திருப்புகழ் 1250 தீ ஊதை தாத்ரி (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1250 Theeudhaithathri

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானான தாத்த தானான தாத்த
தானான தாத்த – தனதான

தீயூதை தாத்ரி பானீய மேற்ற
வானீதி யாற்றி – கழுமாசைச்

சேறூறு தோற்பை யானாக நோக்கு
மாமாயை தீர்க்க – அறியாதே

பேய்பூத மூத்த பாறோரி காக்கை
பீறாஇ ழாத்தி – னுடல்பேணிப்

பேயோன டாத்து கோமாளி வாழ்க்கை
போமாறு பேர்த்து – னடிதாராய்

வேயூறு சீர்க்கை வேல்வேடர் காட்டி
லேய்வாளை வேட்க – வுருமாறி

மீளாது வேட்கை மீதூர வாய்த்த
வேலோடு வேய்த்த – இளையோனே

மாயூர வேற்றின் மீதே புகாப்பொன்
மாமேரு வேர்ப்ப – றியமோதி

மாறான மாக்கள் நீறாக வோட்டி
வானாடு காத்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தானான தாத்த தானான தாத்த
தானான தாத்த – தனதான

தீ ஊதை தாத்ரி பானீயம் ஏற்ற
வான் ஈதியால் – திகழும் ஆசைச்

சேறு ஊறு தோல் பை யானாக நோக்கு(ம்)
மா மாயை தீர்க்க – அறியாதே

பேய் பூதம் மூத்த பாறு ஓரி காக்கை
பீறா இழாத் தி(ன்)னு(ம்) – உடல் பேணி

பேயோன் நடாத்து கோமாளி வாழ்க்கை
போம் ஆறு பேர்த்து உன் – அடி தாராய்

வேய் ஊறு சீரக் கை வேல் வேடர் காட்டில்
ஏய்வாளை வேட்க – உரு மாறி

மீளாது வேட்கை மீது ஊர வாய்த்த
வேலோடு வேய்த்த – இளையோனே

மாயூர ஏற்றின் மீதே புகாப் பொன்
மா மேரு வேர்ப் – பறிய மோதி

மாறு ஆன மாக்கள் நீறாக ஓட்டி
வான் நாடு காத்த – பெருமாளே.

English

theeyUthai thAthri pAneeya mEtRa
vAneethi yAtRi – kazhumAsai

sERURu thORpai yAnAka nOkku
mAmAyai theerkka – aRiyAthE

pEypUtha mUththa pAROri kAkkai
peeRAi zhAththi – nudalpENip

pEyOna dAththu kOmALi vAzhkkai
pOmARu pErththu – nadithArAy

vEyURu seerkkai vElvEdar kAttil
EyvALai vEtka – vurumARi

meeLAthu vEtkai meethUra vAyththa
vElOdu vEyththa – iLaiyOnE

mAyUra vEtRin meethE pukAppon
mAmEru vErppa – RiyamOthi

mARAna mAkkaL neeRAka vOtti
vAnAdu kAththa – perumALE.

English Easy Version

thee Uthai thAthri pAneeyam
EtRa vAn eethiyAl – thikazhum Asai

sERu URu thOl pai yAnAka nOkku(m)
mA mAyai theerkka – aRiyAthE

pEy pUtham mUththa pARu Ori kAkkai
peeRA izhAth thi(n)nu(m) – udal pENi

pEyOn nadAththu kOmALi vAzhkkai
pOm ARu pErththu un – adi thArAy

vEy Uru seerak kai vEl vEdar kAttil
EyvALai vEtka – uru mARi

meeLAthu vEtkai meethu Ura vAyththa
vElOdu vEyththa – iLaiyOnE

mAyUra EtRin meethE pukAp pon
mA mEru vErp – paRiya mOthi

mARu Ana mAkkaL neeRAka Otti
vAn nAdu kAththa – perumALE.