திருப்புகழ் 1309 காரணமதாக (பழமுதிர்ச்சோலை)

Thiruppugal 1309 Karanamadhaga

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானதன தான தந்த – தனதான

காரணம தாக வந்து – புவிமீதே
காலனணு காதி சைந்து – கதிகாண

நாரணனும் வேதன் முன்பு – தெரியாத
ஞானநட மேபு ரிந்து – வருவாயே

ஆரமுத மான தந்தி – மணவாளா
ஆறுமுக மாறி ரண்டு – விழியோனே

சூரர்கிளை மாள வென்ற – கதிர்வேலா
சோலைமலை மேவி நின்ற – பெருமாளே.

பதம் பிரித்தது

தானதன தான தந்த – தனதான

English

kAraNam adhAga vandhu – buvimeedhE
kAlan aNugAdh isaindhu – gathi kANa

nAraNanum vEdhan munbu – theriyAdha
nyAna natamE purindhu – varuvAyE

Ar amudhamAna thandhi – maNavALA
ARumugam ARiraNdu – vizhiyOnE

sUrar kiLai mALa vendra – kadhirvElA
sOlai malai mEvi nindra – perumALE.

English Easy Version