திருப்புகழ் 1276 வரிபரந் திரண்டு (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1276 Variparanthirandu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனந் தனந்த தனதனந் தனந்த
தனதனந் தனந்த – தனதான

வரிபரந் திரண்டு நயனமுஞ் சிவந்து
வதனமண் டலங்கள் – குறுவேர்வாய்

மணிசிலம் பலம்ப அளகமுங் குலைந்து
வசமழிந் திழிந்து – மயல்கூர

இருதனங் குலுங்க இடைதுவண் டனுங்க
இனியதொண் டையுண்டு – மடவார்தோள்

இதமுடன் புணர்ந்து மதிமயங் கினும்பொ
னிலகுநின் பதங்கள் – மறவேனே

விரிபரந் தியங்கு முததியுங் கலங்க
விடமினும் பிறந்த – தெனவானோர்

வெருவிநெஞ் சமஞ்சி யுரனொடுந் தயங்கி
விரைபதம் பணிந்து – முறையோவென்

றுரைமறந் துணங்க அயில்தொடும் ப்ரசண்ட
உயர்தலங் குலுங்க – வருதோகை

ஒருபெருஞ் சிகண்டி மயிலமர்ந் திலங்கி
உலகமும் புரந்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனந் தனந்த தனதனந் தனந்த
தனதனந் தனந்த – தனதான

வரி பரந்து இரண்டு நயனமும் சிவந்து
வதன மண்டலங்கள் – குறு வேர்வாய்

மணி சிலம்பு அலம்ப அளகமும் குலைந்து
வசம் அழிந்து இழிந்து – மயல் கூர

இரு தனம் குலுங்க இடை துவண்டு அனுங்க
இனிய தொண்டை உண்டு – மடவார் தோள்

இதமுடன் புணர்ந்து மதி மயங்கினும் பொன்
இலகு நின் பதங்கள் – மறவேனே

விரி பரந்து இயங்கும் உததியும் கலங்க
விடம் இ(ன்)னும் பிறந்தது – என வானோர்

வெருவி நெஞ்சம் அஞ்சி உரனொடும் தயங்கி
விரை பதம் பணிந்து – முறையோ என்று

உரை மறந்து உணங்க அயில் தொடும் ப்ரசண்ட
உயர் தலம் குலுங்க – வரு தோகை

ஒரு பெரும் சிகண்டி மயில் அமர்ந்து இலங்கி
உலகமும் புரந்த – பெருமாளே.

English

variparan thiraNdu nayanamunj chivanthu
vathanamaN dalangaL – kuRuvErvAy

maNisilam palampa aLakamum kulainthu
vasamazhin thizhinthu – mayalkUra

iruthanang kulunga idaithuvaN danunga
iniyathoN daiyuNdu – madavArthOL

ithamudan puNarnthu mathimayan ginumpo
nilakunin pathangaL – maRavEnE

viriparan thiyangu muthathiyum kalanga
vidaminum piRantha – thenavAnOr

veruvinen jamanji yuranodun thayangi
viraipatham paNinthu – muRaiyOven

RuraimaRan thuNanga ayilthodum prasaNda
uyarthalam kulunga – varuthOkai

oruperum sikaNdi mayilamarn thilangi
ulakamum purantha – perumALE.

English Easy Version

vari paranthu iraNdu nayanamum sivanthu
vathana maNdalangaL – kuRu vErvAy

maNi silampu alampa aLakamum kulainthu
vasam azhinthu izhinthu – mayal kUra

iru thanam kulunga idai thuvaNdu anunga
iniya thoNdai uNdu – madavAr thOL

ithamudan puNarnthu mathi mayanginum
pon ilaku nin pathangaL – maRavEnE

viri paranthu iyangum uthathiyum kalanga
vidam i(n)num piRanthathu – ena vAnOr

veruvi nenjam anji uranodum thayangi
virai patham paNinthu – muRaiyO enRu

urai maRanthu uNanga ayil thodum prasaNda
uyar thalam kulunga – varu thOkai

oru perum sikaNdi mayil amarnthu ilangi
ulakamum purantha – perumALE.