Thiruppugal 1289 Sinaththuchcheeriya
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனத்தத் தானன – தனதான
சினத்துச் சீறிய – வழிகாணச்
சிரித்துப் பேசியு – மயல்பூண
கனத்துப் போர்செயு – முலைதோணக்
கலைக்குட் பாதியு – மறைவாக
மனத்துக் காறுதல் – வருமாறு
மலைப்பப் பேணியு – மிகவாய
தனத்தைச் சூறைகொள் – மடவார்தம்
சதிக்குப் போம்வழி – தவிர்வேனோ
தெனத்தத் தாதென – எனவேபண்
திருத்தத் தோடளி – யிசைபாடும்
புனத்துக் காவல்கொள் – குறமாதின்
புணர்ச்சிக் கேயொரு – வழிதேடி
இனத்துக் காவல – ரறியாமல்
இணக்கித் தோகையை – மகிழ்வோயென்
றெனக்குத் தாளிணை – யருள்வாய்சூர்
இறக்கப் போர்செய்த – பெருமாளே.
பதம் பிரித்தது
தனத்தத் தானன – தனதான
சினத்துச் சீறிய – வழி காணச்
சிரித்துப் பேசியும் – மயல் பூண
கனத்துப் போர் செயும் – முலை தோணக்
கலைக்குள் பாதியும் – மறைவாக
மனத்துக்கு ஆறுதல் – வருமாறு
மலைப்பப் பேணியும் – மிகவாய
தனத்தைச் சூறை கொள் – மடவார்
தம் சதிக்குப் போம் வழி – தவிர்வேனோ
தெனத்தத் தாதென – எனவே பண்
திருத்தத்தோடு அளி – இசை பாடும்
புனத்துக் காவல் கொள் – குற மாதின்
புணர்ச்சிக்கே ஒரு – வழி தேடி
இனத்துக் காவலர் – அறியாமல்
இணக்கித் தோகையை – மகிழ்வோய்
என்று எனக்குத் தாளினை – அருள்வாய்
சூர் இறக்கப் போர் செய்த – பெருமாளே
English
sinaththuchcheeRiya – vazhikANa
siriththup pEsiyu – mayalpUNa
kanaththup pOrseyu – mulaithONak
kalaikkut pAthiyu – maRaivAka
manaththuk kARuthal – varumARu
malaippap pENiyu – mikavAya
thanaththaich chURaikoL – madavArtham
sathikkup pOmvazhi – thavirvEnO
thenaththath thAthena – enavEpaN
thiruththath thOdaLi – yisaipAdum
punaththuk kAvalkoL – kuRamAthin
puNarcchik kEyoru – vazhithEdi
inaththuk kAvala – raRiyAmal
iNakkith thOkaiyai – makizhvOyen
Renakkuth thALiNai – yaruLvAycUr
iRakkap pOrseytha – perumALE.
English Easy Version
sinaththuch cheeRiya – vazhi kANach
chiriththup pEsiyum – mayal pUNa
kanaththup pOr seyum – mulai thONak
kalaikkuL pAthiyum – maRaivAka
manaththukku ARuthal – varumARu
malaippap pENiyum – mikavAya
thanaththaich chURai koL – madavAr
tham sathikkup pOm vazhi – thavirvEnO
thenaththath thAthena – enavE paN
thiruththaththOdu aLi – isai pAdum
punaththuk kAval koL – kuRa mAthin
puNarcchikkE oru – vazhi thEdi
inaththuk kAvalar – aRiyAmal
iNakkiththOkaiyai – makizhvOy
enRu enakkuth thALinai – aruLvAy
cUr iRakkap pOr seytha perumALE