திருப்புகழ் 1264 பூத கலாதிகள் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1264 Budhakaladhigal

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானன தானன தந்த தானன தானன தந்த
தானன தானன தந்த – தனதான

பூதக லாதிகள் கொண்டு யோகமு மாகம கிழ்ந்து
பூசைகள் யாதுநி கழ்ந்து – பிழைகோடி

போம்வழி யேதுதெ ரிந்து ஆதிய நாதியி ரண்டு
பூரணி காரணி விந்து – வெளியான

நாதப ராபர மென்ற யோகியு லாசம றிந்து
ஞானசு வாசமு ணர்ந்து – வொளிகாண

நாடியொ ராயிரம் வந்த தாமரை மீதில மர்ந்த
நாயகர் பாதமி ரண்டு – மடைவேனோ

மாதுசர் வேஸ்வரி வஞ்சி காளிபி டாரிவி பஞ்சி
வாணிவ ராகிம டந்தை – யபிராமி

வாழ்சிவ காமச வுந்த்ரி யாலமெ லாமுக பஞ்ச
வாலைபு ராரியி டந்த – குமையாயி

வேதபு ராணம்வி ளம்பி நீலமு ராரியர் தங்கை
மேலொடு கீழுல கங்கள் – தருபேதை

வேடமெ லாமுக சங்க பாடலொ டாடல்ப யின்ற
வேணியர் நாயகி தந்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தானன தானன தந்த தானன தானன தந்த
தானன தானன தந்த – தனதான

பூத கலாதிகள் கொண்டு யோகமும் ஆக மகிழ்ந்து
பூசைகள் யாது நிகழ்ந்து – பிழை கோடி

போம் வழி ஏது தெரிந்து ஆதி அநாதி இரண்டு
பூரணி காரணி விந்து – வெளியான

நாத பராபரம் என்ற யோகி உ(ல்)லாசம் அறிந்து
ஞான சுவாசம் உணர்ந்து – ஒளி காண

நாடி ஒரு ஆயிரம் வந்த தாமரை மீதில் அமர்ந்த
நாயகர் பாதம் இரண்டும் – அடைவேனோ

மாது சர்வேஸ்வரி வஞ்சி காளி பிடாரி விபஞ்சி
வாணி வராகி மடந்தை – அபிராமி

வாழ் சிவகாம சவுந்த்ரி ஆலம் மெ(மே) லாம் முக பஞ்ச
வாலை புராரி இடந்தகு – உமையாயி

வேத புராணம் விளம்பி நீல முராரியர் தங்கை
மேலொடு கீழ் உலகங்கள் – தரு(ம்) பேதை

வேடம் எ(ல்)லாம் உக சங்க பாடலொடு ஆடல் பயின்ற
வேணியர் நாயகி தந்த – பெருமாளே

English

pUthaka lAthikaL koNdu yOkamu mAkama kizhnthu
pUsaikaL yAthuni kazhnthu – pizhaikOdi

pOmvazhi yEthuthe rinthu Athiya nAthiyi raNdu
pUraNi kAraNi vinthu – veLiyAna

nAthapa rApara menRa yOkiyu lAsama Rinthu
njAnasu vAsamu Narnthu – voLikANa

nAdiyo rAyiram vantha thAmarai meethila marntha
nAyakar pAthami raNdu – madaivEnO

mAthusar vEsvari vanji kALipi dArivi panji
vANiva rAkima danthai – yapirAmi

vAzhsiva kAmasa vunthri yAlame lAmuka panja
vAlaipu rAriyi dantha – kumaiyAyi

vEthapu rANamvi Lampi neelamu rAriyar thangai
mElodu keezhula kangaL – tharupEthai

vEdame lAmuka sanga pAdalo dAdalpa yinRa
vENiyar nAyaki thantha – perumALE.

English Easy Version

pUtha kalAthikaL koNdu yOkamum Aka makizhnthu
pUsaikaL yAthu nikazhnthu – pizhai kOdi

pOm vazhi Ethu therinthu Athi anAthi iraNdu
pUraNi kAraNi vinthu – veLiyAna

nAtha parAparam enRa yOki u(l)lAsam aRinthu
njAna suvAsam uNarnthu – oLi kANa

nAdi oru Ayiram vantha thAmarai meethil amarntha
nAyakar pAtham iraNdum – adaivEnO

mAthu sarvESvari vanji kALi pidAri vipanji
vANi varAki madanthai – apirAmi

vAzh sivakAma savunthri Alam me(E)lAm muka panja
vAlai purAri idanthaku – umaiyAyi

vEtha purANam viLampi neela murAriyar thangai
mElodu keezh ulakangaL – tharu(m) pEthai

vEdam e(l)lAm uka sanga pAdalodu Adal payinRa
vENiyar nAyaki thantha – perumALE.