திருப்புகழ் 1267 மக்கள் தாயர் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1267 Makkalthayar

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்தனா தத்ததன தத்தனா தத்ததன
தத்தனா தத்ததன – தனதான

மக்கள்தா யர்க்குமரு கர்க்குமா மர்க்குமனை
விக்கும்வாழ் நர்க்குமிக – மனதூடே

மைத்தவே லைக்குநெடி துற்றமா யத்துயரம்
வைத்துவா டச்சமனு – முறமேவித்

திக்குநா டிக்கரிய மெய்க்கடா விற்றிருகி
திக்கஆ விக்களவு – தெரியாமுன்

சித்தமோ வித்துயிலு மற்றுவா ழச்சிறிது
சித்ரபா தக்கமல – மருள்வாயே

இக்குவே ளைக்கருக முக்கணா டிக்கனலை
யிட்டுயோ கத்தமரு – மிறையோர்முன்

எச்சரா திக்குமுற நிற்குமா யற்குமுத
லெட்டொணா வித்தைதனை – யினிதீவாய்

பக்கஆர் வத்துடனுள் நெக்குநா டிப்பரவு
பத்தர்பா டற்குருகு – முருகோனே

பக்கம் யானைத்திருவொ டொக்கவா ழக்குறவர்
பச்சைமா னுக்கினிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்தனா தத்ததன தத்தனா தத்ததன
தத்தனா தத்ததன – தனதான

மக்கள் தாயர்க்கும் மருகர்க்கும் மாமர்க்கும்
மனைவிக்கும் வாழ்நர்க்கும் மிக – மனதூடே

மைத்த வேலைக்கு நெடிது உற்ற மாயத் துயரம்
வைத்து வாட சமனும் – உற மேவி

திக்கு நாடிக் கரிய மெய்க் கடாவில் திருகி
திக்க ஆவிக்கு அளவு – தெரியா முன்

சித்தம் ஓவித் துயிலும் அற்று வாழ சிறிது
சித்ர பாதக் கமலம் – அருள்வாயே

இக்கு வேளைக் கருக முக்கண் நாடிக் கனலை
இட்டு யோகத்து அமரும் – இறையோர் முன்

எச்சராதிக்கும் உற நிற்கும் மாயற்கு முதல்
எட்டொணா வித்தை தனை – இனிது ஈவாய்

பக்க ஆர்வத்துடன் உள்நெக்கு நாடிப் பரவும்
பத்தர் பாடற்கு உருகும் – முருகோனே

பக்கம் யானைத் திருவோடு ஒக்க வாழ குறவர்
பச்சை மானுக்கு இனிய – பெருமாளே.

English

makkaLthA yarkkumaru karkkumA markkumanai
vikkumvAzh narkkumika – manathUdE

maiththavE laikkunedi thutRamA yaththuyaram
vaiththuvA daccamanu – muRamEvith

thikkunA dikkariya meykkadA vitRiruki
thikkaA vikkaLavu – theriyAmun

siththamO viththuyilu matRuvA zhacciRithu
cithrapA thakkamala – maruLvAyE

ikkuvE Laikkaruka mukkaNA dikkanalai
yittuyO kaththamaru – miRaiyOrmun

eccharA thikkumuRa niRkumA yaRkumuthal
ettoNA viththaithanai – yinitheevAy

pakkaAr vaththudanuL nekkunA dipparavu
paththarpA daRkuruku – murukOnE

pakkam yAnaiththiruvo dokkavA zhakkuRavar
pacchaimA nukkiniya – perumALE.

English Easy Version

makkaL thAyarkkum marukarkkum mAmarkkum
manaivikkum vAzhnarkkum mika – manathUdE

maiththa vElaikku nedithu utRa mAya thuyaram
vaiththu vAda samanum – uRa mEvi

thikku nAdik kariya meyak kadAvil thiruki
thikka Avikk(u) aLavu – theriyA mun

siththam Ovith thuyilum atRu vAzha siRithu
cithra pAthak kamalam – aruLvAyE

ikku vELaik karuka mukkaN nAdik kanalai
Ittu yOkaththu amar – iRaiyOr mun

eccharAthikkum uRa niRkum mAyaRku muthal
ettoNA viththai thanai – inithu eevAy

pakka Arvaththudan uLnekku nAdip paravum
paththar pAdaRku urukum – murukOnE

pakkam yAnaith thiruvOdu okka vAzha kuRavar
pacchai mAnukku iniya – perumALE,