திருப்புகழ் 1271 மன நூறு கோடி (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1271 Mananurukodi

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதான தான தந்த தனதான தான தந்த
தனதான தான தந்த – தனதான

மனநூறு கோடி துன்ப நொடிமீதி லேநி னைந்து
மதனூட லேமு யங்கி – யதிரூப

மடமாத ராசை கொண்டு புவிமீதி லேம யங்கி
மதிசீரெ லாம ழிந்து – கொடிதான

வினைமூடி யேதி ரிந்து புவிமீதி லேயு ழன்று
விரகான்மெ யேத ளர்ந்து – விடுநாளில்

விசையான தோகை துங்க மயிலேறி யோடி வந்து
வெளிஞான வீடு தந்து – அருள்வாயே

தினைவேடர் காவல் தங்கு மலைகாடெ லாமு ழன்று
சிறுபேதை கால்ப ணிந்த – குமரேசா

திரையாழி சேது கண்டு பொருராவ ணேசை வென்ற
திருமால்மு ராரி தங்கை – யருள்பாலா

முனிவோர்கள் தேவ ரும்பர் சிறையாக வேவ ளைந்த
முதுசூரர் தானை தங்கள் – கிளையோடு

முடிகோடி தூளெ ழுந்து கழுகோடு பாற ருந்த
முனைவேலி னாலெ றிந்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதான தான தந்த தனதான தான தந்த
தனதான தான தந்த – தனதான

மனநூறு கோடி துன்ப நொடிமீதிலே நினைந்து
மதனூடலே முயங்கி – அதிரூப

மடமாதராசை கொண்டு புவிமீதிலே மயங்கி
மதிசீரெலாம் அழிந்து – கொடிதான

வினைமூடியே திரிந்து புவிமீதிலே யுழன்று
விரகான்மெயே தளர்ந்து – விடுநாளில்

விசையான தோகை துங்க மயிலேறி யோடி வந்து
வெளிஞான வீடு தந்து – அருள்வாயே

தினைவேடர் காவல் தங்கு மலைகாடெலாம் உழன்று
சிறுபேதை கால்பணிந்த – குமரேசா

திரையாழி சேது கண்டு பொரு ராவணேசை வென்ற
திருமால்மு ராரி தங்கை – யருள்பாலா

முனிவோர்கள் தேவர் உம்பர் சிறையாகவே வளைந்த
முதுசூரர் தானை தங்கள் – கிளையோடு

முடிகோடி தூளெழுந்து கழுகோடு பாறருந்த
முனைவேலினால் எறிந்த – பெருமாளே

English

mananURu kOdi thunpa nodimeethi lEni nainthu
mathanUda lEmu yangi – yatheerupa

madamAtha rAsai koNdu puvimeethi lEma yangi
mathiseere lAma zhinthu – kodithAna

vinaimUdi yEthi rinthu puvimeethi lEyu zhanRu
virakAnme yEtha Larnthu – vidunALil

visaiyAna thOkai thunga mayilERi yOdi vanthu
veLinjAna veedu thanthu – aruLvAyE

thinaivEdar kAval thangu malaikAde lAmu zhanRu
siRupEthai kAlpa Nintha – kumarEsA

thiraiyAzhi sEthu kaNdu porurAva NEsai venRa
thirumAlmu rAri thangai – yaruLbAlA

munivOrkaL thEva rumpar siRaiyAka vEva Laintha
muthu cUrar thAnai thangaL – kiLaiyOdu

mudikOdi thULe zhunthu kazhukOdu pARa runtha
munaivEli nAle Rintha – perumALE.

English Easy Version

mananURu kOdi thunpa nodimeethi lEni nainthu
mathanUda lEmu yangi – yatheerupa

madamAtha rAsai koNdu puvimeethi lEma yangi
mathiseere lAma zhinthu – kodithAna

vinaimUdiyE thirinthu puvimeethi lEyu zhanRu
virakAnme yEtha Larnthu – vidunALil

visaiyAna thOkai thunga mayilERi yOdi vanthu
veLinjAna veedu thanthu – aruLvAyE

thinaivEdar kAval thangu malaikAde lAmuzhanRu
siRupEthai kAlpa Nintha – kumarEsA

thiraiyAzhi sEthu kaNdu porurAva NEsai venRa
thirumAlmu rAri thangai – yaruLbAlA

munivOrkaL thEva rumpar siRaiyAka vEva Laintha
muthu cUrar thAnai thangaL – kiLaiyOdu

mudikOdi thULe zhunthu kazhukOdu pARa runtha
munaivEli nAle Rintha – perumALE.