Thiruppugal 1262 Paranarungkuzhal
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தான தனந்தன தான தனந்தன
தான தனந்தன – தனதான
பார நறுங்குழல் சோர நெகிழ்ந்துப
டீர தனம்புள – கிதமாகப்
பாவை யருந்தியல் மூழ்கி நெடும்பரி
தாப முடன்பரி – மளவாயின்
ஆர முதுண்டணை மீதி லிருந்தநு
ராகம் விளைந்திட – விளையாடி
ஆக நகம்பட ஆர முயங்கிய
ஆசை மறந்துனை – யுணர்வேனோ
நார தனன்றுச காய மொழிந்திட
நாய கிபைம்புன – மதுதேடி
நாண மழிந்துரு மாறி யவஞ்சக
நாடி யெபங்கய – பதநோவ
மார சரம்பட மோக முடன்குற
வாணர் குறிஞ்சியின் – மிசையேபோய்
மாமு நிவன்புணர் மானு தவுந்தனி
மானை மணஞ்செய்த – பெருமாளே.
பதம் பிரித்தது
தான தனந்தன தான தனந்தன
தான தனந்தன – தனதான
பார நறும் குழல் சோர நெகிழ்ந்து
படீர தனம் – புளகிதமாகப்
பாவையர் உந்தியில் மூழ்கி நெடும்
பரிதாபம் உடன் – பரிமள வாயின்
ஆர் அமுது உண்டு அணை மீதில் இருந்து
அநுராகம் விளைந்திட – விளையாடி
ஆக நகம் பட ஆரம் முயங்கிய
ஆசை மறந்து உனை – உணர்வேனோ
நாரதன் அன்று சகாய(ம்) மொழிந்திட
நாயகி பைம்புனம் – அது தேடி
நாணம் அழிந்து உரு மாறிய வஞ்சகன்
நாடியெ பங்கய – பத(ம்) நோவ
மார(ன்) சரம் பட மோகமுடன் குற
வாணர் குறிஞ்சியின் – மிசையே போய்
மா முநிவன் புணர் மான் உதவும்
தனிமானை மணம் செய்த – பெருமாளே.
English
pAra naRunguzhal sOra nekizhnthupa
deera thanampuLa – kithamAkap
pAvai yarunthiyal mUzhki nedumpari
thApa mudanpari – maLavAyin
Ara muthuNdaNai meethi lirunthanu
rAkam viLainthida – viLaiyAdi
Aka nakampada Ara muyangiya
Asai maRanthunai – yuNarvEnO
nAra thananRusa kAya mozhinthida
nAya kipaimpuna – mathuthEdi
nANa mazhinthuru mARi yavanjaka
nAdi yepangaya – pathanOva
mAra sarampada mOka mudankuRa
vANar kuRinjiyin – misaiyEpOy
mAmu nivanpuNar mAnu thavunthani
mAnai maNamcheytha – perumALE.
English Easy Version
pAra naRum kuzhal sOra nekizhnthu
padeera thanam – puLakithamAkap
pAvaiyar unthiyil mUzhki nedum
parithApam udan – parimaLa vAyin
Ar amuthu uNdu aNai meethil irunthu
anurAkam viLainthida – viLaiyAdi
Aka nakam pada Aram muyangiya
Asai maRanthu unai – uNarvEnO
nArathan anRu sakAya(m) mozhinthida
nAyaki paimpunam – athu thEdi
nANam azhinthu uru mARiya vanjakan
nAdiye pangaya – patha(m) nOva
mAra(n) saram pada mOkamudan kuRa
vANar kuRinjiyin – misaiyE pOy
mA munivan puNar mAn uthavum
thanimAnai maNam seytha – perumALE.