திருப்புகழ் 235 வார்குழல் விரித்து (சுவாமிமலை)

Thiruppugal 235 Varkuzhalviriththu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானன தனத்தத் தாத்த தானன தனத்தத் தாத்த
தானன தனத்தத் தாத்த – தனதான

வார்குழல் விரித்துத் தூக்கி வேல்விழி சுழற்றிப் பார்த்து
வாவென நகைத்துத் தோட்டு – குழையாட

வாசக முரைத்துச் சூத்ர பாவையெ னுறுப்பைக் காட்டி
வாசனை முலைக்கச் சாட்டி – யழகாகச்

சீர்கலை நெகிழ்த்துப் போர்த்து நூலிடை நெளித்துக் காட்டி
தீதெய நடித்துப் பாட்டு – குயில்போலச்


சேருற அழைத்துப் பார்த்து சார்வுற மருத்திட் டாட்டி
சீர்பொருள் பறிப்பொய்க் கூத்த – ருறவாமோ

சூரர்கள் பதைக்கத் தேர்க்க ளானைக ளழித்துத் தாக்கி
சூர்கிரி கொளுத்திக் கூற்று – ரிடும்வேலா

தூமொழி நகைத்துக் கூற்றை மாளிட வுதைத்துக் கோத்த
தோலுடை யெனப்பர்க் கேற்றி – திரிவோனே

ஏரணி சடைச்சிப் பாற்சொ லாரணி சிறக்கப் போற்று
மேரெழி னிறத்துக் கூர்த்த – மகவோனே


ஏடணி குழைச்சித் தூர்த்த வாடகி குறத்திக் கேற்ற
ஏரக பொருப்பிற் பூத்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தானன தனத்தத் தாத்த தானன தனத்தத் தாத்த
தானன தனத்தத் தாத்த – தனதான

வார் குழல் விரித்துத் தூக்கி வேல் விழி சுழற்றிப் பார்த்து
வா என நகைத்துத் தோட்டு – குழை ஆட

வாசகம் உரைத்துச் சூத்ர பாவை என உறுப்பை காட்டி
வாசனை முலைக் கச்சு ஆட்டி – அழகாகச்

சீர் கலை நெகிழ்த்துப் போர்த்து நூல் இடை நெளித்துக் காட்டி
தீ தெய நடித்துப் பாட்டு – குயில் போல

சேர் உற அழைத்துப் பார்த்து சார்வு உற மருத்து இட்டு ஆட்டி
சீர் பொருள் பறிப் பொய்க் கூத்தர் – உறவு ஆமோ

சூரர்கள் பதைக்க தேர்க்கள் ஆனைகள் அழித்து தாக்கி
சூர் கிரி கொளுத்தி கூற்று உ(ஊ)ர் – இடும் வேலா

தூ மொழி நகைத்துக் கூற்றை மாளிட உதைத்துக் கோத்த
தோல் உடை என் அப்பர்க்கு ஏற்றி – திரிவோனே

ஏர் அணி சடைச்சிப் பால் சொல் ஆரணி சிறக்கப் போற்றும்
ஏர் எழில் நிறத்துக் கூர்த்த – மகவோனே

ஏடு அணி குழைச்சித் தூர்த்த ஆடகி குறத்திக்கு ஏற்ற
ஏரக பொருப்பில் பூத்த – பெருமாளே.

English

vArkuzhal viriththuth thUkki vElvizhi suzhatRip pArththu
vAvena nakaiththuth thOttu – kuzhaiyAda

vAsaka muraiththuc cUthra pAvaiye nuRuppaik kAtti
vAsanai mulaikkac chAtti – yazhakAkac

cheerkalai nekizhththup pOrththu nUlidai neLiththuk kAtti
theetheya nadiththup pAttu – kuyilpOlac

chEruRa azhaiththup pArththu sArvuRa maruththit tAtti
seerporuL paRippoyk kUththa – ruRavAmO

cUrarkaL pathaikkath thErkka LAnaika Lazhiththuth thAkki
cUrkiri koLuththik kUtRu – ridumvElA

thUmozhi nakaiththuk kUtRai mALida vuthaiththuk kOththa
thOludai yenappark kEtRi – thirivOnE

EraNi sadaicchip pARcho lAraNi siRakkap pOtRu
mErezhi niRaththuk kUrththa – makavOnE

EdaNi kuzhaicchith thUrththa vAdaki kuRaththik kEtRa
Eraka poruppiR pUththa – perumALE.

English Easy Version

vAr kuzhal viriththuth thUkki vEl vizhi suzhatRip pArththu
vA ena nakaiththuth thOttu – kuzhai Ada

vAsakam uraiththuc cUthra pAvai ena uRuppai kAtti
vAsanai mulaik kacchu Atti – azhakAkac

cheer kalai nekizhththup pOrththu nUl idai neLiththuk kAtti
thee theya nadiththup pAttu – kuyil pOla

ChEr uRa azhaiththup pArththu sArvu uRa maruththu ittu
Atti seer poruL paRip poyk kUththar – uRavu AmO

cUrarkaL pathaikka thErkkaL AnaikaL azhiththu thAkki
cUr kiri koLuththi kUtRu u(U)r – idum vElA

thU mozhi nakaiththuk kUtRai mALida uthaiththuk kOththa
thOl udai en apparkku EtRi – thirivOnE

Er aNi sadaicchip pAl sol AraNi siRakkap pOtRum
Er ezhil niRaththuk kUrththa – makavOnE

Edu aNi kuzhaicchith thUrththa Adaki kuRaththikku EtRa
Eraka poruppil pUththa – perumALE.