திருப்புகழ் 1300 புத்தகத்து ஏட்டில் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1300 Puththagaththuettil

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல்

தத்தனத் தாத்தத் தாத்த – தனதான

புத்தகத் தேட்டிற் றீட்டி – முடியாது
பொற்புறக் கூட்டிக் காட்டி – யருள்ஞான
வித்தகப் பேற்றைத் தேற்றி – யருளாலே
மெத்தெனக் கூட்டிக் காக்க – நினைவாயே

தத்தைபுக் கோட்டிக் காட்டி – லுறைவாளைச்
சற்கரித் தேத்திக் கீர்த்தி – பெறுவோனே
கைத்தலத் தீக்குப் பார்த்து – நுழையாத
கற்பகத் தோப்புக் காத்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்தனத் தாத்தத் தாத்த – தனதான

புத்தகத்து ஏட்டில் தீட்டி – முடியாது
பொற்புறக் கூட்டிக் காட்டி – அருள்ஞான
வித்தகப் பேற்றைத் தேற்றி – அருளாலே
மெத்தெனக் கூட்டிக் காக்க – நினைவாயே

தத்தை புக்கு ஓட்டிக் காட்டில் – உறைவாளை
சற்கரித்து ஏத்திக் கீர்த்தி – பெறுவோனே
கைத்தலத்து ஈக் குப்பு ஆர்த்து – நுழையாத
கற்பகத் தோப்புக் காத்த – பெருமாளே.

English

puththakath thEttiR Reetti – mudiyAthu
poRpuRak kUttik kAtti – yaruLnjAna
viththakap pEtRaith thEtRi – yaruLAlE
meththenak kUttik kAkka – ninaivAyE

thaththaipuk kOttik kAtti – luRaivALai
saRkarith thEththik keerththi – peRuvOnE
kaiththalath theekkup pArththu – nuzhaiyAtha
kaRpakath thOppuk kAththa – perumALE.

English Easy Version

puththakaththu Ettil theetti – mudiyAthu
poRpuRak kUttik kAtti – aruLnjAna
viththakap pEtRaith thEtRi – aruLAlE
meththenak kUttik kAkka – ninaivAyE

thaththai pukku Ottik kAttil – uRaivALai
saRkariththu Eththik keerththi – peRuvOnE
kaiththalaththu eek kuppu Arththu – nuzhaiyAtha
kaRpakath thOppuk kAththa – perumALE.