திருப்புகழ் 263 குருவி என (திருத்தணிகை)

Thiruppugal 263 Kuruviena

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தனத்தன தனன தனத்தன
தனன தனத்தன தனன தனத்தன
தனன தனத்தன தனன தனத்தன – தனதான

குருவி யெனப்பல கழுகு நரித்திரள்
அரிய வனத்திடை மிருக மெனப்புழு
குறவை யெனக்கரி மரமு மெனத்திரி – யுறவாகா

குமரி கலித்துறை முழுகி மனத்துயர்
கொடுமை யெனப்பிணி கலக மிடத்திரி
குலைய னெனப்புலை கலிய னெனப்பலர் – நகையாமல்

மருவு புயத்திடை பணிக ளணப்பல
கரிப ரிசுற்றிட கலைகள் தரித்தொரு
மதன சரக்கென கனக பலக்குட – னதுதேடேன்

வரிய பதத்தினி னருவி யிருப்பிடம்
அமையு மெனக்கிட முனது பதச்சரண்
மருவு திருப்புக ழருள எனக்கினி – யருள்வாயே

விருது தனத்தன தனன தனத்தன
விதமி திமித்திமி திமித திமித்திமி
விகிர்த டடுட்டுடு ரிரிரி யெனக்குகு – வெகுதாளம்

வெருவ முகிழ்த்திசை யுரகன் முடித்தலை
நெறுநெ றெனத்திசை யதிர அடைத்திட
மிகுதி கெடப்பொரு அசுரர் தெறித்திட – விடும்வேலா

அரிய திரிப்புர மெரிய விழித்தவன்
அயனை முடித்தலை யரியு மழுக்கையன்
அகில மனைத்தையு முயிரு மளித்தவ – னருள்சேயே


அமண ருடற்கெட வசியி லழுத்திவி
ணமரர் கொடுத்திடு மரிவை குறத்தியொ
டழகு திருத்தணி மலையில் நடித்தருள் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தனத்தன தனன தனத்தன
தனன தனத்தன தனன தனத்தன
தனன தனத்தன தனன தனத்தன – தனதான

குருவி எனப் பல கழுகு நரித் திரள்
அரிய வனத்து இடை மிருகம் எனப் புழு
குறவை எனக் கரி மரமும் எனத் திரி – உறவு ஆகா

குமரி கலித் துறை முழுகி மனத்துயர்
கொடுமை எனப் பிணி கலகமிட திரி
குலையன் எனப் புலை கலியன் எனப் பலர் – நகையாமல்

மருவு புயத்து இடை பணிகள் அ(ண்)ணப் பல
கரி பரி சுற்றிட கலைகள் தரித்து ஒரு
மதனசரக்கு என கனக பலக்குடன் – அது தேடேன்

வரிய பதத்தினின் அருவி இருப்பிடம்
அமையும் எனக்கு இடம் உனது பதச் சரண்
மருவு திருப்புகழ் அருள எனக்கு இனி – அருள்வாயே

விருது தனத்தன தனன தனத்தன
விதமி திமித்திமி திமித திமித்திமி
விகிர்த டடுட்டுடு ரிரிரி எனக் குகு என – வெகு தாளம்

வெருவ முகிழ்த்து இசை உரகன் முடித் தலை
நெறு நெறு என திசை அதிர அடைத்திட
மிகுதி கெடப் பொரு அசுரர் தெறித்திட – விடும் வேலா

அரிய திரிப்புரம் எரிய விழித்தவன்
அயனை முடித் தலை உரியும் மழுக் கையன்
அகிலம் அனைத்தையும் உயிரும் அளித்தவன் – அருள்சேயே

அமணர் உடல் கெட வசியில் அழுத்தி விண்
அமரர் கொடுத்திடும் அரிவை குறத்தியொடு
அழகு திருத்தணி மலையில் நடித்து அருள் – பெருமாளே.

English

kuruvi yenappala kazhuku nariththiraL
ariya vanaththidai miruka menappuzhu
kuRavai yenakkari maramu menaththiri – yuRavAkA

kumari kaliththuRai muzhuki manaththuyar
kodumai yenappiNi kalaka midaththiri
kulaiya nenappulai kaliya nenappalar – nakaiyAmal

maruvu puyaththidai paNika LaNappala
karipa risutRida kalaikaL thariththoru
mathana sarakkena kanaka palakkuda – nathuthEdEn

variya pathaththini naruvi yiruppidam
amaiyu menakkida munathu pathaccharaN
maruvu thiruppuka zharuLa enakkini – yaruLvAyE

viruthu thanaththana thanana thanaththana
vithami thimiththimi thimitha thimiththimi
vikirtha daduttudu ririri yenakkuku – vekuthALam

veruva mukizhththisai yurakan mudiththalai
neRune Renaththisai yathira adaiththida
mikuthi kedapporu asurar theRiththida – vidumvElA

ariya thirippura meriya vizhiththavan
ayanai mudiththalai yariyu mazhukkaiyan
akila manaiththaiyu muyiru maLiththava – naruLsEyE

amaNa rudaRkeda vasiyi lazhuththivi
Namarar koduththidu marivai kuRaththiyo
dazhaku thiruththaNi malaiyil nadiththaruL – perumALE.

English Easy Version

kuruvi enap pala kazhuku narith thiraL
ariya vanaththu idai mirukam enap puzhu
kuRavari enak kari maramum enath thiri – uRavu AkA

kumari kalith thuRai muzhuki manaththuyar
kodumai enap piNi kalakamida thiri
kulaiyan enap pulai kaliyan enap palar – nakaiyAmal

maruvu puyaththu idai paNikaL a(N)Nap pala
kari pari sutRida kalaikaL thariththu oru
mathanasarakku ena kanaka palakkudan – athu thEdEn

variya pathaththinin aruvi iruppidam
amaiyum enakku idam unathu pathac charaN
maruvu thiruppukazh aruLa enakku ini – aruLvAyE

viruthu thanaththana thanana thanaththana
vithami thimiththimi thimitha thimiththimi
vikirtha daduttudu ririri enak kuku ena – veku thALam

veruva mukizhththu isai urakan mudith thalai
neRu neRu ena thisai athira adaiththida
mikuthi kedap poru asurar theRiththida – vidum vElA

ariya thirippuram eriya vizhiththavan
ayanai mudith thalai uriyum mazhuk kaiyan
akilam anaiththriyum uyirum aLiththavan – aruLsEyE

amaNar udal keda vasiyil azhuththi viN
amarar koduththidum arivai kuRaththiyodu
azhaku thiruththaNi malaiyil nadiththu aruL – perumALE.