திருப்புகழ் 211 கறை படும் உடம்பு (சுவாமிமலை)

Thirupugal 211 Karaipadumudambu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனன தந்த தானனத்
தனதனன தந்த தானனத்
தனதனன தந்த தானனத் தனதான

கறைபடுமு டம்பி ராதெனக்
கருதுதலொ ழிந்து வாயுவைக்
கருமவச னங்க ளால்மறித் – தனலூதிக்

கவலைபடு கின்ற யோககற்
பனைமருவு சிந்தை போய்விடக்
கலகமிடு மஞ்சும் வேரறச் – செயல்மாளக்

குறைவறநி றைந்த மோனநிர்க்
குணமதுபொ ருந்தி வீடுறக்
குருமலைவி ளங்கு ஞானசற் – குருநாதா

குமரசர ணென்று கூதளப்
புதுமலர்சொ ரிந்து கோமளப்
பதயுகள புண்ட ரீகமுற் – றுணர்வேனோ

சிறைதளைவி ளங்கு பேர்முடிப்
புயலுடன டங்க வேபிழைத்
திமையவர்கள் தங்க ளூர்புகச் – சமராடித்

திமிரமிகு சிந்து வாய்விடச்
சிகரிகளும் வெந்து நீறெழத்
திகிரிகொள நந்த சூடிகைத் – திருமாலும்

பிறைமவுலி மைந்த கோவெனப்
பிரமனைமு னிந்து காவலிட்
டொருநொடியில் மண்டு சூரனைப் – பொருதேறிப்

பெருகுமத கும்ப லாளிதக்
கரியெனப்ர சண்ட வாரணப்
பிடிதனைம ணந்த சேவகப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனன தந்த தானனத்
தனதனன தந்த தானனத்
தனதனன தந்த தானனத் தனதான

கறை படும் உடம்பு இராது என
கருதுதல் ஒழிந்து வாயுவை
கரும வசனங்களால் மறித்து – அனல் ஊதி

கவலைப் படுகின்ற யோக
கற்பனை மருவு சிந்தை போய் விட
கலகமிடும் அஞ்சும் வேர் அற – செயல் மாள

குறைவு அற நிறைந்த மோன
நிர்க்குணம் அது பொருந்தி வீடு உற
குரு மலை விளங்கும் ஞான சற் – குரு நாதா

குமர சரண் என்று கூதள
புது மலர் சொரிந்து கோமள
பத யுகளம் புண்டரீகம் உற்று – உணர்வேனோ

சிறைத் தளை விளங்கும் பேர் முடிப்
புயல் உடன் அடங்கவே பிழைத்து
இமையவர்கள் தங்கள் ஊர் புக – சமர் ஆடி

திமிர மிகு சிந்து வாய் விட
சிகரிகளும் வெந்து நீர் எழ
திகிரி கொள் அநந்தம் சூடிகை – திருமாலும்

பிறை மவுலி மைந்த கோ என
பிரமனை முனிந்து காவல்இட்டு
ஒரு நொடியில் மண்டு சூரனை – பொருதேறி

பெருகு மத கும்ப லாளிதம்
கரி என ப்ரசண்ட வாரணப்
பிடி தனை மணந்த சேவக – பெருமாளே.

English

kaRai padum udambi rAdhenak
karudhudhal ozhindhu vAyuvaik
karuma vachanangaLal maRiththu – analUdhi

kavalai padugindra yOga kaR
panai maruvu chindhai pOyvidak
kalagam idum anjum vEraRa – cheyal mALa

kuRaivaRa niRaindha mOna nir
guNamadhu porundhi veeduRa
gurumalai viLangu nyAna saR – gurunAthA

kumara saraNendru kUdhaLa
pudhu malar sorindhu kOmaLa
padhayugaLa pundareekam utr – uNarvEnO

siRai thaLai viLangu pEr mudip
puyal udan adangavE pizhaiththu
imaiyavargaL thangaLUr puga – samarAdi

thimiramigu sindhu vAy vida
sigarigaLum vendhu neeRezha
thigiri koL anantha sUdigai – thirumAlum

piRai mavuli maindha kOvenap
biramanai munindhu kAvalittu
oru nodiyil maNdu sUranai – porudhERi

perugu madha kumba lALitha
kariyena prachaNda vAraNa
pididhanai maNandha sEvaka – perumALE.

English Easy Version

kaRai padum udambi rAdhenak
karudhudhal ozhindhu vAyuvaik
karuma vachanangaLal maRiththu – analUdhi

kavalai padugindra yOga kaRpanai
maruvu chindhai pOyvida
kalagam idum anjum vEraRa – cheyal mALa

kuRaivaRa niRaindha mOna nir
guNamadhu porundhi veeduRa
gurumalai viLangu nyAna saR – gurunAthA

kumara saraNendru kUdhaLa
pudhu malar sorindhu kOmaLa
padhayugaLa pundareekam utr – uNarvEnO

siRai thaLai viLangu pEr mudippuyal
udan adangavE pizhaiththu
imaiyavargaL thangaLUr puga – samarAdi

thimiramigu sindhu vAy vida
sigarigaLum vendhu neeRezha
thigiri koL anantha sUdigai – thirumAlum

piRai mavuli maindha kOvena
biramanai munindhu kAvalittu
oru nodiyil maNdu sUranai – porudhERi

perugu madha kumba lALitha
kariyena prachaNda vAraNa
pididhanai maNandha sEvaka – perumALE.