Thiruppugal 226 Paravaridhagi
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதன தானன, தனதன தானன
தனதன தானன – தனதான
பரவரி தாகிய வரையென நீடிய
பணைமுலை மீதினி – லுருவான
பணிகளு லாவிட இழையிடை சாய்தரு
பயிலிகள் வாள்விழி – அயிலாலே
நிரவரி யோடியல் குழல்களி னாண்மலர்
நிரைதரு மூரலி – னகைமீது
நிலவியல் சேர்முக மதிலுயர் மாமயல்
நிலையெழ வேயலை – வதுவாமோ
அரவணை யார்குழை பரசிவ ஆரண
அரனிட பாகம – துறைசோதி
அமையுமை டாகினி திரிபுரை நாரணி
அழகிய மாதருள் – புதல்வோனே
குரவணி பூஷண சரவண தேசிக
குககரு ணாநிதி – அமரேசா
குறமக ளானைமின் மருவிய பூரண
குருகிரி மேவிய – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதன தானன, தனதன தானன
தனதன தானன – தனதான
பரவ அரிதாகிய வரை என நீடிய
பணை முலை மீதினில் – உருவான
பணிகள் உலாவிட இழை இடை சாய் தரு
பயிலிகள் வாள் விழி – அயிலாலே
நிர வரியோடு இயல் குழல்களின் நாண் மலர்
நிரை தரும் மூரலின் – நகை மீது
நிலவு இயல் சேர் முகம் அதில் உயர் மா மயல்
நிலை எழவே அலைவது – ஆமோ
அரவு அணையார் குழை பர சிவ ஆரண
அரன் இட பாகமது – உறை சோதி
அமை உமை டாகினி* திரி புரை நாரணி
அழகிய மாது அருள் – புதல்வோனே
குரவு அணி பூஷண சரவண தேசிக
குக கருணா நிதி – அமரேசா
குற மகள் ஆனை மின் மருவிய பூரண
குரு கிரி மேவிய – பெருமாளே.
English
paravari thAkiya varaiyena neediya
paNaimulai meethini – luruvAna
paNikaLu lAvida izhaiyidai sAytharu
payilikaL vALvizhi – ayilAlE
niravari yOdiyal kuzhalkaLi nANmalar
niraitharu mUrali – nakaimeethu
nilaviyal sErmuka mathiluyar mAmayal
nilaiyezha vEyalai – vathuvAmO
aravaNai yArkuzhai parasiva AraNa
aranida pAkama – thuRaisOthi
amaiyumai dAkini thiripurai nAraNi
azhakiya mAtharuL – puthalvOnE
kuravaNi pUshaNa saravaNa thEsika
gukakaru NAnithi – amarEsA
kuRamaka LAnaimin maruviya pUraNa
gurugiri mEviya – perumALE.
English Easy Version
parava arithAkiya varai ena neediya
paNai mulai meethinil – uruvAna
paNikaL ulAvida izhai idai sAy tharu
payilikaL vAL vizhi – ayilAlE
nira variyOdu iyal kuzhalkaLin nAN malar
nirai tharum mUralin – nakai meethu
nilavu iyal sEr mukam athil uyar mA mayal
nilai ezhavE alaivathu – AmO
aravu aNaiyAr kuzhai para siva AraNa
aran ida pAkamathu – uRai sOthi
amai umai dAgini* thiri purai nAraNi
azhakiya mAthu aruL – puthalvOnE
kuravu aNi pUshaNa saravaNa thEsika
guka karuNA nithi – amarEsA
kuRa makaL Anai min maruviya pUraNa
guru giri mEviya – perumALE.