திருப்புகழ் 1274 முருக மயூர (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1274 Murugamayura

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தானத் தானன தனதன தானத் தானன
தனதன தானத் தானன – தனதான

முருகம யூரச் சேவக சரவண ஏனற் பூதரி
முகுளப டீரக் கோமள – முலைமீதே

முழுகிய காதற் காமுக பதிபசு பாசத் தீர்வினை
முதியபு ராரிக் கோதிய – குருவேயென்

றுருகியு மாடிப் பாடியு மிருகழல் நாடிச் சூடியு
முணர்வினோ டூடிக் கூடியும் – வழிபாடுற்

றுலகினொ ராசைப் பாடற நிலைபெறு ஞானத் தாலினி
யுனதடி யாரைச் சேர்வது – மொருநாளே

மருகனெ னாமற் சூழ்கொலை கருதிய மாமப் பாதகன்
வரவிடு மாயப் பேய்முலை – பருகாமேல்

வருமத யானைக் கோடவை திருகிவி ளாவிற் காய்கனி
மதுகையில் வீழச் சாடிய – சதமாபுட்

பொருதிரு கோரப் பாரிய மருதிடை போயப் போதொரு
சகடுதை யாமற் போர்செய்து – விளையாடிப்


பொதுவியர் சேரிக் கேவளர் புயல்மரு காவஜ் ராயுத
புரமதில் மாபுத் தேளிர்கள் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தானத் தானன தனதன தானத் தானன
தனதன தானத் தானன – தனதான

முருக மயூர சேவக சரவண ஏனல் பூ தரி
முகுள படீர கோமள – முலை மீதே

முழுகிய காதல் காமுக பதி பசு பாசத் தீர் வினை
முதிய புராரிக்கு ஓதிய – குருவே என்று

உருகியும் ஆடிப் பாடியும் இரு கழல் நாடிச் சூடியும்
உணர்வினொடு ஊடி கூடியும் – வழி பாடு உற்று

உலகினோர் ஆசைப் பாடு அற நிலை பெறும் ஞானத்தால்
இனி உனது அடியாரைச் சேர்வதும் – ஒரு நாளே

மருகன் எ(ன்)னாமல் சூழ் கொலை கருதிய மாமப் பாதகன்
வர விடு மாயப் பேய் முலை – பருகா மேல்

வரும் மத யானைக் கோடு அவை திருகி விளாவில் காய் கனி
மதுகையில் வீழச் சாடிய அச் – சதம் மா

புள்பொருது இரு கோரப் பாரிய மருது இடை போய் அப்போது ஒரு
சகடு உதையா மல் போர் செய்து – விளையாடி

பொதுவியர் சேரிக்கே வளர் புயல் மருகா வஜ்ராயுத
புரம் அதில் மா புத்தேளிர்கள் – பெருமாளே.

English

muruga mayUra sEvaka saravaNa EnaR bUdhari
mukuLa pateerak kOmaLa – mulaimeedhE

muzhugiya kAdhal kAmuka pathipasu pAsath theervinai
mudhiya purArik Odhiya – guruvE endru

urugiyum Adip pAdiyum iru kazhal nAdich chUdiyum
uNarvino dUdik kUdiyum – vazhi pAdut

ulaginor Asaip pAdaRa nilai peRu nyAnath thAlini
unadhadi yArai sErvadhum – orunALE

marugan enAmal sUzhkolai karudhiya mAma pAthakan
varavidu mAyap pEymulai – parugAmEl

varu madha yAnaik kOdavai thirugi viLAviR kAy kani
madhugaiyil veezhach sAdiya – sadhamA put

poruthiru gOrap pAriya marudhidai pOyap pOdhoru
sagad udhaiyA mar pOr seydhu – viLaiyAdip

podhuviyar sErik kEvaLar puyalmarugA vajrAyudha
puramadhil mA puththE LirgaL – perumALE.

English Easy Version

muruga mayUra sEvaka saravaNa EnaR bUdhari
mukuLa pateerak kOmaLa – mulaimeedhE

muzhugiya kAdhal kAmuka pathipasu pAsath theervinai
mudhiya purArik Odhiya – guruvE endru

urugiyum Adip pAdiyum iru kazhal nAdich chUdiyum
uNarvino dUdik kUdiyum – vazhi pAdutRu

ulaginor Asaip pAdaRa nilai peRu nyAnath thAlini
unadhadi yArai sErvadhum – orunALE

marugan enAmal sUzhkolai karudhiya mAma pAthakan
varavidu mAyap pEymulai – parugA mEl

varu madha yAnaik kOdavai thirugi viLAviR kAy kani
madhugaiyil veezhach sAdi ya – sadhamA put

poruthu iru gOrap pAriya marudhidai pOy appOdhoru
sagad udhaiyA mar pOr seydhu – viLaiyAdi

podhuviyar sErik kEvaLar puyalmarugA vajrAyudha
puramadhil mA puththE LirgaL – perumALE.