Thiruppugal 1269 Madhidhanaiyiladha
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதன தனான தான தனதன தனான தான
தனதன தனான தான – தனதான
மதிதனை யிலாத பாவி குருநெறி யிலாத கோபி
மனநிலை நிலாத பேயன் – அவமாயை
வகையது விடாத பேடி தவநினை விலாத மோடி
வரும்வகை யிதேது காய – மெனநாடும்
விதியிலி பொலாத லோபி சபைதனில் வராத கோழை
வினையிகல் விடாத கூள – னெனைநீயும்
மிகுபர மதான ஞான நெறிதனை விசார மாக
மிகுமுன துரூப தான – மருள்வாயே
எதிர்வரு முதார சூர னிருபிள வதாக வேலை
யியலொடு கடாவு தீர – குமரேசா
இனியசொல் மறாத சீலர் கருவழி வராமல் நாளும்
இளமையது தானு மாக – நினைவோனே
நதியுட னராவு பூணு பரமர்குரு நாத னான
நடைபெறு கடூர மான – மயில்வீரா
நகைமுக விநோத ஞான குறமினுட னேகு லாவு
நவமணி யுலாவு மார்ப – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதன தனான தான தனதன தனான தான
தனதன தனான தான – தனதான
மதிதனை யிலாத பாவி குருநெறி யிலாத கோபி
மனநிலை நிலாத பேயன் – அவமாயை
வகையது விடாத பேடி தவநினைவிலாத மோடி
வரும்வகை யிதேது காய – மெனநாடும்
விதியிலி பொலாத லோபி சபைதனில் வராத கோழை
வினையிகல் விடாத – கூளனெனைநீயும்
மிகுபரம் அதான ஞான நெறிதனை விசாரமாக
மிகுமுனது ரூப தானம் – அருள்வாயே
எதிர்வரும் உதார சூரன் இருபிள வதாக வேலை
இயலொடு கடாவு தீர – குமரேசா
இனியசொல் மறாத சீலர் கருவழி வராமல் நாளும்
இளமையது தானு மாக – நினைவோனே
நதியுடன் அராவு பூணு பரமர்குரு நாதனான
நடைபெறு கடூர மான – மயில்வீரா
நகைமுக விநோதஞான குறமினுடனேகுலாவு
நவமணி யுலாவு மார்ப – பெருமாளே.
English
mathithanai yilAtha pAvi GuruneRi yilAtha kOpi
mananilai nilAtha pEyan – avamAyai
vakaiyathu vidAtha pEdi thavaninai vilAtha mOdi
varumvakai yithEthu kAya – menanAdum
vithiyili polAtha lOpi sapaithanil varAtha kOzhai
vinaiyikal vidAtha kULa – nenaineeyum
mikupara mathAna njAna neRithanai visAra mAka
mikumuna thurUpa thAna – maruLvAyE
ethirvaru muthAra cUra nirupiLa vathAka vElai
yiyalodu kadAvu theera – kumarEsA
iniyasol maRAtha seelar karuvazhi varAmal nALum
iLamaiyathu thAnu mAka – ninaivOnE
nathiyuda narAvu pUNu paramarguru nAtha nAna
nadaipeRu kadUra mAna – mayilveerA
nakaimuka vinOtha njAna kuRaminuda nEku lAvu
navamaNi yulAvu mArba – perumALE.
English Easy Version
mathithanai yilAtha pAvi GuruneRi yilAtha kOpi
mananilai nilAtha pEyan
avamAyai vakaiyathu vidAtha pEdi thavaninaivilAtha mOdi
varumvakai yithEthu – kAyamenanAdum
vithiyili polAtha lOpi sapaithanil varAtha kOzhai
vinaiyikal vidAtha – kULanenai neeyum
mikuparam athAna njAna neRithanai visAramAka
mikumunathu rUpa thAnam -aruLvAyE
ethirvarum uthAra cUran irupiLa vathAka vElai
iyalodu kadAvu theera – kumarEsA
iniyasol maRAtha seelar karuvazhi varAmal nALum
iLamaiyathu thAnu mAka – ninaivOnE
nathiyudan arAvu pUNu paramarguru nAthanAna
nadaipeRu kadUra mAna – mayilveerA
nakaimuka vinOthanjAna kuRaminudanEkulAvu
navamaNi yulAvu mArba – perumALE