Thiruppugazh 19 Kondhumisai Vadaththai Minjiya
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன – தனதான
வடத்தை மிஞ்சிய புளகித வனமுலை
தனைத்தி றந்தெதிர் வருமிளை ஞர்களுயிர்
மயக்கி ஐங்கணை மதனனை ஒருஅரு – மையினாலே
வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெல
நகைத்து நண்பொடு வருமிரும் எனஉரை
வழுத்தி அங்கவ ரொடுசரு வியுமுடல் – தொடுபோதே
விடத்தை வென்றிடு படைவிழி கொடுமுள
மருட்டி வண்பொருள் கவர்பொழு தினில்மயல்
விருப்பெ னும்படி மடிமிசை யினில்விழு – தொழில்தானே
விளைத்தி டும்பல கணிகையர் தமதுபொய்
மனத்தை நம்பிய சிறியனை வெறியனை
விரைப்ப தந்தனில் அருள்பெற நினைகுவ – துளதோதான்
குடத்தை வென்றிரு கிரியென எழில்தள
தளத்த கொங்கைகள் மணிவடம் அணிசிறு
குறக்க ரும்பின்மெய் துவள்புயன் எனவரு – வடிவேலா
குரைக்க ருங்கடல் திருவணை எனமுனம்
அடைத்தி லங்கையின் அதிபதி நிசிசரர்
குலத்தொ டும்பட ஒருகணை விடுமரி – மருகோனே
திடத்தெ திர்ந்திடும் அசுரர்கள் பொடிபட
அயிற்கொ டும்படை விடுசர வணபவ
திறற்கு கன்குரு பரனென வருமொரு – முருகோனே
செழித்த தண்டலை தொறுமில கியகுட
வளைக்கு லந்தரு தரளமு மிகுமுயர்
திருப்ப ரங்கிரி வளநகர் மருவிய – பெருமாளே.
பதம் பிரித்தது
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன – தனதான
வடத்தை மிஞ்சிய புளகித வன முலைதனைத்
திறந்து எதிர் வரும் இளைஞர்கள் உயிர்
மயக்கி ஐங்கணை மதனனை ஒரு – அருமையினாலே
வருத்தி வஞ்சக நினைவோடு மெ(ல்)ல மெ(ல்)ல
நகைத்து நண்பொடு வரும் இரும் என உரை
வழுத்தி அங்கு அவரோடு சருவியும் உடல் – தொடு போதே
விடத்தை வென்றிடு படை விழி கொ(ண்)டும் உ(ள்)ள(ம்)
மருட்டி வண் பொருள் கவர் பொழுதினில் மயல்
விருப்பு எனும்படி மடி மிசையினில் விழு – தொழில் தானே
விளைத்திடும் பல கணிகையர் தமது பொய்
மனத்தை நம்பிய சிறியனை வெறியனை
விரைப் பதம் தனில் அருள் பெற நினைகுவது – உளதோ தான்
குடத்தை வென்றிடு கிரி என எழில் தளதளத்த
கொங்கைகள் மணி வடம் அணி சிறு
குறக் கரும்பின் மெய் துவள் புயன் என வரு(ம்) – வடிவேலா
குரைக் கரும் கடல் திரு அணை என மு(ன்)னம்
அடைத்து இலங்கையின் அதிபதி நிசிசரர்
குலத்தொடும் பட ஒரு கணை விடும் – அரி மருகோனே
திடத்து எதிர்ந்திடும் அசுரர்கள் பொடிபட
அயில் கொடும் படை விடு சரவணபவ
திறற் குகன் குருபரனென வருமொரு – முருகோனே
செழித்த தண்டலை தொறும் இலகிய குட
வளைக் குலம் தரு தரளமும் மிகும் உயர்
திருப்பரங்கிரி வள நகர் மருவிய – பெருமாளே.
English
vadaththai minjiya puLakitha vanamulai
thanaiththi Ranthethir varumiLai njarkaLuyir
mayakki aingaNai mathananai oruaru – maiyinAlE
varuththi vanjaka ninaivodu melamela
nakaiththu naNpodu varumirum enaurai
vazhuththi angava rodusaru viyumudal – thodupOthE
vidaththai venRidu padaivizhi kodumuLa
marutti vaNporuL kavarpozhu thinilmayal
viruppe numpadi madimisai yinilvizhu – thozhilthAnE
viLaiththi dumpala kaNikaiyar thamathupoy
manaththai nampiya siRiyanai veRiyanai
viraippa thanthanil aruLpeRa ninaikuva – thuLathOthAn
kudaththai venRiru kiriyena ezhilthaLa
thaLaththa kongaikaL maNivadam aNisiRu
kuRakka rumpinmey thuvaLpuyan enavaru – vadivElA
kuraikka rumkadal thiruvaNai enamunam
adaiththi langaiyin athipathi nisisarar
kulaththo dumpada orukaNai vidumari – marukOnE
thidaththe thirnthidum asurarkaL podipada
ayiRko dumpadai vidusara vaNapava
thiRaRku kankuru paranena varumoru – murukOnE
sezhiththa thaNdalai thoRumila kiyakuda
vaLaikku lantharu tharaLamu mikumuyar
thiruppa rangkiri vaLanakar maruviya – perumALE.
English Easy Version
vadaththai minjiya puLakitha vana
mulaithanaith thiRanthu ethir varum iLainjarkaL uyir
mayakkiaingaNai mathananai oru – arumaiyinAlE
varuththi vanjaka ninaivOdu me(l)la me(l)la
nakaiththu naNpodu varum irum ena urai
vazhuththi angu avarOdu saruviyum udal – thodu pOthE
vidaththai venRidu padai vizhi ko(N)dum u(L)La(m)
marutti vaN poruL kavar pozhuthinil mayal
viruppu enumpadi madi misaiyinil vizhu – thozhil thAnE
viLaiththidum pala kaNikaiyar thamathu poy
manaththai nampiya siRiyanai veRiyanai
viraip patham thanil aruL peRa ninaikuvathu – uLathO thAn
kudaththai venRidu kiri ena ezhil thaLa
thaLaththa kongkaikaL maNi vadam aNi siRu
kuRak karumpin mey thuvaL puyan ena varu(m) – vadivElA
kuraik karum kadal thiru aNai ena mu(n)nam
adaiththu ilangaiyin athipathi nisisarar
kulaththodum pada oru kaNai vidum ari – marukOnE
thidaththu ethirnthidum asurarkaL podipada
ayil kodum padai vidu saravaNapava
thiRaR gukan guruparanena varumoru – murukOnE
sezhiththa thaNdalai thoRum ilakiya kuda
vaLaik kulam tharu tharaLamum mikum uyar
thirupparangkiri vaLa nakar maruviya – perumALE.