திருப்புகழ் 1257 நற்குணம் உளார் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1257 Narkunamular

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்ததன தான தத்த, தத்ததன தான தத்த
தத்ததன தான தத்த – தனதான

நற்குணமு ளார்த மைப்பொல் மைக்குழலி லேசி றக்க
நற்பரிம ளாதி துற்ற – மலர்சூடி

நச்சுவிழி யால்ம யக்கி யிச்சைபல பேசி யுற்று
நற்பொருள வாம னத்தர் – வசமாகி

வெற்பனைய மாத னத்தை பொற்புறவு றாவ ணைத்து
மெத்தமய லாகி நித்த – மெலியாதே

வெட்சிகமழ் நீப புஷ்ப வெற்றிசிறு பாத பத்ம
மெய்க்கிருபை நீய ளிப்ப – தொருநாளே

ரத்தினப ணாநி ருத்தன் மெய்ச்சுதனு நாடு மிக்க
லக்ஷணகு மார சுப்ர – மணியோனே

நற்றிசையு மேறி யிட்ட பொய்ச்சமணை வேர றுத்து
நற்றிருநி றேப ரப்பி – விளையாடும்

சற்சனகு மார வ்ருத்தி அற்புதசி வாய னுக்கொர்
சற்குருவி நோத சித்ர – மயில்வீரா

சக்ரதரன் மார்ப கத்தி லுக்ரமுட னேத ரித்த
சத்தியடை யாள மிட்ட – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்ததன தான தத்த, தத்ததன தான தத்த
தத்ததன தான தத்த – தனதான

நல் குணம் உளார் தமைப் பொல் மைக் குழலிலே சிறக்க
நல் பரிமள ஆதி துற்ற – மலர் சூடி

நச்சு விழியால் மயக்கி இச்சை பல பேசி உற்று
நல் பொருள் அவா(வு)ம் மனத்தர் – வசமாகி

வெற்பு அனைய மா தனத்தை பொற்புற உறா அணைத்து
மெத்த மயலாகி நித்தம் – மெலியாதே

வெட்சி கமழ் நீப புஷ்ப(ம்) வெற்றி சிறு பாத பத்மம்
மெய்க் கிருபை நீ அளிப்பது – ஒரு நாளே

ரத்தின பணா நிருத்தன் மெய்ச்` சுதனு(ம்) நாடு மிக்க
லக்ஷண குமார – சுப்ரமணியோனே

ந(நா)ல் திசையும் ஏறி இட்ட பொய்ச் சமணை வேர் அறுத்து
நல் திரு நிறெ பரப்பி – விளையாடும்

சத்சன குமார வ்ருத்தி அற்புத சிவாயனுக்கு ஓர்
சத் குரு விநோத சித்ர – மயில் வீரா

சக்ரதரன் மார்பு அகத்தில் உக்ரமுடனே தரித்த
சத்தி அடையாளம் இட்ட – பெருமாளே.

English

naRkuNamu LArtha maippol maikkuzhali lEsi Rakka
naRparima LAthi thutRa – malarcUdi

nacchuvizhi yAlma yakki yicchaipala pEsi yutRu
naRporuLa vAma naththar – vasamAki

veRpanaiya mAtha naththai poRpuRavu RAva Naiththu
meththamaya lAki niththa – meliyAthE

vetchikamazh neepa pushpa vetRisiRu pAtha pathma
meykkirupai neeya Lippa – thorunALE

raththinapa NAni ruththan meycchuthanu nAdu mikka
lakshaNaku mAra subra – maNiyOnE

natRisaiyu mERi yitta poycchamaNai vEra Ruththu
natRiruni REpa rappi – viLaiyAdum

saRchanaku mAra vruththi aRputhasi vAya nukkor
saRguruvi nOtha chithra – mayilveerA

sakratharan mArpa kaththi lugramuda nEtha riththa
saththiyadai yALa mitta – perumALE.

English Easy Version

nal kuNam uLAr thamaip pol maik kuzhalilE siRakka
nal parimaLa Athi thutRa – malar cUdi

nacchu vizhiyAl mayakki icchai pala pEsi utRu
nal poruL avA (vu)m manaththar – vasamAki

veRpu anaiya mA thanaththai poRpuRa uRA aNaiththu
meththa mayalAki niththam – meliyAthE

vetchi kamazh neepa pushpa (m) vetRi siRu pAtha pathmam
meykf kirupai nee aLippathu – oru nALE

raththina paNA niruththan meyc chuthanu (m) nAdu mikka
lakshaNa kumAra – subramaNiyOnE

na (a)l thisaiyum ERi itta poyc chamaNai vEr aRuththu
nal thiru niRe parappi – viLaiyAdum

sath chana kumAra vruththi aRputha sivAyanukku Or
sath guru vinOtha chithra – mayil veerA

sakratharan mArpu akaththil ugramudanE thariththa
saththi adaiyaLam itta – perumALE.