திருப்புகழ் 1261 பாதகமான யாக்கை (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1261 Padhagamanayakkai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானன தான தாத்த தானன தான தாத்த
தானன தான தாத்த – தனதான

பாதக மான யாக்கை வாதுசெய் பாவி கோத்த
பாணமும் வாளு மேற்ற – இருபார்வை

பாரப டீர மாப்ப யோதர மாதர் வாய்த்த
பாயலின் மீத ணாப்பி – யிதமாடுந்

தோதக மாய வார்த்தை போதக மாக நோக்கு
தூய்மையில் நாயி னேற்கும் – வினைதீரச்

சூழும னாதி நீத்த யானொடு தானி லாச்சு
கோதய ஞான வார்த்தை – யருள்வாயே

சாதன வேத நூற்பு ராதன பூண நூற்ப்ர
ஜாபதி யாண்மை தோற்க – வரைசாடிச்

சாகர சூர வேட்டை யாடிய வீர வேற்ப்ர
தாபம கீப போற்றி – யெனநேமி

மாதவன் மாது பூத்த பாகர னேக நாட்ட
வாசவ னோதி மீட்க – மறைநீப

மாமலர் தூவி வாழ்த்த யானையை மாலை சூட்டி
வானவர் சேனை காத்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தானன தான தாத்த தானன தான தாத்த
தானன தான தாத்த – தனதான

பாதகமான யாக்கை வாது செய் பாவி கோத்த
பாணமும் வாளும் ஏற்ற – இரு பார்வை

பார படீரம் மாப் பயோதர மாதர் வாய்த்த
பாயலின் மீது அணாப்பி – இதம் ஆடும்

தோதகம் ஆய வார்த்தை போதகமாக நோக்கு(ம்)
தூய்மையில் நாயினேற்கும் – வினை தீர

சூழும் அனாதி நீத்த யானொடு தான் இ(ல்)லாச்
சுக உதய ஞான வார்த்தை – அருள்வாயே

சாதன வேத நூல் புராதன பூண நூல்
ப்ரஜாபதி ஆண்மை தோற்க – வரை சாடி

சாகர சூர வேட்டை ஆடிய வீர வேல்
ப்ரதாப மகீப போற்றி – என நேமி

மாதவன் மாது பூத்த பாகர் அநேக நாட்ட
வாசவன் ஓதி மீட்க – மறை நீப

மா மலர் தூவி வாழ்த்த யானையை மாலை சூட்டி
வானவர் சேனை காத்த – பெருமாளே.

English

pAthaka mAna yAkkai vAthusey pAvi kOththa
pANamum vALu mEtRa – irupArvai

pArapa deera mAppa yOthara mAthar vAyththa
pAyalin meetha NAppi – yithamAdun

thOthaka mAya vArththai pOthaka mAka nOkku
thUymaiyil nAyi nERkum – vinaitheerac

cUzhuma nAthi neeththa yAnodu thAni lAcchu
kOthaya njAna vArththai – yaruLvAyE

sAthana vEtha nURpu rAthana pUNa nURpra
jApathi yANmai thORka – varaisAdi

sAkara cUra vEttai yAdiya veera vERpra
thApama keepa pOtRi – yenanEmi

mAthavan mAthu pUththa pAkara nEka nAtta
vAsava nOthi meetka – maRaineepa

mAmalar thUvi vAzhththa yAnaiyai mAlai cUtti
vAnavar sEnai kAththa – perumALE.

English Easy Version

pAthakamAna yAkkai vAthu sey pAvi kOththa
pANamum vALum EtRa – iru pArvai

pAra padeeram mAp payOthara mAthar vAyththa
pAyalin meethu aNAppi – itham Adum

thOthakam Aya vArththai pOthakamAka nOkku(m)
thUymaiyil nAyinERkum – vinai theera

cUzhum anAthi neeththa yAnodu thAn i(l)lA chuka
uthaya njAna vArththai – aruLvAyE

sAthana vEtha nUl purAthana pUNa nUl
prajApathi ANmai thORka – varai sAdi

sAkara cUra vEttai Adiya veera vEl
prathApa makeepa pOtRi – ena nEmi

mAthavan mAthu pUththa pAkar anEka nAtta
vAsavan Othi meetka – maRai neepa

mA malar thUvi vAzhththa yAnaiyai mAlai cUtti
vAnavar sEnai kAththa – perumALE.