திருப்புகழ் 1278 விழையும் மனிதரை (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1278 vizhaiyummanidharai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனன தனதனன தனதனன தனதனன
தத்தத் தனந்தனம் தத்தத் தனந்தனம் – தந்ததான

விழையுமனி தரையுமுநி வரையுமவ ருயிர் துணிய
வெட்டிப் பிளந்துளம் பிட்டுப் பறிந்திடுஞ் – செங்கண்வேலும்

விரையளக முகிலுமிள நகையும்ருக மதகனவி
சித்ரத் தனங்களுந் தித்தித்த தொண்டையும் – புண்டரீகச்

சுழிமடுவு மிடையுமழ கியமகளிர் தருகலவி
சுட்டித் திரிந்திஙன் தட்டுப் படுங்கொடும் – பங்கவாழ்வுந்


தொலைவில்பிற வியுமகல வொருமவுன பரமசுக
சுத்தப் பெரும்பதஞ் சித்திக்க அன்புடன் – சிந்தியாதோ

எழுதரிய அறுமுகமு மணிநுதலும் வயிரமிடை
யிட்டுச் சமைந்தசெஞ் சுட்டிக் கலன்களுந் – துங்கநீள்பன்


னிருகருணை விழிமலரு மிலகுபதி னிருகுழையும்
ரத்நக் குதம்பையும் பத்மக் கரங்களுஞ் – செம்பொனூலும்

மொழிபுகழு முடைமணியு மரைவடமு மடியிணையு
முத்தச் சதங்கையுஞ் சித்ரச் சிகண்டியுஞ் – செங்கைவேலும்


முழுதுமழ கியகுமர கிரிகுமரி யுடனுருகு
முக்கட் சிவன்பெருஞ் சற்புத்ர வும்பர்தந் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தனதனன தனதனன தனதனன தனதனன
தத்தத் தனந்தனம் தத்தத் தனந்தனம் – தந்ததான

விழையும் மனிதரையும் முநிவரையும் அவர் உயிர் துணிய
வெட்டிப் பிளந்து உ(ள்)ளம் பிட்டுப் பறிந்திடும் – செம் கண் வேலும்

விரை அளகம் முகிலும் இள நகையும் ம்ருகமத கனவி
சித்ரத் தனங்களும் தித்தித்த தொண்டையும் – புண்டரீகச்

சுழி மடுவும் இடையும் அழகிய மகளிர் தரு கலவி
சுட்டித் திரிந்து இங்ஙன் தட்டுப் படும் கொடும் – பங்க வாழ்வும்

தொலைவு இல் பிறவியும் அகல ஒரு மவுன பரம சுக
சுத்தப் பெரும் பதம் சித்திக்க அன்புடன் – சிந்தியாதோ

எழுத அரிய அறுமுகமும் அணி நுதலும் வயிரம் இடையிட்டுச்
சமைந்த செம் சுட்டிக் கலன்களும் – துங்க நீள் பன்னிரு

கருணை விழி மலரும் இலகு பதினிரு குழையும்
ரத்நக் குதம்பையும் பத்மக் கரங்களும் – செம் பொன் நூலும்

மொழி புகழும் உடை மணியும் அரை வடமும் அட இணையும்
முத்தச் சதங்கையும் சித்ரச் சிகண்டியும் – செம் கை வேலும்

முழுதும் அழகிய குமர கிரி குமரியுடன் உருகும்
முக்கண் சிவன் பெறும் சற் புத்ர உம்பர் தம் – தம்பிரானே.

English

vizhaiyu manidharaiyu munivaraiyum avar uyir thuNiya
vettip piLandhuLam pittup paRindhidum – senkaN vElum

virai aLaga mugilum iLanagaiyu mrugamadha gana vi
chithrath thanangaLum thiththithath thoNdaiyum – pundareeka


suzhimaduvum idaiyum azhagiya magaLir tharu kalavi
suttith thirindhingan thattuppadu kodum – pangavAzhvum

tholaivil piRaviyum agala oru mavuna paramasuka
sudhdha perumpadhan sidhdhikka anbudan – chinthiyAdhO

ezhudhariya aRumugamu maNinudhalum vayiramidai
ittuch samaindha sensuttik kalangaLum – thunganeeL pan

nirukaruNai vizhimalarum ilagu padhiniru kuzhaiyum
rathna kudhambaiyum padhmak karangaLum – sempon nUlum

mozhipugazhum udaimaNiyum araivadamum adiyiNaiyu
muththach chadhangaiyum chithrach chikaNdiyum – senkai vElum

muzhudhum azhagiya kumara girikumari udan urugu
mukkat sivanpeRun saRputhra umbarthan – thambirAnE.

English Easy Version

vizhaiyu manidharaiyu munivaraiyum avar uyir thuNiya
vettip piLandhu uLam pittup paRindhidum – senkaN vElum

virai aLaga mugilum iLanagaiyu mrugamadha gana
vichithrath thanangaLum thiththithath thoNdaiyum – pundareeka

suzhimaduvum idaiyum azhagiya magaLir tharu kalavi
suttith thirindhu ingan thattuppadu kodum -pangavAzhvum

tholaivil piRaviyum agala oru mavuna paramasuka
sudhdha perumpadhan sidhdhikka anbudan – chinthiyAdhO

ezhudhariya aRumugamu maNinudhalum vayiramidai ittuch samaindha sensuttik kalangaLum – thunganeeL panniru

Karunai vizhimalarum ilagu padhiniru kuzhaiyum
rathna kudhambaiyum padhmak karangaLum – sempon nUlum

mozhipugazhum udaimaNiyum araivadamum adiyiNaiyu
muththach chadhangaiyum chithrach chikaNdiyum – senkai vElum

muzhudhum azhagiya kumara girikumari udan urugu
mukkat sivanpeRun saRputhra umbarthan – thambirAnE