திருப்புகழ் 145 குரம்பை மலசலம் (பழநி)

Thirupugal 145 Kurambaimalasalam

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனந்த தனதன தனதன தனதன
தனந்த தனதன தனதன தனதன
தனந்த தனதன தனதன தனதன – தனதான

குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு
எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி
குலைந்த செயிர்மயிர் குருதியொ டிவைபல – கசுமாலக்

குடின்பு குதுமவ ரவர்கடு கொடுமையர்
இடும்ப ரொருவழி யிணையிலர் கசடர்கள்
குரங்க ரறிவிலர் நெறியிலர் மிருகணை – விறலான

சரம்ப ருறவனை நரகனை துரகனை
இரங்கு கலியனை பரிவுறு சடலனை
சவுந்த ரிகமுக சரவண பதமொடு – மயிலேறித்

தழைந்த சிவசுடர் தனையென மனதினில்
அழுந்த வுரைசெய வருமுக நகையொளி
தழைந்த நயனமு மிருமலர் சரணமு – மறவேனே

இரும்பை வகுளமொ டியைபல முகில்பொழி
லுறைந்த குயிலளி யொலிபர விடமயி
லிசைந்து நடமிடு மிணையிலி புலிநகர் – வளநாடா

இருண்ட குவடிடி பொடிபட வெகுமுக
டெரிந்து மகரமொ டிசைகரி குமுறுக
இரைந்த அசுரரொ டிபபரி யமபுரம் – விடும்வேளே

சிரம்பொ னயனொடு முநிவர்க ளமரர்கள்
அரம்பை மகளிரொ டரகர சிவசிவ
செயம்பு வெனநட மிடுபத மழகியர் – குருநாதா

செழும்ப வளவொளி நகைமுக மதிநகு
சிறந்த குறமக ளிணைமுலை புதைபட
செயங்கொ டணைகுக சிவமலை மருவிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தனந்த தனதன தனதன தனதன
தனந்த தனதன தனதன தனதன
தனந்த தனதன தனதன தனதன – தனதான

குரம்பை மல(ம்) சலம் வழுவளு நிணமொடு
எலும்பு அணி சரி தசை இரல் குடல் நெதி
குலைந்த செயிர் மயிர் குருதியொடு இவை பல – கசுமாலம்

குடின் புகுதும் அவர் அவர் கடு கொடுமையர்
இடும்பர் ஒரு வழி இணை இலர் கசடர்கள்
குரங்கர் அறிவிலர் நெறி இலர் மிருகணை – விறல் ஆனசரம்பர்

உறவனை நரகனை துரகனை
இரங்கு கலியனை பரிவு உறு சடலனை
சவுந்தரிக முக சரவண பதமொடு – மயிலேறி

தழைந்த சிவ சுடர் தனை என் மனதினில்
அழுந்த உரை செய வரு முக நகை ஒளி
தழைந்த நயனமும் இரு மலர் சரணமும் – மறவேனே

இரும்பை வகுளமொடு இயை பல முகில் பொழில்
உறைந்த குயில் அளி ஒலி பரவிட மயில்
இசைந்து நடமிடும் இணையிலி புலி நகர் – வள நாடா

இருண்ட குவடு இடி பொடிபட வெகு முகடு
எரிந்து மகரம் ஒள் திசை கரி குமுறுக
இரைந்த அசுரரொடு இப பரி யமபுரம் – விடும் வேளே

சிரம் பொன் அயனொடு முநிவர்கள் அமரர்கள்
அரம்பை மகளிர் ஒடு அரகர சிவ சிவ
செயம்பு என நடம் இடு பதம் அழகியர் – குரு நாதா

செழும் பவள ஒளி நகை முக மதி நகு
சிறந்த குற மகள் இணை முலை புதை பட
செயம் கொடு அணை குக சிவ மலை மருவிய – பெருமாளே.

English

kurambai malajalam vazhuvaLu niNamodu
elumbu aNisari dhasaiyiral kudalnedhi
kulaindha seyirmayir kurudhiyo divaipala – kasumAla

kudinpu gudhumavar avarkadu kodumaiyar
idumbar oru azhi iNaiyilar kasadargaL
kurangar aRivilar neRiyilar mirugaNai – viRalAna

sarambar uRavanai naraganai thuraganai
irangu kaliyanai parivuRu sadalanai
savundha rikamuka saravaNa padhamodu – mayilERi

thazhaindha sivasudar thanaiena manadhinil
azhundha uraiseya varumuga nagaiyoLi
thazhaindha nayanamum irumalAr charaNamum – maRavEnE

irumbai vaguLamo diyaipala mugilpozhil
uRaindha kuyilaLi olipara vidamayil
isaindhu nadamidum iNaiyili pulinagar – vaLanAdA

iruNda kuvadidi podipada vegumuka
derindhu makaramo disaikari kumuRuga
iraindha asuraro dibapari yamapuram – vidumvELE

sirampon ayanodu munivargaL amarargaL
arambai magaLiro darahara sivasiva
seyambu venanada midupadham azhagiyar – gurunAthA

sezhumpa vaLaoLi nagaimuka madhinagu
siRandha kuRamagaL iNaimulai pudhaipada
jeyanko daNaiguha sivamalai maruviya – perumALE.

English Easy Version

kurambai malajalam vazhu vaLu niNamodu
elumbu aNisari dhasaiyiral kudal nedhi
kulaindha seyirmayir kurudhiyodu ivaipala – kasumAla

kudin pugudhum avar avar kadu kodumaiyar
idumbar oru vazhi iNaiyilar kasadargaL
kurangar aRivilar neRiyilar mirugaNai – viRalAna

Sarambar uRavanai naraganai thuraganai
irangu kaliyanai parivuRu sadalanai
savundharika muka saravaNa padhamodu – mayilERi

thazhaindha sivasudar thanai ena manadhinil
azhundha uraiseya varumuga nagaiyoLi
thazhaindha nayanamum irumalAr charaNamum – maRavEnE

irumbai vaguLamo diyaipala mugil pozhil
uRaindha kuyil aLi oli paravida mayil
isaindhu nadamidum iNaiyili pulinagar – vaLanAdA

iruNda kuvadidi podipada vegumuka
derindhu makaram od isaikari kumuRuga
iraindha asurarod ibapari yamapuram – vidum vELE

siram pon ayanodu munivargaL amarargaL
arambai magaLiro darahara sivasiva
Seyambuvena nadamidu padham azhagiyar – gurunAthA

sezhum pavaLa oLi nagaimuka madhi nagu
siRandha kuRamagaL iNaimulai pudhai pada
jeyankodu aNai guha sivamalai maruviya – perumALE.