திருப்புகழ் 253 கச்சணி இளமுலை (திருத்தணிகை)

Thiruppugal 253 Kachchaniilamulai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன – தனதான

கச்சணி யிளமுலை முத்தணி பலவகை
கைச்சரி சொலிவர – மயல்கூறிக்

கைப்பொருள் கவர்தரு மைப்பயில் விழியினர்
கட்செவி நிகரல்குல் – மடமாதர்

இச்சையி னுருகிய கச்சைய னறிவிலி
யெச்சமி லொருபொரு – ளறியேனுக்

கிப்புவி மிசைகமழ் பொற்பத மலரிணை
யிப்பொழு தணுகவு – னருள்தாராய்

கொச்சையர் மனையிலி டைச்சியர் தயிர்தனை
நச்சியெ திருடிய – குறையால்வீழ்

குற்கிர வினியொடு நற்றிற வகையறி
கொற்றவு வணமிசை – வருகேசன்

அச்சுதை நிறைகடல் நச்சர வணைதுயில்
அச்சுதன் மகிழ்தரு – மருகோனே

அப்பணி சடையரன் மெச்சிய தணிமலை
யப்பனெ யழகிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன – தனதான

கச்சு அணி இள முலை முத்து அணி பல வகை
கைச் சரி சொலி வர – மயல் கூறி

கைப் பொருள் கவர் தரு மைப் பயில் விழியினர்
\கண் செவி நிகர் அல்குல் – மடமாதர்

இச்சையில் உருகிய கச்சையன் அறிவிலி
எச்சம் இல் ஒரு பொருள் – அறியேனுக்கு

இப்புவி மிசை கமழ் பொன் பத மலர் இணை
இப்பொழுது அணுக உன் – அருள் தாராய்

கொச்சையர் மனையில் இடைச்சியர் தயிர் தனை
நச்சியெ திருடிய – குறையால் வீழ்

குற்கிரவினி யொடு நல் திற வகை அறி
கொற்றவ உவண(ம்) மிசை – வரு கேச(வ)ன்

அச் சுதை நிறை கடல் நச்சு அரவணை துயில்
அச்சுதன் மகிழ் திரு – மருகோனே

அப்பு அணி சடை அரன் மெச்சிய தணி மலை
அப்பனெ அழகிய – பெருமாளே.

English

kacchaNi yiLamulai muththaNi palavakai
kaicchari solivara – mayalkURik

kaipporuL kavartharu maippayil vizhiyinar
katchevi nikaralkul – madamAthar

icchaiyi nurukiya kacchaiya naRivili
yecchami loruporu – LaRiyEnuk

kippuvi misaikamazh poRpatha malariNai
yippozhu thaNukavu – naruLthArAy

kocchaiyar manaiyili daicchiyar thayirthanai
nacchiye thirudiya – kuRaiyAlveezh

kuRkira viniyodu natRiRa vakaiyaRi
kotRavu vaNamisai – varukEsan

acchuthai niRaikadal nacchara vaNaithuyil
acchuthan makizhtharu – marukOnE

appaNi sadaiyaran mecchiya thaNimalai
yappane yazhakiya – perumALE.

English Easy Version

kacchu aNi iLa mulai muththu aNi pala vakai
kaic chari soli vara – mayal kURi

kaip poruL kavar tharu maip payil vizhiyinar
kaN sevi nikar alkul – madamAthar

icchaiyil urukiya kacchaiyan aRivili
eccham il oru poruL – aRiyEnukku

ippuvi misai kamazh pon patha malar iNai
ippozhuthu aNuka un – aruL thArAy

kocchaiyar manaiyil idaicchiyar thayir thanai
nacchiye thirudiya – kuRaiyAl veezh

kuRkiravini yodu nal thiRa vakai aRi
kotRava uvaNa(m) misai – varu kEsa(va)n

ac chuthai niRai kadal nacchu aravaNai thuyil
acchuthan makizh thiru – marukOnE

appu aNi sadai aran mecchiya thaNi malai
appane azhakiya – perumALE.