திருப்புகழ் 1279 வீணை இசை (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1279 Veenaiisai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானதன தாத்த தானதன தாத்த
தானதன தாத்த – தனதான

வீணையிசை கோட்டி யாலமிட றூட்டு
வீரமுனை யீட்டி – விழியார்தம்

வேதனையில் நாட்ட மாகியிடர் பாட்டில்
வீழுமயல் தீட்டி – யுழலாதே

ஆணியுள வீட்டை மேவியுள மாட்டை
யாவலுட னீட்டி – யழியாதே

ஆவியுறை கூட்டில் ஞானமறை யூட்டி
யானநிலை காட்டி – யருள்வாயே

கேணியுற வேட்ட ஞானநெறி வேட்டர்
கேள்சுருதி நாட்டி – லுறைவோனே

கீதவிசை கூட்டி வேதமொழி சூட்டு
கீரரியல் கேட்ட – க்ருபைவேளே

சேணினுயர் காட்டில் வாழுமற வாட்டி
சீதவிரு கோட்டி – லணைவோனே

சீறவுணர் நாட்டி லாரவழல் மூட்டி
தேவர்சிறை மீட்ட – பெருமாளே.

பதம் பிரித்தது

தானதன தாத்த தானதன தாத்த
தானதன தாத்த – தனதான

வீணை இசை கோட்டி ஆலம் இடறு ஊட்டு
வீர(ம்) முனை ஈட்டி – விழியார் தம்

வேதனையில் நாட்டம் ஆகி இடர் பாட்டில்
வீழும் மயல் தீட்டி – உழலாதே

ஆணி உள வீட்டை மேவி உளம் மாட்டை
ஆவலுடன் ஈட்டி – அழியாதே

ஆவி உறை கூட்டில் ஞான மறை ஊட்டி
ஆன நிலை காட்டி – அருள்வாயே

கேணி உற வேட்ட ஞான நெறி வேட்டர்
கேள் சுருதி நாட்டில் – உறைவோனே

கீத இசை கூட்டி வேத மொழி சூட்டு
கீரர் இயல் கேட்ட – க்ருபை வேளே

சேணின் உயர் காட்டில் வாழும் மறவாட்டி
சீத இரு கோட்டில் – அணைவோனே

சீறு அவுணர் நாட்டில் ஆர அழல் மூட்டி
தேவர் சிறை மீட்ட – பெருமாளே.

English

veeNaiyisai kOtti yAlamida RUttu
veeramunai yeetti – vizhiyArtham

vEthanaiyil nAtta mAkiyidar pAttil
veezhumayal theetti – yuzhalAthE

ANiyuLa veettai mEviyuLa mAttai
yAvaluda neetti – yazhiyAthE

AviyuRai kUttil njAnamaRai yUtti
yAnanilai kAtti – yaruLvAyE

kENiyuRa vEtta njAnaneRi vEttar
kELsuruthi nAtti – luRaivOnE

keethavisai kUtti vEthamozhi cUttu
keerariyal kEtta – krupaivELE

sENinuyar kAttil vAzhumaRa vAtti
seethaviru kOtti – laNaivOnE

seeRavuNar nAtti lAravazhal mUtti
thEvarsiRai meetta – perumALE.

English Easy Version

veeNai isai kOtti Alam idaRu Uttu
veera(m) munai eetti – vizhiyAr tham

vEthanaiyil nAttam Aki idar pAttil
veezhum mayal theetti – uzhalAthE

ANi uLa veettai mEvi uLam mAttai
Avaludan eetti – azhiyAthE

Avi uRai kUttil njAna maRai Utti
Ana nilai kAtti – aruLvAyE

kENi uRa vEtta njAna neRi vEttar
kEL suruthi nAttil – uRaivOnE

keetha isai kUtti vEtha mozhi cUttu
keerar iyal kEtta – krupai vELE

sENin uyar kAttil vAzhum maRavAtti
seetha iru kOttil – aNaivOnE

seeRu avuNar nAttil Ara azhal mUtti
thEvar siRai meetta – perumALE.