திருப்புகழ் 1284 கருப்பையில் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1284 Karuppaiyil

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்த தத்தத் தனத்த தத்தத் தனத்த – தனதான

கருப்பை யிற்சுக் கிலத் துலைத்துற் பவித்து – மறுகாதே
கபட்ட சட்டர்க் கிதத்த சித்ரத் தமிழ்க்க – ளுரையாதே


விருப்ப முற்றுத் துதித்தெ னைப்பற் றெனக்க – ருதுநீயே
வெளிப்ப டப்பற் றிடப்ப டுத்தத் தருக்கி – மகிழ்வோனே

பருப்ப தத்தைத் தொளைத்த சத்திப் படைச்ச – மரவேளே
பணிக்கு லத்தைக் கவர்ப்ப தத்துக் களித்த – மயிலோனே

செருப்பு றத்துச் சினத்தை முற்றப் பரப்பு – மிசையோனே
தினைப்பு னத்துக் குறத்தி யைக்கைப் பிடித்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்த தத்தத் தனத்த தத்தத் தனத்த – தனதான

கருப்பையிற் சுக்கிலத்து உலைத்து உற்பவித்து – மறுகாதே.
கபட்டு அசட்டர்க்கு இதத்த சித்ரத் தமிழ்க்கள் – உரையாதே

விருப்பமுற்றுத் துதித்து எனைப்பற்று – எனக்கருதுநீயே
வெளிப்படப் பற்றிடப் படுத்தத் தருக்கி – மகிழ்வோனே

பருப்பதத்தைத் தொளைத்த சத்திப் படைச் – சமரவேளே
பணிக்குலத்தைக் கவர்ப்பதத்துக்கு அளித்த – மயிலோனே

செருப்புறத்துச் சினத்தை முற்றப் பரப்பும் – இசையோனே
தினைப்புனத்துக் குறத்தியைக்கைப் பிடித்த – பெருமாளே.

English

karuppai yiRsuk kilath thulaiththuR paviththu – maRukAthE
kapatta sattark kithaththa cithrath thamizhkka – LuraiyAthE

viruppa muRRuth thuthiththe naippaR Renakka – ruthuneeyE
veLippa dappaR Ridappa duththath tharukki – makizhvOnE

paruppa thaththaith thoLaiththa saththip padaicca – maravELE
paNikku laththaik kavarppa thaththuk kaLiththa – mayilOnE

seruppu Raththuc cinaththai muRRap parappu – misaiyOnE
thinaippu naththuk kuRaththi yaikkaip pidiththa – perumALE.

English Easy Version

karuppai yiRsuk kilath thulaiththuR paviththu – maRukAthE
kapatta sattark kithaththa cithrath thamizhkkaL – uraiyAthE

viruppa muRRuth thuthiththe naippaR Renakkaruthu – neeyE
veLippa dappaR Ridappa duththath tharukki – makizhvOnE

paruppa thaththaith thoLaiththa saththip padaicca – maravELE
paNikku laththaik kavarppa thaththuk kaLiththa – mayilOnE

seruppu Raththuc cinaththai muRRap parappum – isaiyOnE
thinaippu naththuk kuRaththi yaikkaip pidiththa – perumALE