திருப்புகழ் 262 குயில் ஒன்று (திருத்தணிகை)

Thiruppugal 262 Kuyilondru

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனனந் தனனத் தனனந் தனனத்
தனனந் தனனத் – தனதான

குயிலொன் றுமொழிக் குயினின் றலையக்
கொலையின் பமலர்க் – கணையாலே

குளிருந் தவளக் குலசந்த் ரவொளிக்
கொடிகொங் கையின்முத் – தனலாலே

புயல்வந் தெறியக் கடனின் றலறப்
பொருமங் கையருக் – கலராலே

புயமொன் றமிகத் தளர்கின் றதனிப்
புயம்வந் தணையக் – கிடையாதோ

சயிலங் குலையத் தடமுந் தகரச்
சமனின் றலையப் – பொரும்வீரா

தருமங் கைவனக் குறமங் கையர்மெய்த்
தனமொன் றுமணித் – திருமார்பா

பயிலுங் ககனப் பிறைதண் பொழிலிற்
பணியுந் தணிகைப் – பதிவாழ்வே

பரமன் பணியப் பொருளன் றருளிற்
பகர்செங் கழநிப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனனந் தனனத் தனனந் தனனத்
தனனந் தனனத் – தனதான

குயில் ஒன்று மொழிக் குயில் நின்று அலைய
கொலை இன்ப மலர்க் – கணையாலே

குளிரும் தவளக் குல சந்த்ர ஒளிக்
கொடி கொங்கையின் முத்து – அனலாலே

புயல் வந்து எறி அக்கடல் நின்று அலற
பொரும் மங்கையர் உக்க – அலராலே

புயம் ஒன்ற மிகத் தளர்கின்ற தனிப்
புயம் வந்து அணையக் – கிடையாதோ

சயிலம் குலையத் தடமும் தகரச்
சமன் நின்று அலைய – பொரும் வீரா

தரு மங்கை வனக் குற மங்கையர் மெய்த்
தனம் ஒன்றும் அணித் – திரு மார்பா

பயிலும் ககனப் பிறை தண் பொழிலில்
பணியும் தணிகைப் – பதி வாழ்வே

பரமன் பணியப் பொருள் அன்று அருளி
பகர் செம் கழநிப் – பெருமாளே.

English

kuyilon Rumozhik kuyinin Ralaiyak
kolaiyin pamalark – kaNaiyAlE

kuLirun thavaLak kulacanth ravoLik
kodikon gaiyinmuth – thanalAlE

puyalvan theRiyak kadanin RalaRap
poruman gaiyaruk – kalarAlE

puyamon Ramikath thaLarkin Rathanip
puyamvan thaNaiyak – kidaiyAthO

sayilang kulaiyath thadamun thakara
samanin Ralaiyap – porumveerA

tharuman gaivanak kuRaman gaiyarmeyth
thanamon RumaNith – thirumArbA

payilung kakanap piRaithaN pozhiliR
paNiyun thaNigaip – pathivAzhvE

paraman paNiyap poruLan RaruLiR
pakarseng kazhanip – perumALE.

English Easy Version

kuyil ondRu mozhik kuyil ninRu alaiya
kolai inpa malark – kaNaiyAlE

kuLirum thavaLak kula canthra oLik
kodi kongaiyin muththu – analAlE

puyal vanthu eRi akkadal ninRu alaRa
mporum mangaiyar ukka – alarAlE

puyam onRa mikath thaLarkinRa thanip
puyam vanthu aNaiyak – kidaiyAthO

sayilam kulaiyath thadamum thakara
saman ninRu alaiya – porum veerA

tharu mangai vanak kuRa mangaiyar meyth
thanam onRum aNith – thiru mArpA

payilum kakanap piRai thaN pozhilil
paNiyum thaNigaip – pathi vAzhvE

paraman paNiyap poruL anRu aruLi
pakar sem kazhanip – perumALE.