திருப்புகழ் 227 பலகாதல் பெற்றிட (சுவாமிமலை)

Thiruppugal 227 Palakadhalpetrida

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதான தத்ததன தனதான தத்த
தனதான தத்ததன – தனதான

பலகாதல் பெற்றிடவு மொருநாழி கைக்குளொரு
பலனேபெ றப்பரவு – கயவாலே

பலபேரை மெச்சிவரு தொழிலேசெ லுத்தியுடல்
பதறாமல் வெட்கமறு – வகைகூறி

விலகாத லச்சைதணி மலையாமு லைச்சியர்கள்
வினையேமி குத்தவர்கள் – தொழிலாலே

விடமேகொ டுத்துவெகு பொருளேப றித்தருளும்
விலைமாதர் பொய்க்கலவி – யினிதாமோ

மலையேயெ டுத்தருளு மொருவாள ரக்கனுடல்
வடமேரெ னத்தரையில் – விழவேதான்

வகையாவி டுத்தகணை யுடையான்ம கிழ்ச்சிபெறு
மருகாக டப்பமல – ரணிமார்பா

சிலகாவி யத்துறைக ளுணர்வோர்ப டித்ததமிழ்
செவியார வைத்தருளு – முருகோனே

சிவனார்த மக்குரிய வுபதேச வித்தையருள்
திருவேர கத்தில்வரு – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதான தத்ததன தனதான தத்த
தனதான தத்ததன – தனதான

பல காதல் பெற்றிடவும் ஒரு நாழிகைக்குள் ஒரு
பலனே பெறப் பரவு – கயவாலே

பல பேரை மெச்சி வரு தொழிலே செலுத்தி உடல்
பதறாமல் வெட்கம் அறு – வகை கூறி

விலகாத லச்சை தணி மலையாம் முலைச்சியர்கள்
வினையே மிகுத்தவர்கள் – தொழிலாலே

விடமே கொடுத்து வெகு பொருளே பறித்து அருளும்
விலைமாதர் பொய்க் கலவி – இனிதாமோ

மலையே எடுத்து அருளும் ஒரு வாள் அரக்கன் உடல்
வட மேரு எனத் தரையில் – விழவேதான்

வகையா விடுத்த கணை உடையான் மகிழ்ச்சி பெறு
மருகா கடப்ப மலர் – அணி மார்பா

சில காவியத் துறைகள் உணர்வோர் படித்த தமிழ்
செவியார வைத்து அருளும் – முருகோனே

சிவனார் தமக்குரிய உபதேச வித்தை அருள்
திருவேரகத்தில் வரும் – பெருமாளே.

English

palakAthal petRidavu morunAzhi kaikkuLoru
palanEpe Rapparavu – kayavAlE

palapErai mecchivaru thozhilEse luththiyudal
pathaRAmal vetkamaRu – vakaikURi

vilakAtha lacchaithaNi malaiyAmu laicchiyarkaL
vinaiyEmi kuththavarkaL – thozhilAlE

vidamEko duththuveku poruLEpa RiththaruLum
vilaimAthar poykkalavi – yinithAmO

malaiyEye duththaruLu moruvALa rakkanudal
vadamEre naththaraiyil – vizhavEthAn

vakaiyAvi duththakaNai yudaiyAnma kizhcchipeRu
marukAka dappamala – raNimArpA

silakAvi yaththuRaika LuNarvOrpa diththathamizh
seviyAra vaiththaruLu – murukOnE

sivanArtha makkuriya vupathEsa viththaiyaruL
thiruvEra kaththilvaru – perumALE.

English Easy Version

pala kAthal petRidavum oru nAzhikaikkuL oru
palanE peRap paravu – kayavAlE

pala pErai mecchi varu thozhilE seluththi udal
pathaRAmal vetkam aRu – vakai kURi

vilakAtha lacchai thaNi malaiyAm mulaicchiyarkaL
vinaiyE mikuththavarkaL – thozhilAlE

vidamE koduththu veku poruLE paRiththu aruLum
vilai mAthar poyk kalavi – inithAmO

malaiyE eduththu aruLum oru vAL arakkan udal
vada mEru enath tharaiyil – vizhavEthAn

vakaiyA viduththa kaNai udaiyAn makizhcchi peRu
marukA kadappa malar – aNi mArpA

sila kAviyath thuRaikaL uNarvOr padiththa thamizh
seviyAra vaiththu aruLum – murukOnE

sivanAr thamakkuriya upathEsa viththai aruL
thiruvErakaththil varum – perumALE.