திருப்புகழ் 255 கரிக்குழல் விரித்தும் (திருத்தணிகை)

Thiruppugal 255 Karikkuzhalviriththum

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்
தனத்தன தனத்தம் – தனதான

கரிக்குழல் விரித்தும் புறக்கயல் விழித்துங்
கரிக்குவ டிணைக்குந் – தனபாரக்

கரத்திடு வளைச்சங் கிலிச்சர மொலித்துங்
கலைத்துகில் மினுக்யும் – பணிவாரைத்

தரித்துள மழிக்குங் கவட்டர்க ளிணக்கந்
தவிர்த்துன துசித்தங் – களிகூரத்

தவக்கடல் குளித்திங் குனக்கடி மையுற்றுன்
தலத்தினி லிருக்கும் – படிபாராய்

புரத்தையு மெரித்தங் கயத்தையு முரித்தொண்
பொடிப்பணி யெனப்பன் – குருநாதா

புயப்பணி கடப்பந் தொடைச்சிக ரமுற்றின்
புகழ்ச்சிய முதத்திண் – புலவோனே

திரட்பரி கரிக்கும் பொடிப்பட வுணர்க்குந்
தெறிப்புற விடுக்குங் – கதிர்வேலா

சிறப்பொடு குறப்பெண் களிக்கும்வி சயத்தென்
திருத்தணி யிருக்கும் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்
தனத்தன தனத்தம் – தனதான

கரிக் குழல் விரித்தும் புறக் கயல் விழித்தும்
கரிக் குவடு இணைக்கும் – தன பாரக்

கரத்து இடு வளைச் சங்கிலிச் சரம் ஒலித்தும்
கலைத் துகில் மினுக்(கி)யும் – பணிவாரைத்

தரித்து உளம் அழிக்கும் கவட்டர்கள் இணக்கம்
தவிர்த்து உனது சித்தம் – களி கூரத்

தவக் கடல் குளித்து இங்கு உனக்கு அடிமை உற்று
உன் தலத்தினில் இருக்கும்படி – பாராய்

புரத்தையும் எரித்து அம் கயத்தையும் உரித்து ஒண்
பொடிப் பணி என் அப்பன் – குருநாதா

புயப் பணி கடப்பம் தொடைச் சிகரம் உற்று இன்
புகழ்ச்சி அமுதத் திண் – புலவோனே

திரள் பரி கரிக்கும் பொடிப்பட அவுணர்க்கும்
தெறிப்பு உற விடுக்கும் – கதிர் வேலா

சிறப்பொடு குறப் பெண் களிக்கும் விசயத் தென்
திருத்தணி இருக்கும் – பெருமாளே.

English

karikkuzhal viriththum puRakkayal vizhiththum
karikkuva diNaikkun – thanapArak

karaththidu vaLaicchang kilicchara moliththum
kalaiththukil minukyum – paNivAraith

thariththuLa mazhikkung kavattarka LiNakkan
thavirththuna thusiththang – kaLikUrath

thavakkadal kuLiththin gunakkadi maiyutRun
thalaththini lirukkum – padipArAy

puraththaiyu meriththang kayaththaiyu muriththoN
podippaNi yenappan – gurunAthA

puyappaNi kadappan thodaicchika ramutRin
pukazhcchiya muthaththiN – pulavOnE

thiratpari karikkum podippada vuNarkkun
theRippuRa vidukkung – kathirvElA

siRappodu kuRappeN kaLikkumvi sayaththen
thiruththaNi yirukkum – perumALE.

English Easy Version

karik kuzhal viriththum puRak kayal vizhiththum
karik kuvadu iNaikkum – thana pArak

karaththu idu vaLaic changkilic charam oliththum
kalaith thukil minuk(ki)yum – paNivAraith

thariththu uLam azhikkum kavattarkaL iNakkam
thavirththu unathu siththam – kaLi kUrath

thavak kadal kuLiththu ingu unakku adimai utRu un
thalaththinil irukkumpadi – pArAy

puraththaiyum eriththu am kayaththaiyum uriththu oN
podip paNi en appan – gurunAthA

puyap paNi kadappam thodaic chikaram utRu in
pukazhcchi amuthath thiN – pulavOnE

thiraL pari karikkum podippada avuNarkkum
theRippu uRa vidukkum – kathir vElA

siRappodu kuRap peN kaLikkum visayath then
thiruththaNi irukkum – perumALE.