திருப்புகழ் 264 குலைத்து மயிர் (திருத்தணிகை)

Thiruppugal 264 Kulaiththumayir

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்த தனத் தனத்த தனத்
தனத்த தனத் தனத்த தனத்
தனத்த தனத் தனத்த தனத் – தனதான

குலைத்து மயிர்க் கலைத்து வளைக்
கழுத்து மணித் தனப்பு ரளக்
குவித்த விழிக் கயற்சு ழலப் – பிறைபோலக்

குனித்த நுதற் புரட்டி நகைத்
துருக்கி மயற் கொளுத்தி யிணைக்
குழைச்செ வியிற் றழைப்ப பொறித் – தனபாரப்

பொலித்து மதத் தரித்த கரிக்
குவட்டு முலைப் பளப்ப ளெனப்
புனைத்த துகிற் பிடித்த இடைப் – பொதுமாதர்

புயத்தில் வளைப் பிலுக்கில் நடைக்
குலுக்கி லறப் பசப்பி மயற்
புகட்டி தவத் தழிப்ப வருக் – குறவாமோ

தலத்த நுவைக் குனித்தொ ருமுப்
புரத்தை விழக் கொளுத்தி மழுத்
தரித்து புலிக் கரித்து கிலைப் – பரமாகத்

தரித்து தவச் சுரர்க்கண் முதற்
பிழைக்க மிடற் றடக்கு விடச்
சடைக்க டவுட் சிறக்க பொருட் – பகர்வோனே

சிலுத்த சுரர்க் கெலித்து மிகக்
கொளுத்தி மறைத் துதிக்க அதிற்
செழிக்க அருட் கொடுத்த மணிக் – கதிர்வேலா

தினைப்பு னமிற் குறத்தி மகட்
டனத்தின் மயற் குளித்து மகிழ்த்
திருத்த ணியிற் றரித்த புகழ்ப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்த தனத் தனத்த தனத்
தனத்த தனத் தனத்த தனத்
தனத்த தனத் தனத்த தனத் – தனதான

குலைத்து மயிர்க் கலைத்து வளைக்
கழுத்து மணித் தனப்புரளக்
குவித்த விழிக் கயற்சுழல – பிறைபோலக்

குனித்த நுதற் புரட்டி நகைத்துருக்கி
மயற் கொளுத்தி இணைக்
குழைச்செவியில் தழைப்ப பொறித் – தனபாரப்

பொலித்து மதத் தரித்த கரிக்
குவட்டு முலைப் பளப்பளெனப்
புனைத்த துகிற் பிடித்த இடைப் – பொதுமாதர்

புயத்தில் வளைப் பிலுக்கில் நடைக்
குலுக்கில் அறப் பசப்பி மயற்
புகட்டி தவத்து அழிப்பவருக்கு – உறவாமோ

தலத்த நுவைக் குனித்தொரு முப்புரத்தை
விழக்கொளுத்தி மழுத்தரித்து
புலிக் கரித்துகிலைப் – பரமாகத்

தவச் சுரர்க்கண் முதற்
பிழைக்க மிடற்றடக்கு விடச்
சடைக்கடவுட் சிறக்க பொருள் – பகர்வோனே

சிலுத்த சுரர்க் கெலித்து மிகக்
கொளுத்தி மறைத் துதிக்க அதிற்
செழிக்க அருட் கொடுத்த மணிக் – கதிர்வேலா

தினைப்பு னமிற் குறத்தி மகள்
தனத்தின் மயற் குளித்து மகிழ்த்
திருத்தணியில் தரித்த புகழ்ப் – பெருமாளே.

English

kulaiththu mayirk kalaiththu vaLaik
kazhuththu maNith thanappu raLak
kuviththa vizhik kayaRchu zhalap – piRaipOlak

kuniththa nuthaR puratti nakaith
thurukki mayaR koLuththi yiNaik
kuzhaicche viyit Razhaippa poRith – thanapArap

poliththu mathath thariththa karik
kuvattu mulaip paLappa Lenap
punaiththa thukiR pidiththa idaip – pothumAthar

puyaththil vaLaip pilukkil nadaik
kulukki laRap pasappi mayaR
pukatti thavath thazhippa varuk – kuRavAmO

thalaththa nuvaik kuniththo rumup
puraththai vizhak koLuththi mazhuth
thariththu pulik kariththu kilaip – paramAkath

thariththu thavac churarkkaN muthaR
pizhaikka midat Radakku vidac
chadaikka davut chiRakka porut – pakarvOnE

siluththa surark keliththu mikak
koLuththi maRaith thuthikka athiR
chezhikka arut koduththa maNik – kathirvElA

thinaippu namiR kuRaththi makat
tanaththin mayaR kuLiththu makizhth
thiruththa Niyit Rariththa pukazhp – perumALE.

English Easy Version

kulaiththu mayirk kalaiththu vaLaik
kazhuththu maNith thanappuraLak
kuviththa vizhik kayaRchuzhala – piRaipOlak

kuniththa nuthaR puratti nakaiththurukki
mayaR koLuththi iNaik
kuzhaiccheviyil thazhaippa poRith – thanapArap

poliththu mathath thariththa karik
kuvattu mulaip paLappaLenap
punaiththa thukiR pidiththa idaip – pothumAthar

puyaththil vaLaip pilukkil nadaik
kulukkil aRap pasappi mayaR
pukatti thavaththu azhippa varukk – uRavAmO

thalath thanuvaik kuniththoru muppuraththai
vizhakkoLuththi mazhuth
thariththu pulik kariththukilaip – paramAkath

thariththu thavac churarkkaN muthaR
pizhaikka midatRadakku vidac
chadaikkadavut chiRakka poruL – pakarvOnE

siluththa surark keliththu mikak
koLuththi maRaith thuthikka athiR
chezhikka arut koduththa maNik – kathirvElA

thinaippu namiR kuRaththi makaL
thanaththin mayaR kuLiththu makizhth
thiruththaNiyil thariththa pukazhp – perumALE.