Thiruppugal 246 Uyyagnanaththuneri
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தய்யனா தத்ததன தய்யனா தத்ததன
தய்யனா தத்ததன – தனதான
உய்யஞா னத்துநெறி கைவிடா தெப்பொழுது
முள்ளவே தத்துறைகொ – டுணர்வோதி
உள்ளமோ கத்திருளை விள்ளமோ கப்பொருளை
யுள்ளமோ கத்தருளி – யுறவாகி
வையமே ழுக்குநிலை செய்யுநீ திப்பழைய
வல்லமீ துற்பலச – யிலமேவும்
வள்ளியா நிற்புதிய வெள்ளில்தோய் முத்தமுறி
கிள்ளிவீ சுற்றுமலர் – பணிவேனோ
பையரா வைப்புனையு மையர்பா கத்தலைவி
துய்யவே ணிப்பகிர – திகுமாரா
பையமால் பற்றிவளர் சையமேல் வைக்குமுது
நெய்யனே சுற்றியகு – றவர்கோவே
செய்யுமால் வெற்புருவ வெய்யவேல் சுற்றிவிடு
கையமால் வைத்ததிரு – மருகோனே
தெய்வயா னைக்கிளைய வெள்ளையா னைத்தலைவ
தெய்வயா னைக்கினிய – பெருமாளே.
பதம் பிரித்தது
தய்யனா தத்ததன தய்யனா தத்ததன
தய்யனா தத்ததன – தனதான
உய்யஞானத்து நெறி கைவிடாது எப்பொழுதும்
உள்ள வேதத்துறை கொடு – உணர்வோதி
உள்ள மோகத்து இருளை விள்ள மோகப்பொருளை
உள்ள மோகத்து அருளி – யுறவாகி
வையம் ஏழுக்குநிலை செய்யுநீதி பழைய
வல்ல மீது உற்பலசயில – மேவும்
வள்ளியா நிற்புதிய வெள்ளில்தோய் முத்தமுறி
கிள்ளிவீசுற்று மலர் – பணிவேனோ
பை யராவைப் புனையும் ஐயர்பாகத்தலைவி
துய்யவேணிப்பகிரதி – குமாரா
பைய மால் பற்றிவளர் சையமேல் வைக்கு முது
நெய்யனே சுற்றிய – குறவர் கோவே
செய்யுமால் வெற்புருவ வெய்யவேல் சுற்றிவிடு
கைய மால் வைத்ததிரு – மருகோனே
தெய்வயானைக்கிளைய வெள்ளையானைத்தலைவ
தெய்வயா னைக்கினிய – பெருமாளே.
English
uyyanjA naththuneRi kaividA theppozhuthu
muLLavE thaththuRaiko – duNarvOthi
uLLamO kaththiruLai viLLamO kapporuLai
yuLLamO kaththaruLi – yuRavAki
vaiyamE zhukkunilai seyyunee thippazhaiya
vallamee thuRpalasa – yilamEvum
vaLLiyA niRputhiya veLLilthOy muththamuRi
kiLLivee cuRRumalar – paNivEnO
paiyarA vaippunaiyu maiyarpA kaththalaivi
thuyyavE Nippakira – thikumArA
paiyamAl paRRivaLar caiyamEl vaikkumuthu
neyyanE suRRiyaku – RavarkOvE
seyyumAl veRpuruva veyyavEl suRRividu
kaiyamAl vaiththathiru – marukOnE
theyvayA naikkiLaiya veLLaiyA naiththalaiva
theyvayA naikkiniya – perumALE.
English Easy Version
uyyanjA naththuneRi kaividA theppozhuthum
uLLavE thaththuRai – koduNarvOthi
uLLamO kaththiruLai viLLamO kapporuLai
yuLLamO kaththaruLi – uRavAki
vaiyamE zhukkunilai seyyuneethi pazhaiya
vallamee thuRpalasa – yilamEvum
vaLLiyA niRputhiya veLLilthOy muththamuRi
kiLLi veecuRRu malar – paNivEnO
paiyarA vaippunaiyu maiyar pAkaththalaivi
thuyyavE Nippakirathi – kumArA
paiyamAl paRRivaLar caiyamEl vaikkumuthu
neyyanE suRRiyaku – RavarkOvE
seyyumAl veRpuruva veyyavEl suRRividu
kaiya mAl vaiththathiru – marukOnE
theyvayA naikkiLaiya veLLaiyA naiththalaiva
theyvayA naikkiniya – perumALE.