திருப்புகழ் 234 வார்குழலை (சுவாமிமலை)

Thiruppugal 234 Varkuzhalai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானன தத்தன தத்தன தத்தன
தானன தத்தன தத்தன தத்தன
தானன தத்தன தத்தன தத்தன – தந்ததான

வார்குழ லைச்சொரு கிக்கரு விற்குழை
காதொடி ணைத்தசை யக்கதிர் பற்கொடு
வாயிதழ் பொற்கம லர்க்குமி ழொத்துள – துண்டக்ரீவ

வார்கமு கிற்புய நற்கழை பொற்குவ
டாடிள நிர்ச்சுரர் பொற்குட மொத்திணை
மார்பழ கிற்பொறி முத்தொளிர் சித்திர – ரம்பைமாதர்

காருறும் வித்திடை யிற்கத லித்தொடை
சேரல்குல் நற்பிர சத்தட முட்கொடு
கால்மறை யத்துவ ளச்செறி பொற்கலை – யொண்குலாவக்

கார்குயி லைக்குர லைக்கொடு நற்றெரு
மீதில்நெ ளித்துந கைத்துந டிப்பவர்
காமனு கப்பம ளிச்சுழல் குத்திரர் – சந்தமாமோ

சூரர்ப தைக்கர வுட்கிநெ ளித்துய
ராழியி ரைப்பநி ணக்குட லைக்கழு
சூழந ரிக்கெரு டக்கொடி பற்பல – சங்கமாகச்

சூழ்கிரி யைக்கைத டித்தும லைத்திகை
யானையு ழற்றிந டுக்கிம தப்பொறி
சோரந கைத்தயி லைக்கொடு விட்டருள் – செங்கைவேலா


ஏரணி நற்குழ லைக்கக னச்சசி
மோகினி யைப்புணர் சித்தொரு அற்புத
வேடமு தச்சொரு பத்தகு றத்திம – ணங்கொள்வோனே

ஏரக வெற்பெனு மற்புத மிக்கசு
வாமிம லைப்பதி நிற்குமி லக்ஷண
ராஜத லக்ஷண லக்ஷுமி பெற்றருள் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தானன தத்தன தத்தன தத்தன
தானன தத்தன தத்தன தத்தன
தானன தத்தன தத்தன தத்தன – தந்ததான

வார் குழலைச் சொருகிக் கரு வில் குழை
காதொடு இணைத்து அசையக் கதிர் பல் கொ(ண்)டு
வாய் இதழ் பொற்க மலர்க் குமிழ் ஒத்து – உளதுண்ட க்ரீவ

வார் கமுகில் நல் கழை பொன் குவடு
ஆடு இள நிர்ச் சுரர் பொன் குடம் ஒத்த இணை
மார்பு அழகில் பொறி முத்து ஒளிர் சித்திர – ரம்பை மாதர்

கார் உறும் வித்து இடையில் கதலித் தொடை
சேர் அல்குல் நல் பிரசம் தடம் உள் கொடு
கால் மறையத் துவளச் செறி பொன் கலை – ஒண் குலாவ

கார் குயிலைக் குரலைக் கொ(ண்)டு நல் தெரு
மீதில் நெளித்து நகைத்து நடிப்பவர்
காமன் உகப்ப அமளிச் சுழல் குத்திரர் – சந்தம் ஆமோ

சூரர் பதைக்க அர உட்கி நெளித்து உயர்
ஆழி இரைப்ப நிணக் குடலைக் கழு
சூழ் நரிக் கெருடக் கொடி பற்பல – சங்கமாகச்

சூழ் கிரியைக் கை தடித்து மலைத் திகை
யானை உழற்றி நடுக்கி மதப் பொறி
சோர நகைத்து அயிலைக் கொ(ண்)டு விட்டு அருள் – செம் கை வேலா

ஏர் அணி நல் குழலைக் ககனச் சசி
மோகினியை புணர்ச்சி சித்த ஒரு அற்புத
வேட அமுதச் சொருபத்த குறத்தி மணம் – கொள்வோனே

ஏரக(ம்) வெற்பு எ(ன்)னும் அற்புத மிக்க
சுவாமி மலைப் பதி நிற்கும் இலக்ஷண
ராஜத லக்ஷண லக்ஷுமி பெற்று அருள் – தம்பிரானே.

English

vArkuzha laicchoru kikkaru viRkuzhai
kAthodi Naiththasai yakkathir paRkodu
vAyithazh poRkama larkkumi zhoththuLa – thuNdakreeva

vArkamu kiRpuya naRkazhai poRkuva
dAdiLa nircchurar poRkuda moththiNai
mArpazha kiRpoRi muththoLir chiththira – rampaimAthar

kAruRum viththidai yiRkatha liththodai
sEralkul naRpira saththada mutkodu
kAlmaRai yaththuva LaccheRi poRkalai – yoNkulAvak

kArkuyi laikkura laikkodu natReru
meethilne Liththuna kaiththuna dippavar
kAmanu kappama Licchuzhal kuththirar – santhamAmO

cUrarpa thaikkara vutkine Liththuya
rAzhiyi raippani Nakkuda laikkazhu
cUzhana rikkeru dakkodi paRpala – sangamAkac

cUzhkiri yaikkaitha diththuma laiththikai
yAnaiyu zhatRina dukkima thappoRi
sOrana kaiththayi laikkodu vittaruL – sengaivElA

EraNi naRkuzha laikkaka nacchasi
mOkini yaippuNar siththoru aRputha
vEdamu thacchoru paththaku Raththima – NamkoLvOnE

Eraka veRpenu maRputha mikkasu
vAmima laippathi niRkumi lakshaNa
rAjatha lakshaNa lakshumi petRaruL – thambirAnE.

English Easy Version

vAr kuzhalaic chorukik karu vil kuzhai
kAthodu iNaiththu asaiyak kathir pal ko(N)du
vAy ithazh poRka malark kumizh oththu – uLathuNda kreeva

vAr kamukil nal kazhai pon kuvadu
Adu iLa nirch curar pon kudam oththa iNai
mArpu azhakil poRi muththu oLir chiththira – rampai mAthar

kAr uRum viththu idaiyil kathalith thodai
sEr alkul nal pirasam thadam uL kodu
kAl maRaiyath thuvaLac cheRi pon kalai – oN kulAva

kAr kuyilaik kuralaik ko(N)du nal theru
meethil neLiththu nakaiththu nadippavar
kAman ukappa amaLic chuzhal kuththirar – santham AmO

cUrar pathaikka ara utki neLiththu uyar
Azhi iraippa niNak kudalaik kazhu
cUzh narik kerudak kodi paRpala – sangamAkac

chUzh kiriyaik kai thadiththu malaith thikai
yAnai uzhatRi nadukki mathap poRi
chOra nakaiththu ayilaik ko(N)du vittu aruL – sem kai vElA

Er aNi nal kuzhalaik kakanac chasi
mOkiniyai puNarcchi siththa oru aRputha
vEda amuthac chorupaththa kuRaththi maNam – koLvOnE

Eraka(m) veRpu e(n)num aRputha mikka
suvAmi malaip pathi niRkum ilakshaNa
rAjatha lakshaNa lakshumi petRu aruL – thambirAnE.