திருப்புகழ் 1251 துடித்து எதிர் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1251 Thudiththuedhir

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்தன தனத்தன தனத்தன தனத்தன
தனத்தன தனத்தன – தனதான

துடித்தெதிர் வடித்தெழு குதர்க்கச மயத்தவர்
சுழற்கொரு கொடிக்கொடி – யெதிர்கூறித்

துகைப்பன கிதத்தலை யறுப்பன யில்விட்டுடல்
துணிப்பன கணித்தலை – மிசைபார

முடித்தலை விழுப்பன முழுக்கஅ டிமைப்பட
முறைப்படு மறைத்திர – ளறியாத

முதற்பொருள் புலப்பட வுணர்த்துவ னெனக்கொரு
மொழிப்பொருள் பழிப்பற – அருள்வாயே

குடிப்பன முகப்பன நெடிப்பன நடிப்பன
கொழுத்தகு ருதிக்கட – லிடையூடே

குதிப்பன மதிப்பன குளிப்பன களிப்பன
குவட்டினை யிடிப்பன – சிலபாடல்

படிப்பன திருப்புக ழெடுப்பன முடிப்பன
பயிற்றிய லகைக்குலம் – விளையாடப்

பகைத்தெழு மரக்கரை யிமைப்பொழு தினிற்பொடி
படப்பொரு துழக்கிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்தன தனத்தன தனத்தன தனத்தன
தனத்தன தனத்தன – தனதான

துடித்து எதிர் வடித்து எழு குதர்க்க சமயத்தவர்
சுழற்கு ஒரு கொடிக் கொடி – எதிர் கூறி

துகைப்பன அகிதத் தலை அறுப்பன அயில் விட்டு உடல்
துணிப்பன கணித் தலை – மிசை பார

முடித்தலை விழுப்பன முழுக்க அடிமைப் பட
முறைப் படு மறைத் திரள் – அறியாத

முதற்பொருள் புலப்பட உணர்த்துவன் எனக்கு ஒரு
மொழிப் பொருள் பழிப்பு அற – அருள்வாயே

குடிப்பன முகப்பன நெடிப்பன நடிப்பன
கொழுத்த குருதிக் கடல் – இடை ஊடே

குதிப்பன மதிப்பன குளிப்பன களிப்பன
குவட்டினை இடிப்பன – சில பாடல்

படிப்பன திருப்புகழ் எடுப்பன முடிப்பன
பயிற்றி அலகைக் குலம் – விளையாட

பகைத்து எழும் அரக்கரை இமைப் பொழுதினில்
பொடிபடப் பொருது உழக்கிய – பெருமாளே.

English

thudiththethir vadiththezhu kutharkkasa mayaththavar
suzhaRkoru kodikkodi – yethirkURith

thukaippana kithaththalai yaRuppana yilvittudal
thuNippana kaNiththalai – misaipAra

mudiththalai vizhuppana muzhukka adimaippada
muRaippadu maRaiththira – LaRiyAtha

muthaRporuL pulappada vuNarththuva nenakkoru
mozhipporuL pazhippaRa – aruLvAyE

kudippana mukappana nedippana nadippana
kozhuththaku ruthikkada – lidaiyUdE

kuthippana mathippana kuLippana kaLippana
kuvattinai yidippana – silapAdal

padippana thiruppuka zheduppana mudippana
payitRiya lakaikkulam – viLaiyAdap

pakaiththezhu marakkarai yimaippozhu thiniRpodi
padapporu thuzhakkiya – perumALE.

English Easy Version

thudiththu ethir vadiththu ezhu kutharkka samayaththavar
suzhaRku oru kodik kodi – ethir kURi

thukaippana akithath thalai aRuppana ayil vittu udal
thuNippana kaNith thalai – misai pAra

mudiththalai vizhuppana muzhukka adimaip pada
muRaip padu maRaith thiraL – aRiyAtha

muthaRporuL pulappada uNarththuvan enakku oru
mozhip poruL pazhippu aRa – aruLvAyE

kudippana mukappana nedippana nadippana
kozhuththa kuruthik kadal – idai UdE

kuthippana mathippana kuLippana kaLippana
kuvattinai idippana – sila pAdal

padippana thiruppukazh eduppana mudippana
payitRi alakaik kulam – viLaiyAda

pakaiththu ezhum arakkarai imaip pozhuthinil
podipadap poruthu uzhakkiya – perumALE