திருப்புகழ் 1253 தெரிவை மக்கள் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1253 Therivaimakkal

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல்

தனன தத்த தய்ய தனன தத்த தய்ய
தனன தத்த தய்ய – தனதான

தெரிவை மக்கள் செல்வ முரிமை மிக்க வுண்மை
தெரிவ தற்கு உள்ள – முணராமுன்

சினமி குத்த திண்ணர் தனிவ ளைத்து வெய்ய
சிலுகு தைத்து வன்மை – சிதையாமுன்

பரவை புக்கு தொய்யு மரவ ணைக்குள் வைகு
பரம னுக்கு நல்ல – மருகோனே

பழுதில் நிற்சொல் சொல்லி யெழுதி நித்த முண்மை
பகர்வ தற்கு நன்மை – தருவாயே

இருகி ரிக்க ளுள்ள வரைத டிக்கு மின்னு
மிடியு மொய்த்த தென்ன – எழுசூரை

எழுக டற்கு ளுள்ளு முழுகு வித்து விண்ணு
ளிமைய வர்க்கு வன்மை – தருவோனே

அரிவை பக்க முய்ய வுருகி வைக்கு மைய
ரறிய மிக்க வுண்மை – யருள்வோனே

அறிவி னுக்கு ளென்னை நெறியில் வைக்க வல்ல
அடிய வர்க்கு நல்ல – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தத்த தய்ய தனன தத்த தய்ய
தனன தத்த தய்ய – தனதான

தெரிவை மக்கள் செல்வம் உரிமை மிக்க உண்மை
தெரிவதற்கு உள்ளம் – உணராமுன்

சினம் மிகுத்த திண்ணர் தனி வளைத்து வெய்ய
சிலுகு தைத்து வன்மை – சிதையா முன்

பரவை புக்கு தொய்யும் அரவு அணைக்குள் வைகு(ம்)
பரமனுக்கு நல்ல – மருகோனே

பழுது இல் நின் சொல் சொல்லி எழுதி நித்தம் உண்மை
பகர்வதற்கு நன்மை – தருவாயே

இரு கிரிக்கள் உள்ளவரை தடிக்கும் மின்னும்
இடியும் மொய்த்தது என்ன – எழு சூரை

எழு கடற்குள் உள்ளும் முழுகுவித்து விண்ணுள்
இமையவர்க்கு வன்மை – தருவோனே

அரிவை பக்கம் உய்ய உருகி வைக்கும் ஐயர்
அறிய மிக்க உண்மை – அருள்வோனே

அறிவினுக்குள் என்னை நெறியில் வைக்க வல்ல
அடியவர்க்கு நல்ல – பெருமாளே.

English

therivai makkaL selva murimai mikka vuNmai
theriva thaRku uLLa – muNarAmun

sinami kuththa thiNNar thaniva Laiththu veyya
siluku thaiththu vanmai – sithaiyAmun

paravai pukku thoyyu marava NaikkuL vaiku
parama nukku nalla – marukOnE

pazhuthil niRchol solli yezhuthi niththa muNmai
pakarva thaRku nanmai – tharuvAyE

iruki rikka LuLLa varaitha dikku minnu
midiyu moyththa thenna – ezhucUrai

ezhuka daRku LuLLu muzhuku viththu viNNu
Limaiya varkku vanmai – tharuvOnE

arivai pakka muyya vuruki vaikku maiya
raRiya mikka vuNmai – yaruLvOnE

aRivi nukku Lennai neRiyil vaikka valla
adiya varkku nalla – perumALE.

English Easy Version

therivai makkaL selvam urimai mikka uNmai
therivathaRku uLLam – uNarAmun

sinam mikuththa thiNNar thani vaLaiththu veyya
siluku thaiththu vanmai – sithaiyA mun

paravai pukku thoyyum aravu aNaikkuL vaiku(m)
paramanukku nalla – marukOnE

pazhuthu il nin sol solli ezhuthi niththam uNmai
pakarvathaRku nanmai – tharuvAyE

iru kirikkaL uLLavarai thadikkum minnum
idiyum moyththathu enna – ezhu cUrai

ezhu kadaRkuL uLLum muzhukuviththu viNNuL
imaiyavarkku vanmai – tharuvOnE

arivai pakkam uyya uruki vaikkum aiyar
aRiya mikka uNmai – aruLvOnE

aRivinukkuL ennai neRiyil vaikka valla
adiyavarkku nalla – perumALE