Thiruppugal 258 Ganaththaara
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
தனத்தனத் தனத்தனத் – தனதான
கனத்தறப் பணைத்தபொற் கழைப்புயத் தனக்கிரிக்
கனத்தையொத் துமொய்த்தமைக் – குழலார்தங்
கறுத்தமைக் கயற்கணிற் கருத்துவைத் தொருத்தநிற்
கழற்பதத் தடுத்திடற் – கறியாதே
இனப்பிணிக் கணத்தினுக் கிருப்பெனத் துருத்தியொத்
திசைத்தசைத் தசுக்கிலத் – தசைதோலால்
எடுத்தபொய்க் கடத்தினைப் பொறுக்குமிப் பிறப்பறுத்
தெனக்குநித் தமுத்தியைத் – தரவேணும்
பனைக்கரச் சினத்திபத் தனைத்துரத் தரக்கனைப்
பயத்தினிற் பயப்படப் – பொரும்வேலா
பருப்பதச் செருக்கறத் துகைக்குமுட் பதத்தினைப்
படைத்தகுக் குடக்கொடிக் – குமரேசா
தினைப்புனப் பருப்பதத் தினிற்குடிக் குறத்தியைச்
செருக்குறத் திருப்புயத் – தணைவோனே
திருப்புரப் புறத்தியற் றிருத்தகுத் துநித்திலத்
திருத்திசைத் திருத்தணிப் பெருமாளே.
பதம் பிரித்தது
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
தனத்தனத் தனத்தனத் – தனதான
கனத்த அறப் பணைத்த பொன் கழைப் புயத் தனக் கிரி
கனத்தை ஒத்து மொய்த்த மைக் – குழலார் தம்
கறுத்த மைக் க(ண்)ணில் கருத்து வைத்து ஒருத்த நின்
கழல் பதத்து அடுத்திடற்கு – அறியாதே
இனப் பிணிக் கணத்தினுக்கு இருப்பு எனத் துருத்தி ஒத்து
இசைத்து அசைத்து அ(ச்) சுக்கிலம் – தசை தோலால்
எடுத்த பொய்க் கடத்தினைப் பொறுக்கும் இப் பிறப்பு அறுத்து
எனக்கு நித்த முத்தியைத் – தரவேணும்
பனைக் கரச் சினத்து இபத்தனைத் துரத்து அரக்கனைப்
பயத்தினில் பயப்படப் – பொரும் வேலா
பருப்பதச் செருக்கு அறத் துகைக்கும் முள் பதத்தினைப்
படைத்த குக்குடக் கொடிக் – குமரேசா
தினைப் புனப் பருப்பதத்தினில் குடிக் குறத்தியைச்
செருக்கு உறத் திருப் புயத்து – அணைவோனே
திருப் புரப் புறத்து இயல் திருத் தகுத்து நித்தல
திருத் திசைத் திருத்தணிப் – பெருமாளே.
English
kanaththaRap paNaiththapoR kazhaippuyath thanakkirik
kanaththaiyoth thumoyththamaik – kuzhalArthang
kaRuththamaik kayaRkaNiR karuththuvaith thoruththaniR
kazhaRpathath thaduththidaR – kaRiyAthE
inappiNik kaNaththinuk kiruppenath thuruththiyoth
thisaiththasaith thachukkilath – thasaithOlAl
eduththapoyk kadaththinaip poRukkumip piRappaRuth
thenakkunith thamuththiyaith – tharavENum
panaikkarac chinaththipath thanaiththurath tharakkanaip
payaththiniR payappadap – porumvElA
paruppathac cherukkaRath thukaikkumut pathaththinaip
padaiththakuk kudakkodik – kumarEsA
thinaippunap paruppathath thiniRkudik kuRaththiyaic
cherukkuRath thiruppuyath – thaNaivOnE
thiruppurap puRaththiyat Riruththakuth thuniththilath
thiruththisaith thiruththaNip perumALE.
English Easy Version
kanaththa aRap paNaiththa pon kazhaip puyath thanak kiri
kanaththai oththu moyththa maik – kuzhalAr tham
kaRuththa maik ka(N)Nil karuththu vaiththu oruththa nin
kazhal pathaththu aduththidaRku – aRiyAthE
inap piNik kaNaththinukku iruppu enath thuruththi oththu
isaiththu asaiththu a(c)chukkilam – thasai thOlAl
eduththa poyk kadaththinai poRukkum ip piRappu aRuththu
enakku niththa muththiyaith – tharavENum
panaik karac chinaththu ipaththanaith thuraththu arakkanaip
payaththinil payappadap – porum vElA
paruppathac cherukku aRath thukaikkum muL pathaththinaip
padaiththa kukkudak kodik – kumarEsA
thinaip punap paruppathaththinil kudik kuRaththiyaic
cherukku uRath thirup puyaththu – aNaivOnE
thirup purap puRaththu iyal thiruth thakuth thu niththala
thiruth thisaith thiruththaNip – perumALE.