திருப்புகழ் 268 கொந்துவார் குரவடி (திருத்தணிகை)

Thiruppugal 268 Kondhuvarkuravadi

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்து தானன தனதன தனதன
தந்து தானன தனதன தனதன
தந்து தானன தனதன தனதன – தனதான

கொந்து வார்குர வடியினு மடியவர்
சிந்தை வாரிஜ நடுவினு நெறிபல
கொண்ட வேதநன் முடியினு மருவிய – குருநாதா

கொங்கி லேர்தரு பழநியி லறுமுக
செந்தில் காவல தணிகையி லிணையிலி
கொந்து காவென மொழிதர வருசம – யவிரோத

தந்த்ர வாதிகள் பெறவரி யதுபிறர்
சந்தி யாதது தனதென வருமொரு
சம்ப்ர தாயமு மிதுவென வுரைசெய்து – விரைநீபச்

சஞ்ச ரீகரி கரமுரல் தமனிய
கிண்கி ணீமுக விதபத யுகமலர்
தந்த பேரருள் கனவிலு நனவிலு – மறவேனே

சிந்து வாரமு மிதழியு மிளநவ
சந்த்ர ரேகையு மரவமு மணிதரு
செஞ்ச டாதரர் திருமக வெனவரு – முருகோனே

செண்ப காடவி யினுமித ணினுமுயர்
சந்த னாடவி யினுமுறை குறமகள்
செம்பொ னூபுர கமலமும் வளையணி – புதுவேயும்

இந்து வாண்முக வனசமு ம்ருகமத
குங்கு மாசல யுகளமு மதுரித
இந்த ளாம்ருத வசனமு முறுவலு – மபிராம

இந்த்ர கோபமு மரகத வடிவமு
மிந்த்ர சாபமு மிருகுழை யொடுபொரு
மிந்த்ர நீலமு மடலிடை யெழுதிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தந்து தானன தனதன தனதன
தந்து தானன தனதன தனதன
தந்து தானன தனதன தனதன – தனதான

கொந்துவார் குரவடியினும் அடியவர்
சிந்தை வாரிஜ நடுவினும் நெறிபல
கொண்ட வேதநன் முடியினும் மருவிய – குருநாதா

கொங்கி லேர்தரு பழநியில் அறுமுக
செந்தில் காவல தணிகையி லிணையிலி
கொந்து காவென மொழிதர வரு – சமயவிரோத

தந்த்ரவாதிகள் பெறவரியது பிறர்
சந்தியாதது தனதென வருமொரு
சம்ப்ர தாயமும் இதுவென வுரைசெய்து – விரைநீப

சஞ்சரீகரிகரம் முரல் தமனிய
கிண்கிணீமுக இதபத யுகமலர்
தந்த பேரருள் கனவிலு நனவிலு – மறவேனே

சிந்து ஆரமும் இதழியும் இளநவ
சந்த்ர ரேகையும் அரவமும் அணிதரு
செஞ் சடாதரர் திருமக வெனவரு – முருகோனே

செண்பக அடவியினும் இதணினும் உயர்
சந்தனஅடவியினும் உறை குறமகள்
செம்பொன் நூபுர கமலமும் வளையணி – புது வேயும்

இந்து வாண்முக வனசமும் ம்ருகமத
குங்கு மாசல யுகளமும் மதுரித
இந்தள அம்ருத வசனமும் முறுவலும் – அபிராம

இந்த்ர கோபமும் மரகத வடிவமும்
இந்த்ர சாபமும் இருகுழை யொடுபொரும்
இந்த்ர நீலமும் மடலிடை யெழுதிய – பெருமாளே.

English

kondhuvAr kura vadiyinum adiyavar
chindhai vArija naduvinu neRipala
konda vEdha nan mudiyinu maruviya – gurunAthA

kongil Ertharu pazhaniyil aRumuga
sendhil kAvala thaNigaiyil iNaiyili
kondhu kAvena mozhithara varu samaya – virOdha

thanthra vAdhigaL peRa ariyadhu piRar
sandhiyAdhadhu thanadhena varum oru
sampradhAyamum idhu ena urai seydhu – viraineepa

sanchareekari kara mural dhamaniya
kiN kiNee muka idha padhayuga malar
thandha pEr aruL kanavilum nanavilum – maravEnE

sindhu vAramum idhazhiyum iLa nava
chandhra rEkaiyum aravamum aNi tharu
senchadAdharar thirumaga venavarum – murugOnE

seNpa gAdavi yiNum idhaNinum uyar
sandha nAdavi yinum uRai kuRamagaL
sempo nUpura kamalamum vaLai aNi – pudhu vEyum

indhu vAN muka vanajamum mrigamadha
kungu mAchala yugaLamum madhuritha
indhaLAmrutha vachanamum muRuvalum – abirAmA

indhra gOpamum marakatha vadivamum
indhra chApamum irukuzhaiyodu porum
indhra neelamum madal idai ezhudhiya – perumALE.

English Easy Version

kondhuvAr kura vadiyinum adiyavar
chindhai vArija naduvinum neRipala
konda vEdha nan mudiyinum maruviya – gurunAthA

kongil Ertharu pazhaniyil aRumuga
sendhil kAvala thaNigaiyil iNaiyili
kondhu kAvena mozhithara varu samaya – virOdha

thanthra vAdhigaL peRa ariyadhu piRar
sandhiyAdhadhu thanadhena varum oru
sampradhAyamum idhu ena urai seydhu – viraineepa

sanchareekari kara mural dhamaniya
kiN kiNee muka idha padhayuga malar
thandha pEr aruL kanavilum nanavilum – maravEnE

sindhu vAramum idhazhiyum iLa nava
chandhra rEkaiyum aravamum aNi tharu
senchadAdharar thirumaga venavarum – murugOnE

seNpa gAdavi yiNum idhaNinum uyar
sandha nAdavi yinum uRai kuRamagaL
sempo nUpura kamalamum vaLai aNi – pudhu vEyum

indhu vAN muka vanajamum mrigamadha
kungu mAchala yugaLamum madhuritha
indhaLAmrutha vachanamum muRuvalum – abirAmA

indhra gOpamum marakatha vadivamum
indhra chApamum irukuzhaiyodu porum
indhra neelamum madal idai ezhudhiya – perumALE.