Thiruppugal 237 Viriththapaingkuzhal
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன – தனதான
விரித்த பைங்குழ லொளிர்மல ரளிதன
தனத்த னந்தன தனதன வெனவொலி
விரிப்ப வண்கயல் விழியுறை குழையொடு – மலைபாய
மிகுத்த வண்சிலை நுதல்மிசை திலதமொ
டசைத்த பொன்குழை யழகெழ முகவொளி
வெயிற்ப ரந்திட நகையிதழ் முருகலர் – வரிபோதத்
தரித்த தந்திரி மறிபுய மிசைபல
பணிக்கி லங்கிய பரிமள குவடிணை
தனக்கொ ழுந்துகள் ததைபட கொடியிடை – படுசேலை
தரித்து சுந்தர மெனஅடர் பரிபுர
பதச்சி லம்பொடு நடமிடு கணிகையர்
சழக்கர் விஞ்சையர் மயல்களின் முழுகுவ – தொழியாதோ
உரித்த வெங்கய மறியொடு புலிகலை
தரித்த சங்கரர் மதிநதி சடையினர்
ஒருத்தி பங்கின ரவர்பணி குருபர – முருகோனே
உவட்டி வந்திடு மவுணரொ டெழுகடல்
குவட்டை யும்பொடி படசத முடிவுற
வுழைத்த இந்திரர் பிரமனு மகிழ்வுற – விடும்வேலா
வரித்த ரந்துள வணிதிரு மருவிய
வுரத்த பங்கயர் மரகத மழகிய
வணத்த ரம்பர முறவிடு கணையினர் – மருகோனே
வனத்தில் வந்தொரு பழையவ னெனவொரு
குறத்தி மென்புன மருவிய கிளிதனை
மயக்கி மந்திர குருமலை தனிலமர் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன – தனதான
விரித்த பைம் குழல் ஒளிர் மலர் அளி தன
தனத்த னந்தன தனதன என ஒலி
விரிப்ப வண் கயல் விழி உறை குழையொடும் – அலை பாய
மிகுத்த வண் சிலை நுதல் மிசை திலதமொடு
அசைத்த பொன் குழை அழகு எழ முக ஒளி
வெயில் பரந்திட நகை இதழ் முருகு அலர் – வரி போத
தரித்த தந்திரி மறி புய(ம்) மிசை பல
பணிக்கு இலங்கிய பரிமள குவடு இணை
தனக் கொழுந் துகள் ததை பட கொடி இடை – படு சேலை
தரித்து சுந்தரம் என அடர் பரிபுர
பதச் சிலம்போடு நடம் இடு கணிகையர்
சழக்கர் விஞ்சையர் மயல்களின் முழுகுவது – ஒழியாதோ
உரித்த வெம் கய(ம்) மறியோடு புலி கலை
தரித்த சங்கரர் மதி நதி சடையினர்
ஒருத்தி பங்கினர் அவர் பணி குருபர – முருகோனே
உவட்டி வந்திடும் அவுணரோடு எழு கடல்
குவட்டையும் பொடி பட சத(ம்) முடிவுற
உழைத்த இந்திரர் பிரமனும் மகிழ்வு உற – விடும் வேலா
வரித் தரம் துளவு அணி திரு மருவிய
உரத்த பங்கயர் மரகதம் அழகிய
வ(ண்)ணத்தர் அம்பரம் உற விடு கணையினர் – மருகோனே
வனத்தில் வந்து ஒரு பழையவன் என ஒரு
குறத்தி மென் புனம் மருவிய கிளி தனை
மயக்கி மந்திர குரு மலை தனில் அமர் – பெருமாளே.
English
viriththa paingkuzha loLirmala raLithana
thanaththa nanthana thanathana venavoli
virippa vaNkayal vizhiyuRai kuzhaiyodu – malaipAya
mikuththa vaNsilai nuthalmisai thilathamo
dasaiththa ponkuzhai yazhakezha mukavoLi
veyiRpa ranthida nakaiyithazh murukalar – varipOthath
thariththa thanthiri maRipuya misaipala
paNikki langiya parimaLa kuvadiNai
thanakko zhunthukaL thathaipada kodiyidai – padusElai
thariththu sunthara menAdar paripura
pathacchi lampodu nadamidu kaNikaiyar
sazhakkar vinjaiyar mayalkaLin muzhukuva – thozhiyAthO
uriththa venkaya maRiyodu pulikalai
thariththa sankarar mathinathi sadaiyinar
oruththi pangina ravarpaNi gurupara – murukOnE
uvatti vanthidu mavuNaro dezhukadal
kuvattai yumpodi padasatha mudivuRa
vuzhaiththa inthirar piramanu makizhvuRa – vidumvElA
variththa ranthuLa vaNithiru maruviya
vuraththa pangayar marakatha mazhakiya
vaNaththa rampara muRavidu kaNaiyinar – marukOnE
vanaththil vanthoru pazhaiyava nenavoru
kuRaththi menpuna maruviya kiLithanai
mayakki manthira kurumalai thanilamar – perumALE.
English Easy Version
viriththa paim kuzhal oLir malar aLi thana
thanaththa nanthana thanathana ena oli
virippa vaN kayal vizhi uRai kuzhaiyodum – alai pAya
mikuththa vaN silai nuthal misai thilathamodu
asaiththa pon kuzhai azhaku ezha muka oLi
veyil paranthida nakai ithazh muruku alar – vari pOtha
thariththa thanthiri maRi puya(m) misai pala
paNikku ilangiya parimaLa kuvadu iNai
thanak kozhun thukaL thathai pada kodi idai – padu sElai
thariththu suntharam ena adar paripura
pathac chilampOdu nadam idu kaNikaiyar
sazhakkar vinjaiyar mayalkaLin muzhukuvathu – ozhiyAthO
uriththa vem kaya(m) maRiyOdu puli kalai
thariththa sankarar mathi nathi sadaiyinar
oruththi panginar avar paNi gurupara – murukOnE
uvatti vanthidum avuNarOdu ezhu kadal
kuvattaiyum podi pada satha(m) mudivuRa
uzhaiththa inthirar piramanum makizhvu uRa – vidum vElA
varith tharam thuLavu aNi thiru maruviya
uraththa pangayar marakatham azhakiya
va(N)Naththar amparam uRa vidu kaNaiyinar – marukOnE
vanaththil vanthu oru pazhaiyavan ena oru
kuRaththi men punam maruviya kiLi thanai
mayakki manthira kuru malai thanil amar – perumALE.