திருப்புகழ் 251 ஏது புத்தி (திருத்தணிகை)

Thiruppugal 251 Edhubudhdhi

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தத்தன தான தத்தன
தான தத்தன தான தத்தன
தான தத்தன தான தத்தன – தந்ததான

ஏது புத்திஐ யாஎ னக்கினி
யாரை நத்திடு வேன வத்தினி
லேயி றத்தல்கொ லோஎ னக்குனி – தந்தைதாயென்

றேயி ருக்கவு நானு மிப்படி
யேத வித்திட வோச கத்தவ
ரேச லிற்பட வோந கைத்தவர் – கண்கள்காணப்

பாதம் வைத்திடை யாதே ரித்தெனை
தாளில் வைக்கநி யேம றுத்திடில்
பார்ந கைக்குமை யாத கப்பன்முன் – மைந்தனோடிப்

பால்மொ ழிக்குர லோல மிட்டிடில்
யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ
பார்வி டுப்பர்க ளோஎ னக்கிது – சிந்தியாதோ

ஓத முற்றெழு பால்கொ தித்தது
போல எட்டிகை நீசமுட்டரை
யோட வெட்டிய பாநு சத்திகை – யெங்கள்கோவே

ஓத மொய்ச்சடை யாட வுற்றமர்
மான்ம ழுக்கர மாட பொற்கழ
லோசை பெற்றிட வேந டித்தவர் – தந்தவாழ்வே

மாதி னைப்புன மீதி ருக்குமை
வாள்வி ழிக்குற மாதி னைத்திரு
மார்ப ணைத்தம யூர அற்புத – கந்தவேளே

மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ
லார்வி யப்புற நீடு மெய்த்தவர்
வாழ்தி ருத்தணி மாம லைப்பதி – தம்பிரானே.

பதம் பிரித்தது

தான தத்தன தான தத்தன
தான தத்தன தான தத்தன
தான தத்தன தான தத்தன – தந்ததான

ஏது புத்திஐ யாஎனக்கு இனி
யாரை நத்திடுவேன் அவத்தினிலே
யிறத்தல்கொலோ எனக்குனி – தந்தைதாயென்

றேயி ருக்கவு நானு மிப்படியே
தவித்திடவோ சகத்தவ
ரேசலிற்படவோ நகைத்தவர் – கண்கள்காணப்

பாதம் வைத்திடு ஐயா தெரித்தெனை
தாளில் வைக்கநியேம றுத்திடில்
பார்நகைக்குமையா தகப்பன்முன் – மைந்தனோடி

பால்மொழிக் குரல் ஓல மிட்டிடில்
யாரெ டுப்பதெனாவெ றுத்தழ
பார்வி டுப்பர்களோ எ னக்கிது – சிந்தியாதோ

ஓத முற்றெழு பால்கொதித்தது
போல எட்டிகை நீசமுட்டரை
ஓட வெட்டிய பாநு சத்திகை – யெங்கள்கோவே

ஓத மொய்ச்சடையாட உற்றமர்
மான்மழுக்கர மாட பொற்கழ
லோசை பெற்றிடவே நடித்தவர் – தந்தவாழ்வே

மாதினைப்புன மீதிருக்கு
மைவாள்விழிக்குற மாதினை
திருமார்ப ணைத்த மயூர அற்புத – கந்தவேளே

மாரன் வெற்றிகொள்
பூமுடிக்குழலார்வியப்புற நீடு மெய்த்தவர்
வாழ்திருத்தணி மாமலைப்பதி – தம்பிரானே.

English

Edhu budhdhi aiyA enakkini
yArai naththidu vEn avaththinil
Eyi Raththal kolO enakku ni – thandhai thAy en

drE irukkavu nAnum ippadi
yE thaviththidavO jagaththavar
EsaliR padavO nagaiththavar – kaNkaL kANa

pAdham vaiththidai yAthe riththenai
thALil vaikka niyE maRuththidil
pAr nagaikkum aiyA thagappan mun – maindhanOdi

pAl mozhikural Ola mittidil
yAr eduppadhe nAve Ruththazha
pAr viduppargaLO enakkidhu – chindhiyAdhO

Odha mutrezhu pAl kodhiththadhu
pOla ettigai neesa muttarai
Oda vettiya bAnu saththikai – engaLkOvE

Odha moycchadai Ada utramar
mAn mazhukkara mAda poRkazhal
Osai petridavE nadiththavar – thandhavAzhvE

mA thinaipuna meedhi rukkumai
vALvi zhikkuRa mAdhinai thiru
mArba Naiththa mayUra aRbudha – kandhavELE

mAran vetrikoL pU mudi kuzhal
Ar viyappuRa needu meyththavar
vAzh thiruththaNi mA malaipadhi – thambirAnE.

English Easy Version

Edhu budhdhi aiyA enakkini
yArai naththiduvEn avaththinilE
yiRaththal kolO enakku ni – thandhai thAy endrE

irukkavu nAnum ippadiyE
thaviththidavO jagaththavar
EsaliR padavO nagaiththavar – kaNkaL kANa

pAdham vaiththidaiyA theriththenai
thALil vaikka niyE maRuththidil
pAr nagaikkum aiyA thagappan mun – maindhanOdi

pAl mozhikural Ola mittidil
yAr eduppadhe nAve Ruththazha
pAr viduppargaLO enakkidhu – chindhiyAdhO

Odha mutrezhu pAl kodhiththadhu
pOla ettigai neesa muttarai
Oda vettiya bAnu saththikai – engaLkOvE

Odha moycchadai Ada utramar
mAn mazhukkaramAda poRkazhal
Osai petridavE nadiththavar – thandhavAzhvE

mA thinaipuna meedhirukku
maivALvi zhikkuRa mAdhinai thiru
mArba Naiththa mayUra aRbudha – kandhavELE

mAran vetrikoL pU mudi kuzhalAr
viyappuRa needu meyththavar
vAzh thiruththaNi mA malaipadhi – thambirAnE.