திருப்புகழ் 1258 நாகாங்க ரோமம் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1258 Nagangkaromam

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானாந்த தானந் தாத்த தானாந்த தானந் தாத்த
தானாந்த தானந் தாத்த – தனதான

நாகாங்க ரோமங் காட்டி வாரேந்து நாகங் காட்டி
நாமேந்து பாலங் காட்டி – யபிராம

நானாங்க ராகங் காட்டி நாகேந்த்ர நீலங் காட்டி
நாயேன்ப்ர காசங் காட்டி – மடலூர

மேகாங்க கேசங் காட்டி வாயாம்பல் வாசங் காட்டி
மீதூர்ந்த போகங் காட்டி – யுயிரீர்வார்

மேல்வீழ்ந்து தோயுந் தூர்த்தன் மோகாந்த காரந் தீர்க்க
வேதாந்த தீபங் காட்டி – யருள்வாயே

ஏகாந்த வீரம் போற்றி நீலாங்க யானம் போற்றி
யேடார்ந்த நீபம் போற்றி – முகில்தாவி

ஏறோங்க லேழுஞ் சாய்த்த நான்மூன்று தோளும் போற்றி
யார்வேண்டி னாலுங் கேட்ட – பொருளீயும்

த்யாகாங்க சீலம் போற்றி வாயோய்ந்தி டாதன் றார்த்து
தேசாங்க சூரன் தோற்க – மயிலேறிச்

சேவேந்தி தேசம் பார்க்க வேலேந்தி மீனம் பூத்த
தேவேந்த்ர லோகங் காத்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தானாந்த தானந் தாத்த தானாந்த தானந் தாத்த
தானாந்த தானந் தாத்த – தனதான

நாக அங்க ரோமம் காட்டி வார் ஏந்து நாகம் காட்டி
நா(ம)ம் ஏந்து பாலம் காட்டி – அபிராம

நானாங்க ராகம் காட்டி நாக இந்த்ர நீலம் காட்டி
நாயேன் ப்ரகாசம் காட்டி – மடல் ஊர

மேக அங்க கேசம் காட்டி வாய் ஆம்பல் வாசம் காட்டி
மீது ஊர்ந்த போகம் காட்டி – உயிர் ஈர்வார்

மேல் வீழ்ந்து தோயும் தூர்த்தன் மோக அந்தகாரம் தீர்க்க
வேதாந்த தீபம் காட்டி – அருள்வாயே

ஏகாந்த வீரம் போற்றி நீல அங்க யானம் போற்றி
ஏடு ஆர்ந்த நீபம் போற்றி – முகில் தாவி

ஏறு ஓங்கல் ஏழும் சாய்த்த நான் மூன்று தோளும் போற்றி
யார் வேண்டினாலும் கேட்ட – பொருள் ஈயும்

த்யாகாங்க சீலம் போற்றி வாய் ஓய்ந்திடாது அன்று ஆர்த்து
தேசாங்க சூரன் தோற் – மயில் ஏறிச்

சேவு ஏந்தி தேசம் பார்க்க வேல் ஏந்தி மீனம் பூத்த
தேவேந்த்ர லோகம் காத்த – பெருமாளே.

English

nAkAnga rOmang kAtti vArEnthu nAkang kAtti
nAmEnthu pAlang kAtti – yapirAma

nAnAnga rAkang kAtti nAkEnthra neelang kAtti
nAyEnpra kAsang kAtti – madalUra

mEkAnga kEsang kAtti vAyAmpal vAsang kAtti
meethUrntha pOkang kAtti – yuyireervAr

mElveezhnthu thOyun thUrththan mOkAntha kAran theerkka
vEthAntha theepang kAtti – yaruLvAyE

EkAntha veeram pOtRi neelAnga yAnam pOtRi
yEdArntha neepam pOtRi – mukilthAvi

EROnga lEzhunj chAyththa nAnmUnRu thOLum pOtRi
yArvENdi nAlung kEtta – poruLeeyum

thyAkAnga seelam pOtRi vAyOynthi dAthan RArththu
thEsAnga cUran thORka – mayilERic

chEvEnthi thEsam pArkka vElEnthi meenam pUththa
thEvEnthra lOkang kAththa – perumALE.

English Easy Version

nAka anga rOmam kAtti vAr Enthu nAkam kAtti
nA(ma)m Enthu pAlam kAtti – apirAma

nAnAnga rAkam kAtti nAka inthra neelam kAtti
nAyEn prakAsam kAtti – madal Ura

mEka anga kEsam kAtti vAy Ampal vAsam kAtti
meethu Urntha pOkam kAtti – uyir eervAr

mEl veezhnthu thOyum thUrththan mOka anthakAram theerkka
vEthAntha theepam kAtti – aruLvAyE

EkAntha veeram pOtRi neela anga yAnam pOtRi
Edu Arntha neepam pOtRi – mukil thAvi

ERu Ongal Ezhum sAyththa nAn mUnRu thOLum pOtRi
yAr vENdinAlum kEtta – poruL eeyum

thyAkAnga seelam pOtRi vAy OynthidAthu anRu Arththu
thEsAnga cUran thORka – mayil ERic

chEvu Enthi thEsam pArkka vEl Enthi meenam pUththa
thEvEnthra lOkam kAththa – perumALE.