திருப்புகழ் 236 விடமும் வடிவேலும் (சுவாமிமலை)

Thiruppugal 236 Vidamumvadivelum

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனன தான தனதன தந்தன
தனதனன தான தனதன தந்தன
தனதனன தான தனதன தந்தன – தனதான

விடமும்வடி வேலு மதனச ரங்களும்
வடுவுநிக ரான மகரநெ டுங்குழை
விரவியுடன் மீளும் விழிகளு மென்புழு – கதுதோயும்

ம்ருகமதப டீர பரிமள குங்கும
மணியுமிள நீரும் வடகுல குன்றமும்
வெருவுவன பார புளகத னங்களும் – வெகுகாம

நடனபத நூபு ரமுமுகில் கெஞ்சிட
மலர்சொருகு கேச பரமுமி லங்கிய
நளினமலர் சோதி மதிமுக விம்பமும் – அனநேராம்

நடையுநளிர் மாதர் நிலவுதொ ழுந்தனு
முழுதுமபி ராம அரிவய கிண்கிணெ
னகையுமுள மாதர் கலவியி னைந்துரு – கிடலாமோ

வடிவுடைய மானு மிகல்கர னுந்திக
ழெழுவகைம ராம ரமுநிக ரொன்றுமில்
வலியதிறல் வாலி யுரமுநெ டுங்கட – லவையேழும்

மறநிருதர் சேனை முழுதுமி லங்கைமன்
வகையிரவி போலு மணியும லங்க்ருத
மணிமவுலி யான வொருபதும் விஞ்சிரு – பதுதோளும்

அடைவலமு மாள விடுசர அம்புடை
தசரதகு மார ரகுகுல புங்கவன்
அருள்புனைமு ராரி மருகவி ளங்கிய – மயிலேறி

அடையலர்கள் மாள வொருநிமி டந்தனி
லுலகைவல மாக நொடியினில் வந்துயர்
அழகியசு வாமி மலையில மர்ந்தருள் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனன தான தனதன தந்தன
தனதனன தான தனதன தந்தன
தனதனன தான தனதன தந்தன – தனதான

விடமும் வடிவேலும் மதன சரங்களும்
வடுவு நிகரான மகர நெடும் குழை
விரவி உடன் மீளும் விழிகளும் மென் புழுகு – அது தோயும்

ம்ருகமத படீர பரிமள குங்குமம்
அணியும் இள நீரும் வட குல குன்றமும்
வெருவுவன பார புளகித தனங்களும் – வெகு காம

நடன பத நூபுரமு(ம்) முகில் கெஞ்சிட
மலர் சொருகு கேச ப(பா)ரமும் இலங்கிய
நளின மலர் சோதி மதி முக விம்பமும் – அ(ன்)ன நேராம்

நடையு(ம்) நளிர் மாதர் நிலவு தொழும் தனு
முழுதும் அபிராம அரி வய கிண்கிண் என
நகையும் உ(ள்)ள மாதர் கலவியில் நைந்து – உருகிடலாமோ

வடிவுடைய மானும் இகல் கரனும் திகழ்
எழு வகை மரா மரமும் நிகர் ஒன்றும் இல்
வலிய திறல் வாலி உரமும் நெடும் கடல் – அவை ஏழும்

மற நிருதர் சேனை முழுதும் இலங்கை மன்
வகை இரவு போலும் அணியும் அலங்க்ருத
மணி மவுலியான ஒரு பதும் விஞ்சு இரு – பது தோளும்

அடை வலமும் மாள விடு சர அம்பு உடை
தசரத குமார ரகு குல புங்கவன்
அருள் புனை முராரி மருக விளங்கிய – மயில் ஏறி

அடையலர்கள் மாள ஒரு நிமிடம் தனில்
உலகை வலமாக நொடியினில் வந்து உயர்
அழகிய சுவாமி மலையில் அமர்ந்து அருள் – பெருமாளே.

English

vidamumvadi vElu mathanasa rangaLum
vaduvunika rAna makarane dunguzhai
viraviyudan meeLum vizhikaLu menpuzhu – kathuthOyum


mrukamathapa deera parimaLa kunguma
maNiyumiLa neerum vadakula kundRamum
veruvuvana pAra puLakatha nangaLum – vekukAma

nadanapatha nUpu ramumukil kenjida
malarsoruku kEsa paramumi langiya
naLinamalar sOthi mathimuka vimpamum – ananErAm

nadaiyunaLir mAthar nilavutho zhunthanu
muzhuthumapi rAma arivaya kiNkiNe
nakaiyumuLa mAthar kalaviyi nainthuru – kidalAmO

vadivudaiya mAnu mikalkara nunthika
zhezhuvakaima rAma ramunika ronRumil
valiyathiRal vAli yuramune dumkada – lavaiyEzhum

maRaniruthar sEnai muzhuthumi langaiman
vakaiyiravi pOlu maNiyuma langrutha
maNimavuli yAna vorupathum vinjiru – pathuthOLum

adaivalamu mALa vidusara ampudai
thasarathaku mAra rakukula pungavan
aruLpunaimu rAri marukavi Langiya – mayilERi

adaiyalarkaL mALa vorunimi danthani
lulakaivala mAka nodiyinil vanthuyar
azhakiyasu vAmi malaiyila marntharuL – perumALE.

English Easy Version

vidamum vadivElum mathana sarangaLum
vaduvu nikarAna makara nedum kuzhai
viravi udan meeLum vizhikaLum men puzhuku – athu thOyum

mrukamatha padeera parimaLa kungumam
aNiyum iLa neerum vada kula kundRamum
veruvuvana pAra puLakitha thanangaLum – veku kAma

nadana patha nUpuramu(m) mukil kenjida
malar soruku kEsa pa(a)ramum ilangiya
naLina malar sOthi mathi muka vimpamum – a(n)na nErAm

nadaiyu(m) naLir mAthar nilavu thozhum thanu
muzhuthum apirAma ari vaya kiNkiN ena
nakaiyum u(L)La mAthar kalaviyil nainthu – urukidalAmO

vadivudaiya mAnum ikal karanum thikazh
ezhu vakai marA maramum nikar onRum il
valiya thiRal vAli uramum nedum kadal – avai Ezhum

maRa niruthar sEnai muzhuthum ilangai man
vakai iravu pOlum aNiyum alangrutha
maNi mavuliyAna oru pathum vinju iru – pathu thOLum

adai valamum mALa vidu sara ampu udai
thasaratha kumAra raku kula pungavan
aruL punai murAri maruka viLangiya – mayil ERi

adaiyalarkaL mALa oru nimidam thanil
ulakai valamAka nodiyinil vanthu uyar
azhakiya suvAmi malaiyil amarnthu aruL – perumALE.