுணர் உடன் எங்கள் இரு வினையும்
எரி உண்டு பொடிய அயில் – விடுவோனே

எனது அன்பில் உறை சயில மகிழ் வஞ்சி குற மகளொடு
எ(ண்)ணு(ம்) பஞ்சு அணையில் மருவு – பெருமாளே

English

thiraivanja iruvinaigaL narai anga malam azhiya
sivagangai thanil muzhugi – viLaiyAdi

sivam vandhu kudhikoL aga vadiundran vadivamena
thigazh aNdar munivargaNam – ayan mAlum

aran maindhanena kaLiRu mukan embiyena magizha
adiyenkaN aLiparava – mayilERi

ayil koNdu thiru natanam ena thandhaiyudan maruvi
arumantha poruLaiyini – aruLvAyE

pariyenba narigaL thamai natanangkod oruvazhudhi
parithunja varu madhurai – NadarAjan

pazhiyanji enadharugil uRai puNdarika vadiva
pavaLansol umai kozhunan – aruL bAlA

iruL vanjagiri avuNarudan engaL iruvinaiyum
eriyuNdu podiya ayil – viduvOnE

enadhanbil uRaisayila magizh vanji kuRamagaLo
deNu panjaNaiyin maruvu – perumALE.

English Easy Version

thiraivanja iruvinaigaL narai anga malam azhiya
sivagangai thanil muzhugi – viLaiyAdi

sivam vandhu kudhikoL aga vadiundran vadivamena
thigazh aNdar munivargaNam – ayan mAlum

aran maindhanena kaLiRu mukan embiyena magizha
adiyenkaN aLiparava mayilERi – ayil koNdu

thiru natanam ena thandhaiyudan maruvi
arumantha poruLaiyini – aruLvAyE

pariyenba narigaL thamai natanangkodu oruvazhudhi
parithunja varu madhurai – NadarAjan

pazhiyanji enadharugil uRai puNdarika vadiva
pavaLansol umai kozhunan – aruL bAlA

iruL vanjagiri avuNarudan engaL iruvinaiyum
eriyuNdu podiya ayil – viduvOnE

enadhanbil uRaisayila magizh vanji kuRamagaLodu
eNu panjaNaiyin maruvu – perumALE