திருப்புகழ் 1270 மலம் தோல் சலம் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1270 Malamtholsalam

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனந்தாத்
தனந்தாத் தனத்தம் – தனதான

மலந்தோற் சலந்தேற் றெலும்பாற் கலந்தீட்
டிடுங்கூட் டினிற்றங் – கிடுமாய

மயங்காத் தியங்காப் பயங்கோட் டிடுங்காற்
றுடன்போக் குறத்தந் – தையுமாதும்

குலந்தாய்க் குடம்பாற் பிறந்தேற் றிடுங்கோத்
தடங்கூப் பிடத்தம் – புவியாவும்

குலைந்தார்ப் பெழுங்காட் டிலந்தாட் களன்பாற்
குணங்காத் துனைக்கும் – பிடஆளாய்

தலந்தாட் டொடண்டாத் தளைந்தார்க் கிளங்காத்
தடந்தாட் புடைத்தன் – பினர்வாழத்

தருங்கூத் தரும்பார்த் துகந்தேத் திடஞ்சாத்
திரஞ்சாற் றிநிற்கும் – பெருவாழ்வே

அலைந்தாற் றெழுங்கோச் சலந்தீக் கலந்தாட்
டரம்போச் செனக்கன் – றிடும்வேலா

அறங்காத் துறங்காத் திறம்பார்த் திருந்தோர்க்
கயர்ந்தோர்க் களிக்கும் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனந்தாத்
தனந்தாத் தனத்தம் – தனதான

மலம் தோல் சலம் தேற்று எலும்பால் கலந்து
ஈட்டிடும் கூட்டினில் தங்கிடு – மாயம்

மயங்காத் தியங்காப் பயம்(ன்) கோட்டிடும்
காற்றுடன் போக்குற – தந்தையு(ம்) மாதும்

குலம் தாய்க்கு உடம்பால் பிறந்து ஏற்றிடும் கோத்து
அடம் கூப்பிட தம் – புவி யாவும்

குலைந்து ஆர்ப்பு எழும் காட்டில் அம் தாள்கள் அன்பால்
குணம் காத்து உனைக் – கும்பிட ஆளாய்

தலம் தாள் தொடு அண்டாத் தளைந்தார்க்கு இளங்காத்
தடம் தாள் புடைத்த – அன்பினர் வாழத்

தரும் கூத்தரும் பார்த்து உகந்து ஏத்திட அம் சாத்திரம்
சாற்றி நிற்கும் – பெரு வாழ்வே

அலைந்த ஆற்று எழும் கோச் சலம் தீக் கலந்து ஆள்
தரம் போச்சு எனக் – கன்றிடும் வேலா

அறம் காத்து உறங்காத் திறம் பார்த்து இருந்தோர்க்கு
அயர்ந்தோர்க்கு அளிக்கும் – பெருமாளே.

English

malanthOR chalanthEt RelumpAR kalantheet
tidungkUt tinitRang – kidumAya

mayangAth thiyangAp payangkOt tidungkAt
RudanpOk kuRaththan – thaiyumAthum

kulanthAyk kudampAR piRanthEt RidungkOth
thadangkUp pidaththam – puviyAvum

kulainthArp pezhungkAt tilanthAt kaLanpAR
kuNangkAth thunaikkum – pidaALAy

thalanthAt todaNdAth thaLainthArk kiLangAth
thadanthAt pudaiththan – pinarvAzhath

tharungkUth tharumpArth thukanthEth thidanjchAth
thiranjchAt RiniRkum – peruvAzhvE

alainthAt RezhungkOc chalantheek kalanthAt
tarampOc chenakkan – RidumvElA

aRangkAth thuRangAth thiRampArth thirunthOrk
kayarnthOrk kaLikkum – perumALE.

English Easy Version

malam thOl chalam thEtRu elumpAl kalanthu
eettidum kUttinil thangidu – mAyam

mayangAth thiyangAp payam(n) kOttidum
kAtRudan pOkkuRa thanthaiyu(m) – mAthum

kulam thAykku udampAl piRanthu EtRidum kOththu
adam kUppida tham -puvi yAvum

kulainthu Arppu ezhum kAttil am thALkaL anpAl
kuNam kAththu unaik – kumpida ALAy

thalam thAL thodu aNdAth thaLainthArkku iLangkAth
thadam thAL pudaiththa – anpinar vAzhath

tharum kUththarum pArththu ukanthu Eththida
am sAththiram sAtRi niRkum – peru vAzhvE

alaintha AtRu ezhum kOc chalam theek kalanthu AL
tharam pOcchu enak- kanRidum vElA

aRam kAththu uRangAth thiRam pArththu irunthOrkku
ayarnthOrkku aLikkum – perumALE,