திருப்புகழ் 265 குவளைக் கணை (திருத்தணிகை)

Thiruppugal 265 Kuvalaikkanai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் – தனதான

குவளைக் கணைதொட் டவனுக் குமுடிக்
குடையிட் டகுறைப் – பிறையாலே

குறுகுற் றஅலர்த் தெரிவைக் குமொழிக்
குயிலுக் குமினித் – தளராதே

இவளைத் துவளக் கலவிக் குநயத்
திறுகத் தழுவிப் – புயமீதெ

இணையற் றழகிற் புனையக் கருணைக்
கினிமைத் தொடையைத் – தரவேணும்

கவளக் கரடக் கரியெட் டலறக்
கனகக் கிரியைப் – பொரும்வேலா

கருதிச் செயலைப் புயனுக் குருகிக்
கலவிக் கணயத் – தெழுமார்பா

பவளத் தரளத் திரளக் குவைவெற்
பவையொப் புவயற் – புறமீதே

பணிலத் திரள்மொய்த் ததிருத் தணிகைப்
பதியிற் குமரப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் – தனதான

குவளைக் கணை தொட்ட அவனுக்கு முடிக்
குடை இட்ட குறைப் – பிறையாலே

குறுகு உற்ற அலர்த் தெரிவைக்கு மொழிக்
குயிலுக்கும் இனித் – தளராதே

இவளைத் துவளக் கலவிக்கு நயத்து
இறுகத் தழுவிப் – புயம் மீதே

இணை அற்ற அழகில் புனையக் கருணைக்கு
இனிமைத் தொடையைத் – தர வேணும்

கவளக் கரடக் கரி எட்டு அலறக்
கனகக் கிரியைப் – பொரும் வேலா

கருதிச் செயலைப் புயனுக்கு உருகிக்
கலவிக்கு அணய அத்து – எழு மார்பா

பவளத் தரளத் திரளக் குவை வெற்பு
அவை ஒப்பு வயல் – புறம் மீதே

பணிலத் திரள் மொய்த்த திருத்தணிகைப்
பதியில் குமரப் – பெருமாளே.

English

kuvaLaik kaNaithot tavanuk kumudik
kudaiyit takuRaip – piRaiyAlE

kuRukut RAlarth therivaik kumozhik
kuyiluk kuminith – thaLarAthE

ivaLaith thuvaLak kalavik kunayath
thiRukath thazhuvip – puyameethe

iNaiyat RazhakiR punaiyak karuNaik
kinimaith thodaiyaith – tharavENum

kavaLak karadak kariyet talaRak
kanakak kiriyaip – porumvElA

karuthic cheyalaip puyanuk kurukik
kalavik kaNayath – thezhumArpA

pavaLath tharaLath thiraLak kuvaiveR
pavaiyop puvayaR – puRameethE

paNilath thiraLmoyth thathiruth thaNikaip
pathiyiR kumarap – perumALE.

English Easy Version

kuvaLaik kaNai thotta avanukku
mudik kudai itta kuRaip – piRaiyAlE

kuRuku utRa alarth therivaikku mozhik
kuyilukkum inith – thaLarAthE

ivaLaith thuvaLak kalavikku nayaththu
iRukath thazhuvip – puyam meethE

iNai atRa azhakil punaiyak karuNaikku
inimaith thodaiyaith – thara vENum

kavaLak karadak kari ettu alaRak
kanakak kiriyaip – porum vElA

karuthic cheyalaip puyanukku urukik
kalavikku aNaya aththu – ezhu mArpA

pavaLath tharaLath thiraLak kuvai veRpu
avai oppu vayal – puRam meethE

paNilath thiraL moyththa ThiruththaNigaip
pathiyil kumarap – perumALE.