திருப்புகழ் 177 புடைசெப் பென (பழநி)

Thirupugal 177 Pudaiseppena (Pazhani)

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் – தனதான

புடைசெப் பெனமுத் தணிகச் சறவுட்
பொருமிக் கலசத் – திணையாய

புளகக் களபக் கெருவத் தனமெய்ப்
புணரத் தலையிட் – டமரேசெய்

அடைவிற் றினமுற் றவசப் படுமெற்
கறிவிற் பதடிக் – கவமான

அசடற் குயர்வொப் பதில்நற் க்ருபையுற்
றடிமைக் கொருசொற் – புகல்வாயே

குடமொத் தகடக் கரடக் கலுழிக்
குணமெய்க் களிறுக் – கிளையோனே

குடிபுக் கிடமிட் டசுரப் படையைக்
குறுகித் தகரப் – பொரும்வேலா

படலைச் செறிநற் கதலிக் குலையிற்
பழமுற் றொழுகப் – புனல்சேர்நீள்

பழனக் கரையிற் கழைமுத் துகுநற்
பழநிக் குமரப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் – தனதான

புடை செப்பு என முத்து அணி கச்சு அற உள்
பொருமிக் கலசத்து – இணையாய

புளகக் களபக் கெருவத் தன மெய்ப்
புணரத் தலை இட்டு – அமரே செய்

அடைவில் தினம் உற்று அவசப்படும் எற்கு
அறிவில் பதடிக்கு – அவமான

அசடற்கு உயர் ஒப்பது இல் நல் க்ருபை உற்று
அடிமைக்கு ஒரு சொல் – புகல்வாயே

குடம் ஒத்த கடக் கரடக் கலுழிக்
குணம் மெய்க் களிறுக்கு – இளையோனே

குடி புக்கிட மி(மீ)ட்டு அசுரப் படையைக்
குறுகித் தகரப் – பொரும் வேலா

படலைச் செறி நல் கதலிக் குலையில்
பழம் முற்(றி) ஒழுகப் – புனல் சேர் நீள்

பழனக் கரையில் கழை முத்து உகு நல்
பழநிக் குமரப் – பெருமாளே.

English

pudaichep penamuth thaNikac chaRavut
porumik kalasath – thiNaiyAya

puLakak kaLapak keruvath thanameyp
puNarath thalaiyit – tamarEsey

adaivit Rinamut Ravasap padumeR
kaRiviR pathadik – kavamAna

asadaR kuyarvop pathilnaR krupaiyut
Radimaik korusoR – pukalvAyE

kudamoth thakadak karadak kaluzhik
kuNameyk kaLiRuk – kiLaiyOnE

kudipuk kidamit tasurap padaiyaik
kuRukith thakarap – porumvElA

padalaic cheRinaR kathalik kulaiyiR
pazhamut Rozhukap – punalsErneeL

pazhanak karaiyiR kazhaimuth thukunaR
pazhanik kumarap – perumALE.

English Easy Version

pudai cheppu ena muththu aNi kacchu aRa uL
porumik kalasaththu – iNaiyAya

puLakak kaLapak keruvath thana meyp
puNarath thalai ittu – amarE sey

adaivil thinam utRu avasappadum eRku
aRivil pathadikku – avamAna

asadaRku uyar oppathu il nal krupai
utRu adimaikku oru sol – pukalvAyE

kudam oththa kadak karadak kaluzhik
kuNam meyk kaLiRukku – iLaiyOnE

kudi pukkida mi(mee)ttu asurap padaiyaik
kuRukith thakarap – porum vElA

padalaic cheRi nal kathalik kulaiyil
pazham mutR(i) ozhukap – punal sEr neeL

pazhanak karaiyil kazhai muththu uku nal
pazhanik kumarap – perumALE.